முத்துக்கருப்பன்

முன்கதை சுருக்கம்
.

நகரத்தில் வசிக்கும் சரவணன் தன் மகன்கள் இராஜா, ரகு, ஆகியோருடன் தங்கி கிராமத்தில் இருந்த போது அங்குள்ள ஒரு மலைக்குச் செல்கிறார்கள். அந்த மலையில் புதையல் இருப்பதாக அந்த கிராம மக்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள் . அந்தமலையில் பல ரகசியங்கள் அடங்கியிருப்பதை தெரிந்து கொள்கிறார்கள் அதை தெரிந்து கொள்ளும் அவர்கள் . அவற்றை வெளிக்கொணர முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சியின் போது, கிராமத்தில் அனுபவம் வாய்ந்த சிலருடன் மலைப்பகுதிக்கு வந்து மலையில் புதையல் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று பார்க்கிறார்கள்..

கிராமத்தில் இருந்து வந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடி இருந்தனர்..அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை செய்தனர் .இருந்தாலும் ஏற்கனவே திட்டமிட்டபடி வரகு வைக்கோல் , மற்றும் மூலிகை செடிகளின் காய்ந்த கொடிகளைக்கொண்டு மலைப்பகுதியின் கீறல் போன்ற இடங்களில் உள்ளே வைக்கும் பணிகளை செய்து கொண்டு இருந்தனர்.
கல்மூக்கன் , கொல்ல ஆறுமுகம் இருவரும் சற்று தள்ளி நின்று தனியாக கற்பாறைகளை எப்படி எளிதாக நகர்த்துவது என்று யோசித்துக் கொண்டு இருந்தார்கள்.

ஏற்கனவே கீறல் போன்ற கற்பாறைகள் இருத்த இடத்தில் இருந்து நூறு அடி தூரத்தில் ஒரு சிறிய கல்தூண் உடைந்து சிதைந்த நிலையில் இருந்தது ..கொல்ல ஆறுமுகம் அருகில் இருந்த ஒருவரை அழைத்து அந்த கல்தூணை சுற்றி உள்ள மண்ணை அகற்றச் சொன்னார்.


அந்த இடத்தில் மண்ணை அகற்றிய போது கீழே பாறைகள் இருந்தன . அந்த இடத்தை சுற்றி இன்னும் மண்ணை அகற்றியபோது பாறையில் சறுக்கலான உறுதியான பாதை இருப்பது தெரியவந்தது .


அந்த இடத்தில் இருந்து மலை அடிவாரம் வரை அந்தப் பாதை தெரிந்த. அந்த இடங்களில் எல்லாம் மண்ணை அகற்றும் பணி நடந்தது .அந்த பாதை ஏற்கனவே மலைப்பகுதியின் கீறல் இருந்த பகுதியில் முடிவடைந்தன.
இப்போது வெளியில் இருந்து வந்தவர்கள் தங்கள் கொண்டு வந்த வாகனங்கள் போன்றவற்றை இந்த வழியாக அந்தமலையின் முகடுவரை செல்வதற்கு மிகத்தெளிவான பாதையாக இருக்கலாம் என்பதை கொல்லஆறுமுகம், கல்மூக்கன் கலந்து பேசி முடிவு செய்தனர்.


இதற்குள் பாறைக் கீறல்களில் வரகுவைக்கோல் வைக்கும் வேலையை அங்கே வந்தவர்கள் செய்து கொண்டு இருந்தனர். அங்கு உள்ள அனுபவம் வாய்ந்த சிலர் சில அடி தூரம் சென்று அங்கிருந்து அந்த இடத்தை பார்த்தனர்.
அவர்களுக்கு அந்த இடத்தின் தன்மை புரியத் தொடங்கியது . பாறைகளை எளிதாக நகர்த்தி விட்டால் உள்ளே சென்று பார்த்து விடலாம். மலையின் அடிவாரப் பகுதியில் மலையைக் குடைந்து அங்கே பல பொருட்களை மறைத்துவைத்திருக்கலாம் . என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டது.


பாறையை நகர்த்துவது அல்லது உடைப்பது இதில் எது சரியாக இருக்கும் என்பதில் அவர்கள் மற்றவர்களுடன் ஆலோசனை செய்துகொண்டு இருந்தனர்..அப்போது அவர்களது ஆலோசனையில் ஆட்டுக்கார அமாவாசையும் கலந்து கொண்டார்…


இதற்கிடையில் பாறைகளுக்கு இடையே வரகு வைக்கோல் வைக்கும் வேலையை அவர்களுடன் வந்தவர்கள் செய்துமுடித்தனர் .பின்னர் அனைவரும் முடிவு செய்து அந்த வரகு வைக்கோலுக்கு தீ வைக்கப்பட்டது..


தீப்பிடித்த இடங்களில் அதன் வெப்பம் தாங்காமல் அதில் இருந்த ஈயம் போன்ற பொருள் உருகி தண்ணீர் போல் கீழே வடிந்தது.. அதன் பின்னர் கற்களின் பிடிப்பு குறைந்தது. இப்போது சில கற்களை எளிதாக நகர்த்தி எடுக்க முடிந்தது . அந்த கற்கள் தகடுகள் போல் உடைத்து இணைப்பு பாறைகளாக வைத்து குறிப்பிட்ட ஈயத்தை வைத்து கலவை உருவாக்கி கட்டியுள்ளது தெரியவந்தது .


