தமிழ் நாட்டில் சமீபகாலமாக சரியாக மழை பெய்யவில்லையே என்ற கவலை உள்ளுக்குள் இருந்து வந்தது.இந்த ஆண்டுகூட தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு நிறைவு தரவில்லை.இந்த நிலையில் தான் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி  வடகிழக்குப் பருவமழை தனது மழைப்பொழிவை தொடங்கியது. 


தமிழகம் முழுவதும் இந்த மழைபரவலாக பெய்து வந்தது. சில இடங்களில் கன மழையும் பெய்தது இதனால் விவசாயிகள் மகிழ்ந்தனர். முழு கொள்ளளவை எட்டாத நிலையிலிருந்த நீர் நிலைகள்,குளம்,குட்டைகள்,ஏரிகள்,ஆறுகள் நிரம்பத் தொடங்கின.

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவானது.இதன்  காரணமாக  கடலோர மாவட்டங்களில்  தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது.இந்த மழை சென்னை,காஞ்சீபுரம்,திருவள்ளுவர் கடலூர்,புதுச்சேரி, காரைக்கால்,மற்றும் கடலோர மாவட்டங்களிலும்  வெள்ளப்பெருக்கை உண்டாக்கியது.
ஒவ்வொரு காற்றழுத்த தாழ்வுநிலை அப்படியே இரண்டு மூன்று நாட்கள் நிலைகொண்டு இருந்ததால் மழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்ய ஆரம்பித்தது.வானத்தை பொத்து விட்டது போல் தண்ணீர் கொட்டிக்கொண்டு இருந்தது.ஒரு காற்றழுத்ததாழ்வு  நிலை முடியும் போது அடுத்த காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக் கடலில் உருவாகியது.இதனால் தொடர்ந்து மழை கொட்டிக்கொண்டு இருந்தது.
வழக்கமாக ஒன்று,இரண்டு மாதங்களில் பெய்ய  வேண்டிய மழை இரவு பகலாக மூன்று நாட்களில் கொட்டித் தீர்த்தது.இந்த அளவுக்கு மழை 
பெய்யும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.சில நாட்கள் மழை பெய்வதும் சில நாட்கள் வெயில் காய்வதும் தான் இதுவரை இருந்து வந்துள்ளது.எனவே மக்களும் மழை விட்டு விடும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர்.
ஆனால் மழை நிற்கவில்லை.தொடர்ந்து அடுத்தடுத்து மழை வந்து கொண்டே இருந்ததால் தண்ணீர் வெளியே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.இந்த நிலையில் சென்னையைச் சுற்றி உள்ள சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம்,,பூண்டி,புழல் ஏரிகள் நிரம்பத் தொடங்கின.ஏரிகள் நிரம்பியதைத் தொடர்ந்து அதிகாரிகள் அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.



