சுவைகள் என வரும்போது ஆறு சுவைகள் உள்ளன .துவர்ப்பு,புளிப்பு,இனிப்பு,காரம்,கசப்பு,உப்பு என்பனவாகும்.புரதசத்து-பால்,பருப்பு வகைகளில் உள்ளது.மாவுசத்து-கிழங்குகள்,தானியங்களில் உள்ளது.கொழுப்புச்சத்து-பால், தயிர், வெண்ணெய்,நெய்,எண்ணெய், முட்டை,மீன் ,இறைச்சி வகைகளில் உள்ளது.உலோகச்சத்து -கால்சியம்,சுண்ணாம்பு, பொட்டாசியம்,இரும்பு,போன்றவைகளில் உள்ளது.நீர்ச்சத்து-குடிநீர்,(குடிநீரை கொக்கக வைத்து ஆறியபின் குடிக்க வேண்டும்)வைட்டமின்-உயிர் சத்தாகிய வைட்டமின்களை ஏ,பி,சி,டி,இ ,கே என்று பல வகைகளில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது .அருகம்புல்லின் பயன்கள்அருகம் புல் முதலில் தோன்றிய செடி.முதல் கடவுளாகிய விநாயகருக்கு உகந்தது. அருகம் பிள்ளை முப்பது கிராம் அளவுக்கு அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்த மலம் குணமாகும். நகச் சுற்று ஏற்பட்டால் மஞ்சள் ,அருகம்புல், சிறிது சுண்ணாம்பு அரைத்து நகச் சுற்றில் பூசினால் குணமாகும்.அருகம் புல் சாறு தினசரி குடிப்பதால் நோய் ஏற்றிப்பு சக்தி கூடி நோய் வரும் முன் காக்கவல்லது. அருகம்புல்,அதிமதுரம்,மிளகு,சீரகம்,சித்தரத்தை,மாதுளம்பூ சேர்த்து கசாயம் வைத்துக் குடித்தால் வெட்டவாயு தொல்லையில் இருந்து விடுபடலாம். அன்னத்துடன் அரைக்கீரை சமைத்து நெய் விட்டு சாப்பிடும் போது வலிமை கூடுகிறது.சீரண சக்தி எளிதாகிறது.சளி,காய்ச்சல்,டைபாய்டு குணமாகும் தாய்ப்பால் பெருகும்.அகத்திக்கீரைஅகத்திக்கீரை உணவுடன் சாப்பிடும்போது வயிற்றில் உள்ள…
Author: admin
வ.உ.சி. யின் பேரன் தமிழ்வாணன் உடன் ஒரு கலந்துரையாடல்.இந்தியா சுதந்திரம் அடைவதற்காக தமது காலத்தில் போராட்ட களத்தில் முன்னின்று விடுதலை பெற்றுத் தந்தவர்களில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் முதன்மை பெறுகிறார்கள். இந்திய வரலாற்றில் என்றும் நிலையான இடத்தில் உள்ளார்கள். அவரது மனைவி வழித்தோன்றலில் மு.நா.பா.தமிழ்வாணன் அவர்களும் ஒருவர்.வ.உ.சி .க்குபேரன் முறையாவார். விவசாயத்துறையில் முதுநிலை பட்டத்துடன் ஆராய்ச்சி படிப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.அதோடு மிகச் சிறந்த இயற்கை ஆர்வலர் ஆவார்.இந்திய ஆராய்ச்சித் துறையில்,விவசாய பல்கலைக்கழத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிகள் செய்து வருகிறார்.கோவை வடவள்ளி அருகே சிறுவாணி நகரில் வசித்து வரும் திரு தமிழ்வாணனை சந்திப்பதற்கு ஸ்ரீ ஐசுவரியம் இதழ் ஆசிரியர் சோம.சந்திரன்,செந்தமிழ் வாணி ச.மல்லிகா இருவரும் அவரது இல்லம் நோக்கி சென்றோம். இயற்கை ஆர்வலர் மரங்களை நேசிப்பவர் என்பதை அவரது இல்லம் சென்றவுடன் தெரிந்து கொண்டோம் .அவர் வசிக்கும் வீதியில் நிழல் தரும் மரங்கள் ,வீட்டின் முன் பகுதியில்மரங்களும் அபூர்வ…
இது ஸ்ரீ ஐஸ்வரியம் இதழின் ஆறாவது பதிப்பு. அனைத்து வாசகர்களுக்கும் நன்றி. நீங்களும் இந்த புத்தகத்தின் இலவசமாகப் பெற உங்களுடைய முகவரியை எங்களுக்கு அனுப்புங்கள்.
