தேங்காய்பூ
தேங்காய் பூ பல அற்புத நன்மைகளைக் கொண்ட ஒரு இயற்கையின் பரிசு.


தேங்காய்பூ என்பது நன்கு முற்றிய தேங்காயின் இருந்து உண்டாகிய தேங்காயின் கருவளர்ச்சி தான் இந்த தேங்காய் பூ.

நாம் பொதுவாக தேங்காயின் பூவில் அப்படி என்ன இருக்கிறது. என்று நீங்கள் கேட்கலாம்? தேங்காய் , தேங்காய் தண்ணீர் , இளநீரில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கிறதோ அதை விட பலமடங்கு அதிகமாக தேங்காய் பூவில் ஊட்டச்சத்துக்கள் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது.

தேங்காய்பூவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன அதில் உள்ள மூலக்கூறுகள் பல பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய கொடிய நோய்களில் இருந்து நம்மை காக்கும் தன்மை கொண்டது.

இந்த தேங்காய்ப்பூ பருவகால நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. மன அழுத்தம் , அஜீரணக் கோளாறு , நீரிழிவு, இதய நோய், தைராய்டு, புற்றுநோய் , உடல் எடை குறைவு, சிறுநீரக பிரச்சனை இவ்வாறு பல நோய்களுக்கு இந்த தேங்காய்ப்பூ மருந்தாக அமைகிறது.

உடல் எடை குறைவதற்கும் இளமையாக பொலிவுடன் இருப்பதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கிறது. இன்னும் பல நன்மைகளை கொண்ட இத்தகைய தேங்காய் பூ இயற்கையான பொருள்களை நாமும் அவ்வப்போது உண்டு நல்ல பயன்களைப் பெற வேண்டும்.
— ச.ம.பால கிருஷ்ணன்.

                           பழமொழியும் அதன் விளக்கமும் 
                         "அஞ்சும் மூன்றும் உண்டானால்
                         அறியாப் பெண்ணும் சமைக்கும்"
பழமொழி நாமறிந்த விளக்கம் :-
                   5 சமையல் பொருட்களும் 3 சமையல் தேவைகளும் அருகில் இருந்தால் ஒன்றும் அறியாத சிறு பெண் கூட எளிதில் சமைத்து விடுவாள் என்பது நாம் அறிந்த  விளக்கம் ஆகும். 

உண்மையான விளக்கம் :-
ஐந்து என்பது சமையலுக்கு பயன்படும் மிளகு, உப்பு, கடுகு, தனியா, மற்றும் புளி மூன்று என்பது நீர், நெருப்பு, விறகு இது அனைத்தும் இருந்தால் சமையல் அறியாத பெண்ணும் கூட சமையல் கற்றுக் கொள்வார் என்பது பொருளாகும்

— பிரேமா பால கிருஷ்ணன்.
                            அழகுக் குறிப்பு 
                        முகம் சுருக்கம் நீங்க 
          முகத்தில் தோன்றும் சுருக்கங்களை கட்டுப்படுத்த தினமும் முகத்தில் பால் தடவ வேண்டும். 
        இது முகச்சுருக்கத்தைக் கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது தினமும் பாலுடன் அரை துண்டு வாழைப்பழத்தை சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ முகம் சுருக்கங்கள் மறைந்து விடும்
— பிரேமா பாலகிருஷ்ணன்

Share.

Leave A Reply