ஏரிக்கு வரும் தண்ணீர் அளவு கூடிக்கொண்டே சென்றது.தண்ணீரை ஏரியில் அப்படியே விட்டுவைத்தால் உடைப்பு எடுத்து  பேரழிவு பெரு வெள்ளம் ஏற்பட்டு விடும் என்ற நிலை உருவானதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம், பூண்டி,புழல் ஏரிகளில் இருந்து கூடுதலாக வரும் தண்ணீர் அனைத்தையும் திறந்து விடும் நிலை உருவானது..ஏறக்குறைய மூன்று ஏரிகளில் இருந்தும் ஒரே சமயத்தில் ஒரு கட்டத்தில் எண்பதாயிரம் கண அடிக்கும் மேல் தண்ணீர் கூவம்,அடையாறு கால்வாய்களில் திறந்து விடப்பட்டன. 
ஏற்கனவே தொடர் மழையால் சென்னையின் தாழ்வான பகுதிகளில் இருந்து தண்ணீர் வெளியேற முடியாமல் திணறிக்கொண்டுஇருந்தது.வழக்கமான அளவை விட கொஞ்சம் தானே கூடுதலாக தண்ணீர் வந்துள்ளது சமாளித்துக்கொள்ளலாம் என்று எண்ணிய மக்கள் அங்கேயே வீடுகளில் தங்கிவிட்டனர்.
வேளச்சேரி,முடிச்சூர்,பள்ளிக்கரணை,உள்பட புறநகர்ப் பகுதிகளில் வெள்ளம் வீறு கொண்டு பாயத் தொடங்கியது.ஏற்கனவே தாழ்வான பகுதிகளில் இரண்டு,மூன்று அடிகளில் இருந்த தண்ணீர் மட்டம் கிடு கிடு என உயரத் தொடங்கியது.ஒரு கட்டத்தில் தண்ணீரின் அளவு பத்து அடிக்கு மேலாகஉயரத் தொடங்கியது.
சென்னையின் பெரும்பாலான மக்கள் அப்போது தான் வெள்ளத்தின் கடுமையையும், வெள்ளம்தங்களைசூழ்ந்து கொண்டுள்ளதையும் உணரத் தொடங்கினார்கள்.இதற்குள் கரைபுரண்டு வந்த வெள்ளம் சென்னையின் புறநகர்ப்பகுதிகளை எல்லாம் சுற்றி வளைத்துக்கொண்டது.மக்கள் போட்டது போட்டபடியேவிட்டு விட்டு  மாடி வீடுகளிலும்,உயரமான இடங்களிலும் உயிர் காக்க  தஞ்சம் அடைந்தனர்.
தண்ணீர் வெளியேறும் அளவை விட பலமடங்கு தண்ணீர் வந்து கொண்டே இருந்தது. இதனால் தண்ணீர் போவதற்கு வழியே இல்லாமல் அனைத்தையும் மூழ்கடிக்க ஆரம்பித்தது. ரோடுகள் இருந்த இடமே கண்ணுக்குத் தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் தண்ணீர் தான்.
 மழையும் தொடர்ந்து கொண்டே இருந்தது.அதற்கு காரணம் அடுத்தடுத்து ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலைதான்.தண்ணீரின் வேகத்தில் ரோடுகள் மூழ்கின,சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன,சில இடங்களில்  மின்சார கம்பங்கள் சாய்ந்தான. ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த மின் டிரான்ஸ்பார்மார்கள் தண்ணீரில் மூழ்கின.
எனவே மின்கசிவால் உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க அதிக பட்ச இடங்களில் தமிழ்நாடு அரசு முன் எச்சரிக்கையாக மின்சாரத்தை துண்டித்துவிட்டது. எல்லாமே மூழ்கிய நிலையில் பிரளயம் ஏற்பட்டது போன்ற நிலை.இப்போது தான் மக்களுக்கு உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பது புரியவந்தது.தவிப்பின் எல்லை அதிகரித்தது.
ரோடுகளில் வெள்ளம் வடியவில்லை,வீடுகளின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டுஇருந்த  கார்,பைக் உள்ளிட்ட  வாகனங்கள் எல்லாம் மூழ்கி விட்டன. பல இடங்களில் கால் நடைகள் கட்டி வைக்கப்பட்டு இருந்ததால் அவை வெளியேற முடியாமல் வெள்ளத்தில் மூழ்கின.ரயில் பாதைகளில், சென்டிரல், எழும்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் எல்லாம் தண்ணீர் நிறைந்து விட்டது.தாம்பரம்,திருவள்ளூர் போன்ற இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட இயலவில்லை.ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தவிக்கும் மக்களை காக்க அரசு போர்க்கால அடிப்டையில் நிவாரண பணிகள் செய்ய தொடங்கியது.பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சிறிய படகுகள்,  மூலம் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கவும்,அத்தியாவசிய  தேவையானக்கான  உணவுப் பொருட்கள்,தண்ணீர், உணவு ,உடைகள் வழங்கப்பட்டன.