திடீர் திடீர் என முளைக்கும் கட்டிடங்கள் ,நகர்ப்புறங்களின் விரிவாக்கம் மரங்களை அழித்து காட்டிற்குள்ளும் பிளாட் போட்டு விற்கும் அவலம் .என்னதான் விதிமுறைகள் இருந்தாலும் அனைத்தையும் தாண்டும் கெட்டிக்காரர்கள்.குளு குளு கோவை என்ற பெயர். ஆனால் இப்போது எல்லாம் கோடைக்காலம் போல் எப்போதும் சுட்டெரிக்கிறது.” அட” சாலையில் தான் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக மரங்களை வெட்டி பெரிது படுத்தினார்கள்.என்றால், வீட்டையும் பெரிது படுத்தி வீடுகளில் வளர்ந்த ,ஓரிரு மரங்களையும் வெட்டி தங்கள் வீரத்தை காட்டுகிறார்கள்.சிட்டுக்குருவி,அணில்,காகம் ,.மைனா, குயில் ,மயில் என அனைத்து சிற்றுயிர்களையும் இனி மியூசியங்களில் தான் காணமுடியும் போல் தோன்றுகிறது.இப்போது நகரங்களில் உள்ளவர்கள் குழந்தைகளுக்கு சிலவகை விலங்குகள் ,அபூர்வமான செடிகள் முதலியவற்றை அவற்றுக்கு உரிய கண்காட்சி மையங்களில் தான் காண்பித்து வருகிறார்கள்.பொதுவாக மரங்கள் தான் பறவைகளுக்கும்,சின்னஞ்சிறு உயிரினங்களுக்கும் இருப்பிடம்.மழை, புயலுக்கு நாமே செய்வதறியாமல் திகைக்கிறோம் .இந்த சின்னஞ்சிறுஉயிர்கள் எங்கு போகும். புலி,சிங்கம், பாம்பு வகைகள் போன்ற பெரிய விலங்குகளை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள்…
ஒரு ஊரில் மாரியப்பன் என்கிற விவசாயி இருந்தான்.அவனுக்கு என்று இருந்த வயலில் நெல் பயிர் செய்து அதில் இருந்து வரும் வருமானத்தில் தன மகன் கந்தனைப் படிக்க வைத்துக் கொண்டு இருந்தான்.தந்தையின் கடின உழைப்பையும், அந்த ஏழ்மையிலும் தன்னையும் படிக்க வைக்கும் தந்தைக்கு நற்பெயர் வாங்கித் தர வேண்டும் என்ற உறுதியோடு படித்து வந்தான் கந்தன். உறுதியும், நம்பிக்கையும் கந்தனிடம் இருந்ததால் முதல் மாணவனாகவே வந்தான். அவன் முதல் மாணவனாக வருவது அந்த ஊர் பண்ணையார் மகன் மோகனுக்குப் பிடிக்கவில்லை.ஊரில் உள்ள நிலங்களில் பாதிக்கும் மேல் தங்களுக்குச் சொந்தம் என்ற கர்வமும், தான் பண்ணையார் மகன் என்ற ஆணவமும் அவனைப் பொறாமை கொள்ளச் செய்தது.தன்னைச் சுற்றி இருந்த சால்ரா மாணவர்கள் அவனுக்குத் தூபம் போட்டு அவனை மற்றவர்களிடம் வெறுப்பு ஏற்படச் செய்தார்கள்.படிக்க ஊக்கப்படுத்தவில்லைபண்ணையார் கட்டிய பள்ளிக்கூடம் என்பதால் எந்த வகுப்பிலும் அவன் பெயில் ஆகவில்லை.பள்ளிக் கல்வி முடிந்தது .பக்கத்து ஊரில் உள்ள கல்லூரியில்…
முதல் அடி எடுத்து வைத்தால்முன்னேற தொடங்கி விடுவாய் -நீமறு அடி எடுத்து வைக்கதாமதம் ஆகாதுதடைகளை படியாக்கும் பயிற்சியைபெற்று விட்டால் – நீசிகரங்களை தொடுகிற முயற்சியிலும்வெற்றி கொள்வாய்வாழ்வில் எது மாறுகிற போதிலும்மனம் மாறாத குணம் வேண்டும்தடை உனை சூழ்யது வரும் போதும் ,மனம் திடம் வேண்டும் – தொடமுடியாத உயரம் என்று ஏதும் இல்லைதுணிவோடு முதல் அடி எடுத்து வைசிகரம் தன் ஜடா முடியை -உன்பாதத்தின் கீழ் வைக்கும்…!
