அப்பளக்குடுமி தாத்தா கம்பீரமாக அமர்ந்திருந்தார்.அவரைச் சுற்றி சிறுவர்கள்.அதில் ஒரு சிறுமி மிட்டாய் வைத்திருந்தாள் .அதை பக்கத்தில் அமர்ந்திருந்த மற்றொரு சிறுமி பறித்து வாயில் போட்டுக்கொண்டாள்.“மூதேவி,””மூதேவி’போடி உங்க வீட்டிற்கு ‘பேய் ‘வர,’பூதம் ‘ வர என திட்டிக்கொண்டு இருந்தாள் மிட்டாயை பறிகொடுத்த சிறுமி. சண்டை போட்ட குழந்தைகளைப் பார்த்து “இங்கே வாருங்கள்” என தாத்தா அழைத்தார்.இருவரும் ’உம்’ எனமுகத்தை வைத்துக்கொண்டு பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள்.”உங்களுக்கு பேய் கதை சொல்லட்டுமா?’என தாத்தா கேட்டது தான் தாமதம். ’தாத்தா, சொல்லுங்க…தாத்தா சொல்லுங்க ‘என எல்லோரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அமைதி..அமைதி..என்றவர் கதை சொல்ல ஆரம்பித்தார்.ஒருகிராமத்தில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வீட்டில் எப்போதுமே வறுமை தாண்டவமாடியது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.எனவே,இருவரும் காலையில் வயல் வேலைக்குப் போனால் மாலை தான் வீடு திரும்புவார்கள்.வேலை முடிந்து கூலி பணத்தில் ஒரு கிலோ அரிசி,பருப்பு மற்றும் வீட்டிற்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் வாங்கி வருவார்கள்.அதை அந்தப்பெண் இருட்டும் முன் சமையல்…
Author: admin
மதிய உணவிற்கு வீட்டற்கு வந்திருந்த திவாகர் மனைவியிடம்கேட்டான். "என்ன ஜோதி" கொழந் தைக ரெண்டையும் காணோம்’ ."பக்கத்துல ஆடிட்டரம்மா வீட்டுக்குப் போயிருக்குக"என்றாள் கணவனுக்கு சாப்பாடு பரிமாறிக்கொண்டே…"ம், அங்கெல்லாம் எதுக்கடி அனுப்பறே ?அவங்கெல்லாம் ரொம்ப வசதியானவங்க ? நம்ப குழந்தைக வேறு ரொம்ப குறும்பு,எதையாவது விலையுயர்ந்த பொருட்களை எடுத்துப் போட்டு உடைச்சு வெச்சுடிச்சுகன்னா,வீண் மனச்சங்கடம்" சாப்பாட்டை உருட்டியபடியே சொன்னான் திவாகர்."இல்லங்க அந்தம்மாவே வலியவந்து நம்ம குழந்தைகளை அவங்க வீட்டுக்கு வரச் சொல்லிக் கேட்டு கூட்டிட்டுப் போனாங்க "திவாகர் நெற்றி சுருக்கி மனைவியை பார்க்க " ஆமாங்க அவங்க வீட்டிலேயும் ஒரு குழந்தை இருக்குதல்ல ? அது கூட விளையாடத்தான் கூட்டிட்டுப் போயிருக்காங்க ‘அதற்கு மேல் எதுவும் பேசாமல் மவுனமாய் சாப்பிட்டுக்கொண்டிருந்த திவாகரின் முகபாவனை,ஜோதிக்கு எரிச்சலாயிருந்தது."எப்பவும் இப்படித் தான்.பணக்காரங்க கூட பழகக்கூடாது, பேசக்கூடாது.அவங்க எல்லாம் சிங்கமா? புலியா ? நம்மை கடிச்சுதிங்க ? தனக்குள் சொல்லிக்கொண்டாள் ஜோதி.அடுத்த வாரத்தில் ஒரு நாள் உயர்…
