சுவைகள் என வரும்போது ஆறு சுவைகள் உள்ளன .துவர்ப்பு,புளிப்பு,இனிப்பு,காரம்,கசப்பு,உப்பு என்பனவாகும்.

புரதசத்து-பால்,பருப்பு வகைகளில் உள்ளது.

மாவுசத்து-கிழங்குகள்,தானியங்களில் உள்ளது.

கொழுப்புச்சத்து-பால், தயிர், வெண்ணெய்,நெய்,எண்ணெய், முட்டை,மீன் ,இறைச்சி வகைகளில் உள்ளது.

உலோகச்சத்து -கால்சியம்,சுண்ணாம்பு, பொட்டாசியம்,இரும்பு,போன்றவைகளில் உள்ளது.

நீர்ச்சத்து-குடிநீர்,(குடிநீரை கொக்கக வைத்து ஆறியபின் குடிக்க வேண்டும்)

வைட்டமின்-உயிர் சத்தாகிய வைட்டமின்களை ஏ,பி,சி,டி,இ ,கே என்று பல வகைகளில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது .

அருகம்புல்லின் பயன்கள்

அருகம் புல் முதலில் தோன்றிய செடி.முதல் கடவுளாகிய விநாயகருக்கு உகந்தது. அருகம் பிள்ளை முப்பது கிராம் அளவுக்கு அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்த மலம் குணமாகும். நகச் சுற்று ஏற்பட்டால் மஞ்சள் ,அருகம்புல், சிறிது சுண்ணாம்பு அரைத்து நகச் சுற்றில் பூசினால் குணமாகும்.

அருகம் புல் சாறு தினசரி குடிப்பதால் நோய் ஏற்றிப்பு சக்தி கூடி நோய் வரும் முன் காக்கவல்லது. அருகம்புல்,அதிமதுரம்,மிளகு,சீரகம்,சித்தரத்தை,மாதுளம்பூ சேர்த்து கசாயம் வைத்துக் குடித்தால் வெட்டவாயு தொல்லையில் இருந்து விடுபடலாம். அன்னத்துடன் அரைக்கீரை சமைத்து நெய் விட்டு சாப்பிடும் போது வலிமை கூடுகிறது.சீரண சக்தி எளிதாகிறது.

சளி,காய்ச்சல்,டைபாய்டு குணமாகும் தாய்ப்பால் பெருகும்.



அகத்திக்கீரை

அகத்திக்கீரை உணவுடன் சாப்பிடும்போது வயிற்றில் உள்ள பூச்சிகள்இறந்து போகின்றது .வயிற்றுவலி போன்ற நோய்கள் வராமல் தடுக்கின்றது மேலும்,அகத்திகீரை சாப்பிடுவதால் வயிற்றுப்புண்,வாய்ப்புண் வெப்பத்தால் வருவது தடுக்கப்பட்டு குளிர்ச்சி உடலுக்கு கிடைப்பதுடன் உடல் ஆரோக்கியம் பேனப்படுகிறது.

அத்திக்காய் (மூலநோய் குணமாக்க)

அத்திக்காய் பொறியல்,அல்லது பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் மூல கடுப்பு, எரிச்சல்,இரத்தப்போக்கு கட்டுப்படும் நல்ல நிலையில் மூல நோயில் இருந்து விடுபடலாம்.

குழந்தை பிறப்பை தள்ளிப்போட மாத்திரை சாப்பிடாமல் அண்ணாச்சிப் பழம் அல்லது அண்ணாச்சிப் பழசாறு குடித்தால் மாதவிலக்கு ஒழுங்காக வந்துவிடும்.

அல்லிமலரை பூசைக்கு உபயோகப்படுத்தி இறை அருள் பெறலாம்.அல்லி கிழங்கு சமைத்து சாப்பிட வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.

வாய்ப்புண் நீங்க

பாலில் இருந்து வரும் தயிர்,மோர்,வெண்ணெய்,நெய் போன்ற அனைத்தும் நமக்கு ஆகாரப் பொருளாக பயன் படுகிறது.தயிர்பச்சடி,அவியல்,லெஸ்சி இப்படி பயன்படுத்தி சாப்பிடுகிறோம்.தயிரைக்கடைந்து மோர்,வெண்ணெய் எடுக்கிறோம்.வெண்ணெய் வாய்ப்புண்,வயிற்றுப்புண் போக பயன்படுகிறது.சப்பாத்தியில் வெண்ணெய் சேர்த்து சாப்பிடும்போது உடல் சூட்டைக் குறைக்கப் பயன்படுகிறது.

குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும்போது பருப்பு ,நெய் சேர்த்து கொடுப்பதால் உடல் வளர்ச்சியும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.

ஆமணக்கு எண்ணெய் (மலச்சிக்கல் நீங்க)

ஆமணக்கு எண்ணெய் மலச்சிக்கல் போக்கக் கூடிய மருந்து.வெப்ப காலத்தில் மலச்சிக்கல் உள்ளவர்கள் சிறிது உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் வராது. குளிர் காலத்தில் சேர்த்துக்கொள்ளக்கூடாது.ஆமணக்கு எண்ணெய் குளிர்ச்சியானது.குளிர்ச்சி உள்ள உடல் என்றால் சன்னி கூட வந்துவிடும் .எனவே குளிர் காலத்தில் பயன்படுத்த வேண்டாம்.உணவில் ஒரு சொட்டு அல்லது இரண்டு சொட்டு அளவு தான் சேர்த்துக்கொள்ள வேண்டும்.’சுளுக்’கு ஏற்பட்டவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் சிறிது தேய்த்து விட்டு சுளுக்கு எடுக்க வேண்டும்.

சீதபேதி ,குளிர் காய்ச்சல் இருக்கும்போது ஆமணக்கு எண்ணெய் சேர்க்ககூடாது.

ஆரஞ்சு பழத்தின் பயன்கள்

ஆரஞ்சு ,ஆப்பிள் பழம் சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிட்டு உடல் நலம் பெறலாம்.ஆரஞ்சுதோலை கீழே வீசி விடாமல் காய வைத்து அரைத்து தலைக்கு குளிக்க தலைச்சூடு குறையும்.சீகக்காயுடன் போட்டு அரைத்து தலைக்குத் தேய்த்துக்குளிக்கபயன் படுத்தலாம் முடி கருப்பாகவும் ,கண்ணுக்கு குளிர்ச்சியும் தரும்.
ஆரஞ்சு சாறு சிறிது முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் சென்றபின் குளித்தால் முக அழகுகூடும்.ஆரஞ்சில் வைட்டமின் ‘சி’உள்ளது.ஆரஞ்சு சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

Share.

Leave A Reply