இப்போது அனைத்து ஆட்களையும் வைத்து அந்த கற்களை அகற்றினர் .ஏற்கனவே வந்த கற்பாறை பாதை சற்று சரிவாகச் சென்றது .அந்த இடம் கொஞ்சம் விசாலமாக இருந்தது .. அந்த இடத்தில் இருந்து பல அடி தூரம் பக்கவாட்டில் அதே அளவு இடம் இருந்தது . வெளிச்சம் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை .


உள்ளே வந்தவர்கள் தீப்பந்த உதவியுடன் தான் அங்கே இருக்க முடியும். ஆனால் பொருட்கள் ஏதும் தென்படவில்லை . அதனால் ஒருசிலர் மட்டும் அந்த இடத்தின் உள் பகுதிக்கு சென்று பார்வையிட்டார்கள்..


அந்த இடத்தின் மலை அடிவார உள்பகுதியில் கல்மூக்கன் , கொல்ல ஆறுமுகம் மட்டும் அந்த இடத்தை நன்கு பார்வையிட்டனர். கல்மூக்கன் தனது உதவியாளரிடம் இருந்து கல் உளியைப் பெற்று அந்த மலையின் சில இடங்களை மெல்ல தட்டிப் பார்த்தார்.


எல்லா இடங்களில் பாறைகளில் நன்கு தட்டிப்பர்த்தும் ஒருவித்தியாசத்தையும் அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை . அப்போது கொல்ல ஆறுமுகம் வடக்குப்பகுதியில் ஒருஇடத்தில் மலையின் உள்பகுதியில் இருந்த பாறையில் ஓரிடத்தில் தட்டிப்பார்த்தார். அந்த இடத்தில் வித்தியாசமான சத்தம் கேட்டது.


உடனே கொல்ல ஆறுமுகம் கல்மூக்கனை அந்த இடத்திற்கு வரும்படி கூப்பிட்டார். பின்னர் அவரிடம் ஒருகுறிப்பிட்ட இடத்தை காட்டி தட்டிப்பார்க்கச் சொன்னார். கல்மூக்கன் தன்னிடம் இருத்த உளியால் தட்டிப்பார்க்க வித்தியாசமான சப்தத்தை உணர்ந்தார்..
குறிப்பிட்ட அந்த இடத்தை தட்டிப்பார்த்து சந்தேகப்படும்படியான இடத்தை கோடு போட்டு வைத்தனர்..ஆட்களை வரவழைத்து குறிப்பிட்ட அந்த இடத்தைமட்டும் உடைக்காமல் எடுக்க முடியுமா என்று யோசித்தனர்..


அந்த இடத்தில் அனுபவம் வாய்ந்த கல் தச்சர்களைக்கொண்டு உடைக்க முயன்றனர்.. அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அந்த இடத்தில் பாறை சற்று அசைவது போன்று தெரிந்தது.அதைத்தொடர்ந்து அந்த இடத்தில் இருந்த கற்பாறையை தள்ளியும் நகர்த்தியும் உடைக்கவும் முயற்சிகள் செய்துகொண்டிருந்தனர்.
ஆனால் பாறை கொஞ்சம் கூட அசைந்த பாடில்லை. .உடனே கல்மூக்கனும், கொல்ல ஆறுமுகமும் சேர்ந்து மற்றவர்களை விலகி இருக்கும்படி கூறிவிட்டு ,மீண்டும் கற்பாறை மீது உளி, சுத்தியல் போன்றவற்றால் மெல்ல ஒவ்வொரு அங்குலமாக தட்டிப்பார்த்து அதன் சப்தத்தை வைத்து ஏதோ பேசிக்கொண்டார்கள்.


அதன் பின்னர் சிலரை வைத்து பாறையை ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கம் நோக்கி பலமாக தள்ளும்படி கூறினார்கள்.. அதன்படி நாலைந்து பேர் சேர்ந்து பாறையை ஒருபக்கத்தில் இருந்து மறு பக்கத்தை நோக்கித் தள்ளினார்கள்.
இவ்வாறு பலமுறை மாறிமாறி தள்ளி சோர்ந்து போனபின் அடுத்து என்ன செய்யலாம் என்று முடிவு செய்து , மீண்டும் சுத்தியல், மற்றும் உளியால் பாறையின் வித்தியாசமான சப்தம் வந்த பகுதியில் அருகில் தட்டினர் . பலமாக தட்டியபின்னர் அந்த பகுதியின் ஓரிடத்தில் இருந்து சிறிது பூச்சு மண் விழுவது தெரிந்தது .


கல்மூக்கனுக்கும் , கொல்ல ஆறுமுகத்துக்கும் இப்போது புதிய நம்பிக்கை ஏற்பட்டது. மீண்டும் பக்கவாட்டு பாறைகளில் கோடு போல் தட்டிக்கொண்டே வந்தனர்,.அதன்பின்னர் அருகேயுள்ள ஆட்களை அழைத்து பாறையை தள்ளி நகர்த்தும்படி கூறினார்கொல்ல ஆறுமுகம் ..


இப்போது பாறை சற்று நகர்வது போல் இருந்தது, விடாது முயற்சித்ததும் பாறை சற்று நகர்ந்து சென்றதும் இடைவெளி கிடைத்தது. மீண்டும் முயற்சித்து பாறையை அனைவரும் சேர்ந்து நகர்த்தினர்.


உள்ளே ஒரே இருட்டு எதுவும் தெரியவில்லை உடனடியாக தீப்பந்தத்தை ஏற்றி உள்ளே பார்த்தனர் .உள்ளே பார்த்தவர்களுக்கு மயக்கமே வரும் போல் இருந்தது .
தொடரும

Share.

Leave A Reply