இருண்ட மனம், தெரிந்த முகங்கள்உதவ யாருமில்லை, ஒளி எங்கே? மூலையில் தெரியதட்டுத் தடுமாறி, பற்றுக் கம்பை பிடிக்கும் கொடியாய்உருண்டு எழுந்து , நிமிர்ந்து நடக்கையில்சிறு ஒளி பிரகாசமாய் தெரிய தன்னம்பிக்கை வேர்ஆழமாய் ஊன்ற வெற்றி மலர்ந்தது.தளராத முயற்சியும் பொறுமையும் தன்னம்பிக்கை ஏற்பட முதல் படி என்று சொன்னால் கூட வியப்பேதும் இல்லை.எதையும் இருந்த இடத்தில் இருந்தே பெற்று விடலாம் என்றால் அது சோம்பேறித்தனம் என்று கூட கூறலாம்.நகரில் ஒரு மிகப்பெரிய பிரமுகர் இருந்தார் .பொதுவாக உதவி என்று யார் சென்றாலும் அவர் வெறும் கையுடன் அனுப்பியதாக தகவல் இல்லை.ஆனால் அவரை நேரில் சந்திப்பது அவ்வளவு எளிதில் முடிவதில்லை.ஒரு சமயம் இரண்டு பேர் அவரை வெவ்வேறு கால கட்டங்களில் சந்திக்க முயற்சி மேற்கொண்டனர்.முதலில் சென்றவர் பல முறை முயன்றும் அவரை சந்திக்க முடியவில்லை .ஏதாவது காரணத்தால் இவர் எப்போது சென்றாலும் அவரை சந்திக்க முடியாத நிலையே தொடர்ந்தது.இதை அறிந்த அவரது நண்பர்கள் சிலர்…
தமிழ் மருந்து கடைகளில் பிள்ளை மருந்து என்று கேட்டால் எல்லா மருந்துகளும் கலந்து கொடுப்பார்கள்.அவற்றை இடிகல்லில் இடித்து அல்லது அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அல்லது தட்டையாக தட்டி வெயிலில் காயவைத்து,நன்கு காய்ந்தபின் பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவேண்டும்.குழந்தை பிறந்த வீட்டில் பச்சை மருந்தாக 5 அல்லது 7 நாட்கள் காலை,மாலை இரண்டு நேரமும் சிறிது சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புண் ஆறிசாப்பிடுவது சீரணமாகி உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.குழந்தை காதில் ஊதி விட குழந்தைக்கும் பால் குடிப்பது சீரணமாகி வாந்தி எடுக்காமல் நல்ல முறையில் இருக்கும்.குழந்தைக்கு மூன்று மாதம் ஆனபின்பு குழந்தையை குளிக்க வைக்கும்போது மருந்து உருண்டையில் ஒன்றை எடுத்து வெது வெதுப்பான நீரில் தொட்டு சங்கடையில் ஒன்று அல்லது இரண்டு உரசு,உரசி கொடுத்தால்,சளி,காய்ச்சல் போன்ற நோய்கள் தாக்காது.வயிற்றுப் பொருமல் ,வாயு பிடிப்பு ,சீரணம் ஆகாத நிலைக்கு தகுந்தபடி பாதி, ஒன்று, இரண்டு என்று சாப்பிட நோயில் இருந்து…
தமிழில் நல்ல சிறுவர் பாடல்கள் வருவது மிக மிக குறைவு. திரு மல்லிகா அவர்கள் எழுதி படிய குழந்தை பாடல்களை இங்கு காணலாம்.
