அன்னை பால்  கொடுத்த போது
   தமிழ் உணர்வு கலந்து விட்டதால்
தென்னை மரம் பலன் தந்து 
   தன்னை  பிறருக்குக் கொடுத்து வாழ்ந்தது 
தன்னை உணர்ந்த தமிழன் எல்லாம் 
   பிறருக்கு உதவும் நற் பண்பில் 
முன்னை பயன் மூத்த தமிழன் 
   முத்தமிழ் உணர்வில் ஒன்று பட்டு 
உள்ளம் நிறைந்த தாய் மொழி 
  ஊட்டச் சத்து நிறைந்த முப்பால் 
கள்ளம் இல்லா மனம் தரும் 
   கபடம் சூது ஓடிப் போகும் 
பள்ளம் மேடு பார்த்து வழிவிடும் 
    துள்ளும் மனம் தமிழ் சுவையில் 
துன்பம் கூட இன்பம் ஆகும்.
ஒன்று படுத்தும் தமிழ்  பணி
   ஓய்வு அறியா முழு மதி 
என்றும் இனிக்கும் இன்ப மொழி 
   ஏற்றம் தரும் தமிழ் மொழி 
வென்று நிற்கும் செந்தமிழ் வாழ்வில் 
   வாகை சூடும் முத்தமிழ் புத்துணர்வு 
இன்றும் என்றும் அமுத மொழி 
   அழிவு இல்லா வாழும் மொழி.
Share.

Leave A Reply