முதல் அடி எடுத்து வைத்தால்
முன்னேற தொடங்கி விடுவாய் -நீ
மறு அடி எடுத்து வைக்க
தாமதம் ஆகாது

தடைகளை படியாக்கும் பயிற்சியை
பெற்று விட்டால் – நீ
சிகரங்களை தொடுகிற முயற்சியிலும்
வெற்றி கொள்வாய்
வாழ்வில் எது மாறுகிற போதிலும்
மனம் மாறாத குணம் வேண்டும்
தடை உனை சூழ்யது வரும் போதும் ,
மனம் திடம் வேண்டும் – தொட
முடியாத உயரம் என்று ஏதும் இல்லை
துணிவோடு முதல் அடி எடுத்து வை
சிகரம் தன் ஜடா முடியை -உன்
பாதத்தின் கீழ் வைக்கும்…!