மாகாபாரதக் காவியம் உருவானதும் தமது புத்திரரான சுகருக்கு வியாசர் அதை கற்றுக்கொடுத்தார்.நாரதர் இதனைக் கற்றுத் தேவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.இவ்வாறு மகாபாரதக் காவியம் பரவி மானிடர்களை அடைந்தது.அக்காலம் முதல் இக்காலம் வரை சொத்துச் சண்டை குடும்பத்திற்கு குடும்பம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.ஆனால் தர்மம், அதர்மம் என்பதை பிரித்து காட்டுவதே கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த சண்டையை வைத்து தெரிந்து கொள்ளலாம்."தர்மத்தினை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்:\’ என்கிற உணர்வினை உணர்த்துகிறது.திருதிராஷ்டிரரும் ,பாண்டுவும் அண்ணன், தம்பிகள் மூத்தவரான திருதிராஷ்டிரருக்கு கண் பார்வை இல்லாததால் பாண்டு மன்னனாக அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்தார்.திருதிராஷ்டிரருக்கும் ,காந்தாரிக்கும் நூறு குழந்தைகள் பிறந்தார்கள்.அவர்கள் கெளரவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.பாண்டுவுக்கும் ,குந்தி தேவிக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர்.இவர்கள் பாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.திருமணத்துக்கு முன்னதாக துர்வாச முனிவருக்கு குந்தி பணிவிடை செய்ததால் ,மகிழ்ச்சி அடைந்த துர்வாசர், N’மானசீகமாக ஒருவரை என்னும் போது கருத்தரிக்கும் வரம் கொடுத்தார்.அதை சோதிக்க எண்ணிய குந்தி கன்னியாக இருக்கும் போதே சூரியபகவானை…
அமைதியும் சக்தியும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள சித்தலிங்கேஸ்வரர் ஆலயம் சிங்கா நல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து தென் திசையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆலயத்தின் வரவேற்பாக வடக்கு நோக்கி ஸ்ரீ சொர்ணாம்பிகா அம்மன் காட்சி தர அம்பாளைப் போன்றே பிணி தீர்க்கும் விநாயகப் பெருமானும் வெளிக்காற்றில் வெள்ளிப்பிள்ளயாய் நம்மை வரவேற்கிறார்.மேற்கு நோக்கிய நந்தி தேவரைப் பார்த்த முகமாய் சித்தர் ஆகம படி நவபாஷாணங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சித்தலிங்கேஸ்வரராக உலகில் முதன் முதலில் உருவான ஒரே "நவபாஷாண சிவலிங்கம்" மூலவராக கிழக்கு நோக்கி எம்பெருமானாகிய சிவபெருமான் சீரும் சிறப்புமாய் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.மூலவரின் வலப்புறமாகத் தொடர்ந்து குருதட்சிணாமூர்த்தியும் ,வாயு புத்திரனாகிய ஸ்ரீ ஆஞ்சநேயர் திருவுருவச் சிலையும் ,ஸ்ரீ அலமேலு பதமாவதி ஸ்ரீ வெங்கடாசலபதி சன்னதியும், அரசர ,வேம்புமர நிழலில் ராகு, கேது, இருபுறமும் இருக்க மையப்பிள்ளையாராகவிநாயகர் மேடைதளமும் அமைந்துள்ளது.குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமாக மலைக்கோயில் அமைப்பில் தமிழ்க் கடவுளாம்முருகப்பெருமான் சுப்ரமணியர் ஸ்ரீ வள்ளி…
