திடீர் திடீர் என முளைக்கும் கட்டிடங்கள் ,நகர்ப்புறங்களின் விரிவாக்கம் மரங்களை அழித்து காட்டிற்குள்ளும் பிளாட் போட்டு விற்கும் அவலம் .என்னதான் விதிமுறைகள் இருந்தாலும் அனைத்தையும் தாண்டும் கெட்டிக்காரர்கள்.
குளு குளு கோவை என்ற பெயர். ஆனால் இப்போது எல்லாம் கோடைக்காலம் போல் எப்போதும் சுட்டெரிக்கிறது.” அட” சாலையில் தான் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக மரங்களை வெட்டி பெரிது படுத்தினார்கள்.என்றால், வீட்டையும் பெரிது படுத்தி வீடுகளில் வளர்ந்த ,ஓரிரு மரங்களையும் வெட்டி தங்கள் வீரத்தை காட்டுகிறார்கள்.
சிட்டுக்குருவி,அணில்,காகம் ,.மைனா, குயில் ,மயில் என அனைத்து சிற்றுயிர்களையும் இனி மியூசியங்களில் தான் காணமுடியும் போல் தோன்றுகிறது.இப்போது நகரங்களில் உள்ளவர்கள் குழந்தைகளுக்கு சிலவகை விலங்குகள் ,அபூர்வமான செடிகள் முதலியவற்றை அவற்றுக்கு உரிய கண்காட்சி மையங்களில் தான் காண்பித்து வருகிறார்கள்.

பொதுவாக மரங்கள் தான் பறவைகளுக்கும்,சின்னஞ்சிறு உயிரினங்களுக்கும் இருப்பிடம்.மழை, புயலுக்கு நாமே செய்வதறியாமல் திகைக்கிறோம் .இந்த சின்னஞ்சிறுஉயிர்கள் எங்கு போகும். புலி,சிங்கம், பாம்பு வகைகள் போன்ற பெரிய விலங்குகளை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க சட்டங்கள் உள்ளன.ஆனால் ,சின்னஞ்சிறு பறவைகள் தானே என்ற அலட்சியப் போக்கு காரணமாக ,நம் அடுத்த சந்ததியினருக்கு குருவி, அணிலை கூட பாடப்புத்தகங்களில் மட்டுமே காட்டும் பயங்கரம் நடந்துவிடுமோ என்ற அச்சம் வருகிறது.
கோவையை சுற்றி புதிதாக பெருகி வரும் கட்டிடங்கள் எல்லா சின்னஞ்சிறு உயிரினத்துக்கும் சாவு மணி அடித்து வருகிறது.காடுகளை நகரமாக்கி வருபவர்களால் யானைகள் அடிக்கடி நகர எல்லைப்பகுதிகளுக்கு வந்து சாலை மறியல் செய்கின்றன.
ஏதோ வழிமாறி சாலையில் வரவில்லை யானைகள்.தங்களுக்கு ஏற்பட்ட அவலங்களை மனுக்களாகவா எழுதி கலெக்டர் அலுவலத்தில் கொடுக்க முடியும்?.
இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
யானைகள் சாலைக்கு வந்தால் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க கூட்டம் கூடுகிறதே தவிர, யாரும் எதுவும் செய்து விடவில்லை.ஓரிரு நாட்கள் பரபரப்பு செய்திகளாக மட்டுமே வந்து மறைந்து விடுகிறது அனைத்தும்.
தான் சுகமாக வாழ்வதற்காக எதையும் அழிக்க தயாராக இருக்கும் மனிதன் .தன அடுத்த சந்ததியினருக்கு பணப்பெட்டியை நிரப்ப ,அனைத்தையும் அழித்து வருவது,அவர்களுக்கு செய்யும் நன்மை அல்ல.அடுத்த சந்ததியினருக்கு பல உயரினங்களை ,இயற்கையின் பரிணாமங்களை கேள்விக்குறி ஆக்கிவிடுகிறார்கள்.
உலகில் பூச்சிகள்,மற்றும் பறவைகளும் ,விலங்குகளும் இல்லாமல் ,மனிதன் நெடுந்தூரம் பயணித்து போய் விடமுடியாது. தங்களால் முடிந்தால் ஒரு பிடி அரிசியும், பாத்திரத்தில் ஒரு குவளை தண்ணீரும் தினமும் வீட்டின் அருகில் வையுங்கள்.அது தான் உங்கள் அடுத்த சந்ததியினர் ,குருவிகளோடு ,சிறிய வகை அழகான பறவைகளோடு விளையாடி மகிழ நீங்கள் செய்யும் புண்ணியகாரியம்.
இங்கே கோவையில் ஒரு வீட்டின் அருகில் முள் மரங்களும், சீனிப்புளியங்கா மரமும் இருந்தது. அந்தப் பகுதியில் உள்ள பலவகையான குருவிகள் ,அணில், மைனா, சென்பகப்பறவை ,குயில்களுக்கு அது தான் வீடு,. திடீரென வீடு கட்டுவதற்காக அந்த மரங்களை தரை மட்டமாக்கி விட்டனர்.நிலா உரிமையாளர்கள் .
சென்பகப்பறவை அருகேயுள்ள கட்டிடத்தின் மீது நின்று கொண்டு சோகமாய் ,வெட்டிய மரங்களை பார்த்து கொண்டிருந்தது.பின்னர் வெட்டி வைத்த மரங்களுக்கிடையே சென்று உட்கார ,கடுமையாக முயற்சி செய்து மரங்களுக்கிடையே உட்கார்ந்தது.
அப்போது அருகில் இருந்து ஓடிவந்த ஒரு நாய், வெறித்தனமாக தாக்குதல் நடத்தி ,அந்த பறவையை கொன்று வாயில் கவ்வி சென்றது.வெட்டி வீசிய மரங்களுக்கிடையே குருவிக்கூடுகள் சிதைந்து , சிதறிக்கிடந்தன.அதில் இருந்த சிறு சிறு குருவிக்குஞ்சுகள் உருக்குலைந்து கிடக்க அவற்றை எறும்புகள் மொய்த்துக்கொண்டு இருந்தன.
இந்த காட்சிகளைக் கண்ட அந்தப் பறவையின் கண்ணீர் யாருக்குத்தான் புரியும் ?
இப்போது அந்நியன் ஸ்டைலில் ஒரு கேள்வி ?
ஐந்து குருவி செத்தா தப்பில்லையா ? தப்பில்லீங்க……../
ஐந்து இடத்தில் அஞ்செஞ்சு குருவிகள் செத்தா தப்பில்லயா …? ம் தெரியலங்க /
ஐம்பது இடத்தில் அஞ்செஞ்சு குருவிகள் செத்தா தப்பில்லையா ?
ஆ…..ஆமாங்க … தப்பு மாதிரி தாங்க தெரியுது./..
அப்படின்னா .. ஐநூறு இடத்தில் அஞ்செஞ்சு குவிகளா செத்தா தப்பில்லையா /
ஆமாங்க… பெரிய தப்புத்தாங்கய்யா.. தப்புத்தாங்ய்யா ………