மதுரைக்கு அருகில் அப்பளப்பட்டிஎன்னும் சிறிய ஊர் உள்ளது.அவ்வூருக்கு செல்லும் வழியில் நம்மை வரவேற்பது குடிதண்ணீர் குளம் .சிறிது தூரம் நடந்தால் கூரை ,ஓட்டு வீடுகள் கொண்ட சிறிய அழகிய கிராமம்.அதுதான் அப்பளப்பட்டி. ஊரின் மையப்பகுதியில் ஒரு பிள்ளையார் கோவில் .அதன் அருகில் சங்கிலிகருப்பன் கோவிலும் உண்டு.சற்று நடந்தால் ஐந்தாம் வகுப்பு வரை படிக்க ஒருபள்ளியும் ,அதன் அருகில் ஊர் நியாயம் பேச ‘சவுக்கை’யும் அதற்கு நிழலும் இதமான காற்றும் தரும் அரசமரமும் இருக்கும்.அந்த சவுக்கையில் தான் ஊர் நியாயங்கள்,ஊர்கதைகள் எல்லாம், வேலை வெட்டி இல்லாதவர்களும் ,வேலை முடிந்து ஓய்வு எடுப்பவர்களும் கூடும் இடம்.இப்படி வெட்டிக்கதைகள் பேசாமல் அங்கு விளையாடும் குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு நீதிக்கதைகளை கூறி அவர்களை உற்சாகப்படுத்தி சிந்திக்க வைத்தார் நம் கதாநாயகன்.கதாநாயகன் என்ற உடன் உங்களுக்கு அவர் எப்படி இருப்பார் என்று நினைக்கத் தோன்றும் .அவர் ரஜினி மாதரி இல்லை.”கமல் மாதரி,நம்ம நாகேஷ் மாதிரி’என்று கற்பனை வருகிறது…
சித்த மருத்துவம் தோன்றிய காலம் என காலத்தை கூற முடியாது.புல்,பூண்டுகள் முளைத்த காலமேதமிழ் மருத்துவ காலம்.சித்த மருத்துவத்தின் மொழி தமிழ்.திசை தெற்கு,காது வழியாக கேட்டு கைவைத்தியமாகச் செய்யப்படுவதே சித்த மருத்துவமாகும். தமிழ் மருத்துவம், வீட்டு வைத்தியம் என்றுஅழைப்பார்கள்.தமிழ் மண்ணுக்கு ஒரு அற்புதமான சக்தி உண்டு.மண்ணில் முளைக்கும் செடி,கொடிகள் அனைத்திற்கும்ஒரு மருத்துவ குணம் உண்டு.காய்கறி ஆகட்டும், கீரை வகைகள் ஆகட்டும், சமயலுக்கு பயன்படுத்தும்மளிகை சாமான்கள் ஆகிய மஞ்சள் ,இஞ்சி,புண்டு,கடுகு,மிளகு,சீரகம் சுக்கு,வெந்தயம்,வெங்காயம் எனஎல்லாவற்றிலும்மருத்துவ குணம் உண்டு.எண்ணெய் என எடுத்துக்கொண்டால் கடலை,எள்ளு,தேங்காய்,வேம்பு, இலுப்பை,சூரியகாந்தி என எல்லாவற்றிற்கும் மருத்துவ குணம் உண்டு.பால்,பாலில் இருந்து கிடைக்கும் தயிர்,மூர்,வெண்ணெய்,நெய் என அனைத்தும் மருத்துவ குணமுடையது.தமிழர்களின் உணவுக்கு மருத்துவ குணம் இருப்பதால் எளிதாக மருத்துவம் செய்து குணப்படுத்திக் கொள்ளும்முறையும் இருந்தது.மருத்துவத்திகாக அதிக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது .நாகரீக வளர்ச்சி காரணமாக சித்த மருத்துவத்தின் பலனை அதிகம் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு…
தெய்வ அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.விநாயகரின்உருவ அமைப்பின் தத்துவத்தைப் பார்ப்போம்.ஐந்து பெரும் சக்திகளை காட்டுவதாக விநாயகரின் உருவ தத்துவம் அமைந்துள்ளது.மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியையும்.சரிந்த தொந்தி நீரையும்,மார்பு பகுதி நெருப்பையும்,இரண்டு புருவங்களின் இணைந்த அரை வட்ட வடிவம் காற்றையும்,நடுவில் வளைந்து இருக்கும் கோடுஆகாயத்தையும் ,குறிப்பதாக அமைந்துள்ளது.எனவே விநாயகர் பஞ்சபூத சந்திரன் அம்சமானவர் ஆவார்.ஒரு கையானது பாசத்தை ஏந்திஇருப்பதால் படைத்தல் தொழிலை காட்டுகிறது.(பிரம்மா)தந்தம் ஏந்திய கை காத்தலைக் குறிக்கிறது.(விஷ்ணு)அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.(ருத்ரன்)தும்பிக்கியானது மறைக்கும் தொழிலை குறிக்கிறது.(பரமேசுவரன்)மோதகம் ஏந்திய கை சக்தி அருளைக் காட்டுகிறது .(பராசக்தி)கரங்களின் வடிவில் அனைத்து கடவுள்களையும் தன்னகத்தை அடக்கி உள்ளதால்தான் விநாயகரை முதல் கடவுள் என்கிறோம் .மேலும் மனிதனின் மனத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.மனிதனிடம் இருக்கும் விலங்கு குணம், குழந்தை மனம், அருள் தன்மை, பெருந்தீணி,முரட்டுத்தன்மை,மென்மையான குணம் போன்ற அனைத்து குணங்களையும் தானே வெளிப்படுத்தும் உருவமாக காட்சி தருகிறார்.,முதல் கடவுளாகிய விநாயகர்.அருகம்புல்லை அள்ளிஆனைமுகன் உனக்களிக்கபெருகும் பொன்னை…
தமிழகத்தின் ஒரு சிறிய கிராமம் அது. ஆனால் வளம் கொழிக்கும் பூமி ஆகும்.செம்மண் ரோடுகள்,வளைந்து-நெளிந்து செல்லும் வண்டித்தடங்கள்.மின்சார வசதி கிடையாது.சிம்னி,அரிக்கன் விளக்குகள்.அந்த கிராமத்தில்ஒரு குறிப்பிட்ட உயர் வகுப்பினர்,அதிக எண்ணிக்கையிலும் விவசாய வேலைகள் செய்வதற்கு என்றும் ,கிராமத்திற்கு என்று பல்வேறு தொழில் செய்யக்கூடியவர்களும்வசித்து வந்தனர்.ஊரில் கட்டுப்பாடுகள் அதிகம் காணப்படும்.ஊரில் அடைக்கலம்,சிதம்பரம்,சோமசுந்தரம்உள்பட பெரியமனிதர்கள் உண்டு. கிராமத்தின் ஊர் தொடக்கத்தில் குடி தண்ணீர் ஊரணியும்,கிராமத்திற்கு என்றுகண்மாயும் உண்டு.கிராமத்தில் ஒரு கோவிலும் அதனை ஒட்டிய சவுக்கையும் அருகில் திறந்த வெளியும்உண்டு.வீடுகள் தோறும் பசுமாடும்,உழவுக்கு பயன்படும் காளைமாடுகளும்,விவசாய பணிக்கு மொட்டைமாட்டு வண்டிகளும், பயணத்திற்கு என்று கூடு வண்டிகளும் உண்டு.விவசாய காலங்களில்வீதிகள் தோறும் நெல் மணிகள் சிதறிக்கிடப்பதை காணலாம்.முக்கிய பிரச்சினைகள் ஊர்சவுக்கையில் கூடி அனைவரும் பேசி முடிவு செய்வார்கள்.யார் மீதாவதுகுற்றம் சுமத்துபவர்கள் முதலில் வெற்றிலை வைத்து இன்னார் மீது இன்ன குற்றம் சுமத்துவதாகதெரிவிப்பார்கள்.ஊர் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து குற்றம் சுமத்தப்பட்டவரை அழைத்து விசாரணைநடத்தி ஊர் தண்டனை அளிப்பார்கள்.ஊர் தண்டனைக்கு அனைவரும்…