பாரத தேசம் பக்திக்கு இருப்பிடம்.இந்து கடவுளின் அவதாரம் ,இந்து கோவில்கள் அதிகமாக இருக்கும் இடம் இந்தியா என்ற பெருமை மிக்க நாடு நம் நாடு. ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவதை நேசம் என்கிறோம். அந்த நேசத்தை இறைவன் மேல் செலுத்துவது பக்தி ஆகும் .இறைவனை முழுமையாக நம்பி அவனிடம் நம்மை ஒப்படைக்கும் போது இப்பிறவியில் எல்லா பேரும்கிடைத்து, பிறவி பயன் அடைந்து விடுகிறது.அதாவது நமது ஆன்மா ‘முக்தி’அடைந்து விடுகிறது.மனித சமுதாயத்தில் தர்மம் சீர் குலையும் போதெல்லாம் நிலைமையை சரி செய்வதற்காக பகவான் கிருஷ்ணர் அவதரிக்கிறார்.அதர்மம் ஆதிக்கம் செலுத்தும் போதெல்லாம் பக்தர்களைக் காத்து கொடியவர்களை ஒழித்து தர்மத்தை நிலை நாட்ட யுகம் தோறும் பகவான் கிருஷ்ணர் அவதரிக்கிறார்.முழுமுதற் கடவுளாகிய பகவான் கிருஷ்ணர் எல்லோருடைய இதயத்திலும் பரமாத்மாவாக விளங்குகிறார்.உண்மையான பக்தனுக்கு உதவுபவர் .அவர் தாமரை பாதங்களை பற்றி அவர் புகழ் பாடும் பக்தனுக்கு பக்க பலமாக இருப்பவர்.பக்தியுடன் நேசிக்கும் பக்தன் பக்கத்தில் இருந்து…
தான் பிறந்த ஊர் பெயரை சேர்த்து சிறுமுகை செல்வராசாக கோவையில் வளம் வந்து கவிதைகளை தந்த ஆசிரியர் "இரவுப் பந்தலுக்குள் …"என்ற நூலினை 3 0 தலைப்புகளில் பதிவாக தந்து இருக்கிறார்கள்.தான் செய்யும் தொழில் மேல் உள்ள பக்தி ,பாசம் சமர்ப்பணம் செய்ததில் தெரிகிறது. த.மு.எ.க.ச.மாநில செயலாளர் ச. தமிழ்ச் செல்வன் வாழ்த்துக்கள் பெற்று வெளியிட்ட நூல் ஆசிரியர் சிறந்த பாடகரும் கூட.எழுதிய பாடலுக்கு மெட்டுப்போட்டு இசைப்பதில் வல்லவர். சில பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.இனி கவிதையை வாசிப்போம்.’அகரமாய் உனையாக்கி அகிலமே இணையாக்கி அகழாய் நீ அருள் பாலித்தாயே’என்பதில் தாயை மதிக்கும் பண்பு தெரிகிறது.’மூடிக்குள் இருந்தால்முடங்கிக் கிடக்கும் மூடியைத் திறந்தால்முடியையும் இறக்கும்’புரட்சி தெரிகிறது.’எதுகையும் மோனையும் மரபுக்குக் கரும்பு எத்தனை விதங்களில் செய்திடும் குறும்பு புதுக்கவி தைகளோ கடித்திடும் எறும்பு வார்த்தை மரபுக்குள் புகுந்து வருவது விருந்து வானில் வடமின்றி வரும் வெள்ளித் தேரோட்டம் கோலம் புள்ளிகளாய் நட்சத்திரப் பூந்தோட்டம் காணும் சுவை கூட்டும் நமது கலைக்கண்ணோட்டம் ‘என்ற வரிகளில் இயற்கையை காணும் கண்ணோட்டம்…
இந்நூல் ஆசிரியர் கோவை இசைக் கல்லூரியில் வயலின் கற்றுக்கொண்டு இருக்கும் போது இசை கல்லூரி பேராசிரியர் டாக்டர் கே.ஏ. பக்கிரிசாமி பாரதி அவர்களிடம் புல்லாங்குழல் கற்றுக்கொண்டு குருவாக கற்றுக்கொண்ட குருவிடமே சென்னையில் இசை ஆசிரியர் பயிற்சி பெறும் போது வாழ்த்துக்கள் பெற்று வெளியிட்ட நூல் "மழைத்துளி" வெளியிட்டவர் ஹைக்கூ தந்தை என கூறப்படும் கவிஞர் மேத்தா அவர்கள். தமிழுக்கும்,தாய்க்கும் ,தந்தைக்கும்,குருவுக்கும் சிரம் தாழ்த்தி வணங்கும் ஆசிரியர் மழை விரும்பி, இசை விரும்பி, இயற்கை விரும்பி .எனவே மழையில் நனைந்து ,இசைத்து ,பயணம் செய்திருக்கிறார்.மழை ‘பலத்த மழை குளிர்தாங்க முடியாமல் வளைந்த மரங்கள்’ என்று மரத்தை உயிரோட்டமாக பார்க்கிறார் நூல் ஆசிரியர்.’எதிர் பார்ப்போடுஎல்லோரையும் நோக்குகிறான் சுண்டல் பையன் ‘என்று சமுதாய அக்கறையுடன் சிறுவனின் எதிர் பார்ப்பை பார்க்கிறார்.’மழை நின்று விட்டது தூறல் நிற்கவில்லை மரத்தடியில் ‘என்று எதார்த்தமான நிகழ்வை பதிவு செய்கிறார்.’சேமிப்பு நிறைந்துள்ளது செலவழிக்க யாரும் வருவதில்லை வருத்தத்துடன் நூலகம் ‘மழைக்காலத்திலாவது நூலகத்திற்கு சென்று படியுங்கள் என்று தன் ஆதங்கத்துடன் மழை கவிதையை முடிக்கிறார்.இசை ‘காலி குடம் கச்சேரியில் கடம்…