
கட்டுரை
‘ ‘புலியை முறத்தால் விரட்டியவர்கள்” நம் சங்க கால பெண்கள். வாள் எடுத்து போர் தொடுத்து நாட்டைக் காத்தவர்கள் அரச குடும்ப பெண்கள் .
”கொக்கென்று நினைத்தாயோ” என்று முனிவரையே எதிர்த்துப்பெசியவள் பத்தினிப் பெண் .
கெளரவர் சபையில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தட்டிக் கேட்க ஒரு ஆடவரும் இல்லையா என கொதித்து எழுந்து கேட்டவள் பாஞ்சாலி .
தனது கணவன் கொலையுண்டதைக் கண்டு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுடன் வாதாடி மதுரையை எரித்தவள் கண்ணகி .
தனது கணவர் உயிரை எடுத்துச் சென்ற எமனிடமே வாதாடி தனது உயிரை மீட்டி வந்தவள் சாவித்திரி .
இப்படி தைரியமான பெண்கள் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெருமை.”மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்தோம் ”
பேதை , பொதும்பை, மங்கை, மடந்தை ,அரிவை,தெரிவை, பேரிளம் பெண் என்ற ஏழு பருவங்களிலும் பெண்ணைப் போற்றி கொண்டாடுவதே தமிழர் கலாச்சாரம் .
”அடுப்பூதும்” பெண்களுக்கு படிப்பு எதற்கு ”என்ற காலம் மாறி இன்று
ஏட்டையும்பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டர்
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் – என்ற பாரதியின் வரிக்கு தகுந்தபடி இன்றைய பெண்கள் படித்து பட்டங்கள் வாங்கி எல்லா துறைகளிலும் கால் பதித்து விட்டனர்.
கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் நிலை மாறி இன்று பெண்களைப் போற்றி ஆணுக்கு இணையாக படிக்க வைத்திருப்பதால் பெண்கள் இன்று மென்மேலும் போற்றப் படுகிறார்கள் .
எல்லா விதத்திலும் கால் பதிக்கும் பெண்கள் சில ஆபத்துக்களையும் சந்திக்க நேர்கிறது ,.
அவள் தன் முறைப்பால் ஆடவரை விலகச் செய்வதும், தனது நகத்தையே ஆயுதமாக பயன்படுத்துவதையும் பெண்கள் ஆயுதமாக கொண்ட வரலாறுகளும் உண்டு .
அப்படிப்பட்ட வலிமையான பெண்கள் இன்று கராத்தே கற்று தற்காப்பு கலையால் தன்னைக் காத்துக் கொள்கிறார்கள் .
நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் பார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மைமாதர் திறம்புவது தில்லையாம்
என்ற பாரதி / மேலும் கூறுகிறார்….
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேறவும்
ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நாங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டிலோர் போனதில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம் -என்ற பாரதியின் வரிகள் இன்று நனவாகி பெண்கள் புதுமைகள் படைத்து வருகிறார்கள்.
பெண்களுக்கு வலிமை கல்வியும் கூர்மையான புத்தியுமே வலிமை சேர்க்கிறது தைரியமான பெண்களால் நாடு தலைநிமிர்கிறது .அனைவருக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள்