தெய்வ அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.விநாயகரின்உருவ அமைப்பின் தத்துவத்தைப் பார்ப்போம்.

ஐந்து பெரும் சக்திகளை காட்டுவதாக விநாயகரின் உருவ தத்துவம் அமைந்துள்ளது.

  1. மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியையும்.
  2. சரிந்த தொந்தி நீரையும்,
  3. மார்பு பகுதி நெருப்பையும்,
  4. இரண்டு புருவங்களின் இணைந்த அரை வட்ட வடிவம் காற்றையும்,
  5. நடுவில் வளைந்து இருக்கும் கோடுஆகாயத்தையும் ,குறிப்பதாக அமைந்துள்ளது.எனவே விநாயகர் பஞ்சபூத சந்திரன் அம்சமானவர் ஆவார்.

ஒரு கையானது பாசத்தை ஏந்திஇருப்பதால் படைத்தல் தொழிலை காட்டுகிறது.(பிரம்மா)




தந்தம் ஏந்திய கை காத்தலைக் குறிக்கிறது.(விஷ்ணு)

அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.(ருத்ரன்)

தும்பிக்கியானது மறைக்கும் தொழிலை குறிக்கிறது.(பரமேசுவரன்)

மோதகம் ஏந்திய கை சக்தி அருளைக் காட்டுகிறது .(பராசக்தி)

கரங்களின் வடிவில் அனைத்து கடவுள்களையும் தன்னகத்தை அடக்கி உள்ளதால்தான் விநாயகரை முதல் கடவுள் என்கிறோம் .
மேலும் மனிதனின் மனத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

மனிதனிடம் இருக்கும் விலங்கு குணம், குழந்தை மனம், அருள் தன்மை, பெருந்தீணி,முரட்டுத்தன்மை,மென்மையான குணம் போன்ற அனைத்து குணங்களையும் தானே வெளிப்படுத்தும் உருவமாக காட்சி தருகிறார்.,முதல் கடவுளாகிய விநாயகர்.

அருகம்புல்லை அள்ளி
ஆனைமுகன் உனக்களிக்க

பெருகும் பொன்னை அள்ளி
பெருமையுடன் தருபவன் நீ

உருகி மனம் உருகி
உனைத் தொழுது போற்றுகிறேன்

அருகில் வந்தெம்மை
ஆதரிப்பாய் கற்பகமே

Share.

Leave A Reply