வெள்ளை நிலைமைகளை சீரமைப்பதற்கு முதல் கட்டமாக தமிழக அரசு 10 ஆயிரம் கோடியை நிவாரணமாகவழங்க மத்திய அரசை கேட்டுக்கொண்டது. அதற்கு முதல் கட்டமாக 940 கோடியை வழங்கியது.இதற்கிடையில் மத்திய அரசு நிபுணர்குழு நேரில் வந்து உண்மை நிலவரத்தை கண்டறிந்து சென்றுள்ளது.
சென்னை தமிழகத்தின் தலைநகர் என்பதால் அரசு இயந்திரம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டது.அவர்களுக்கு உதவியாக மத்திய அரசும் உதவிக்கு வந்ததுஇதற்கிடையில் பக்கத்து மாநிலமான ஆந்திராவின் ஒரு பகுதியிலும், தமிழகத்தின் கடைக்கோடியான திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மழை-வெள்ளம் சீற்றத்துடன் காணப்பட்டது.
பருவமழையுடன் புயல் தாக்கம் அதிகம் ஏற்பட்டதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது .தமிழக முதல்வர் ஜெயலலிதா,விமானம் மூலம் பறந்து சென்று தீவுபோல் உள்ள சென்னையைப் பார்த்து அதிகபட்ச  நிவாரண பணிகளுக்கு அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டார்.
இதற்கிடையில் பாரதபிரதமர் நரேந்திர மோடி தனிவிமானம் மூலம்,தமிழ் நாட்டுக்கு வந்து வெள்ளசேதங்களை நேரில் பார்வையிட்டு அதன் தாக்கத்தை உணர்ந்து கொண்டார்.அதேபோல் ஆந்திராவிற்கும் சென்று வெள்ள நிலைமைகளை பார்வையிட்டார்.
அப்போது வந்த பிரதமர் மோடி வெள்ள நிலைமைகளையும் சென்னை ஒரு தீவு போல் காட்சி அளிப்பதையும் பார்த்த பின்னர் உடனடியாக ஆயிரம் கோடியை நிவாரணப் பணிகளுக்கு வழங்கினார்.அத்துடன் இந்திய அரசின் பேரிடர்மீட்பு படையினரையும், இந்திய கடற் படை,ராணுவம்,கடலோரக் காவல் படை வீரர்கள்குழுவினரையும்  .மக்களுக்கு  தேவையான உணவு,தண்ணீர்,அத்தியாவசிய பொருட்களையும் கப்பல் மூலம் அனுப்பி நடவடிக்கை எடுத்தார்..
வெள்ளம் அதிக அளவில் சூழ்ந்து இருந்ததால் சென்னை சர்வதேச விமானத்தளம் பெரிய கண்மாய் போல் காட்சி அளித்தது.அதனால் நான்கு நாட்களுக்கும் மேலாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.ரயில் பாதைகளிலும், முக்கிய ரயில் நிலையங்களிலும் தண்ணீர் நிறைந்ததால் நான்கு நாட்களுக்கு மேலாக அதிக பட்ச ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ரோடு வழிகளை கேட்கவே வேண்டாம் ரோடே தெரியாத அளவுக்கு தண்ணீர்  சென்றதால் ரோடுகள் உடைப்பு எடுத்து உள்ளன.பாலங்கள் நொறுங்கிப்போய் விட்டன.எனவே வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் முற்றிலும் முடங்கிப்போய்விட்டன.
அதே போல் நகரத்துக்குள் எந்த  இடத்துக்கும் நகர பஸ்கள் செல்ல முடியவில்லை.ஒரு சில வழிகளில் சாதாரணமாக பத்து நிமிடங்களில் கடந்து செல்லும் தூரத்தை போக்குவரத்து நெரிசல் காரணமாக இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
பல இடங்களில் உள்ளதனியார்நிறுவனஅலுவலகங்கள்  தண்ணீரில் மூழ்கின. பெட்ரோல்,குடிதண்ணீர்,பால்,உணவு பொருள் கிடைக்காமல் மக்கள் திண்டாடக்கூடிய நிலை உருவானது.இதற்கிடையில்  அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வெள்ளப்பகுதிகளில் தவிக்கும் மக்களை  காக்கும் பணியில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டன. 
ஏறக்குறைய பதினைந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் சிலரை தவிர மற்றவர்கள் பாதுகாப்பான இடங்களில் பத்திரமாக  மீட்கப்பட்டு தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உணவு,குடிநீர்,மருத்துவ வசதிகள் முனைப்புடன் செய்து தரப்பட்டுள்ளது.
முதலில் அரசு சார்பிலே உணவுகள் மற்றும் குடிநீர் போன்றவை வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புக்கு இணங்க தொண்டு நிறுவனங்களும்,தனியார் அமைப்புகளும் வேண்டிய அளவு உதவிகள் செய்ய கரங்கள் கோர்த்தனர். மாவட்டங்களின் குறிப்பாக கோவை,திருப்பூர் பகுதியில்   இருந்து நிவாரணப் பொருட்கள்,உணவுகள்,பால்பவுடர், பிஸ்கட்டு,குழந்தைகள் உணவு,மருந்து பொருட்கள்   உடைகள், தண்ணீர்,பலவிதமான அத்தியாவசிய பொருட்கள் சென்னையை நோக்கி லாரிகளில் வந்து இறங்கின.இதில் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், போன்ற இடங்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.


 இந்த நூற்றாண்டில் சென்னைமக்கள் ஏன் தமிழக மக்கள் சந்தித்துள்ள ஒரு வெள்ள பேரிடர் என்று சொன்னால் மிகையில்லை.கிட்டத்தட்ட 1918 ஆம் ஆண்டுக்குப் பின் ஏறக்குறைய 97 ஆண்டுகளுக்குப் பின்னர் இதுபோன்ற மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் தண்ணீர் விரைந்து செல்வதற்கான  வடிகால் வசதி  இல்லை என்பது  தான் வல்லுனர்களின் கணிப்பு. நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பெருவெள்ளத்தில் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்று  தெரியவில்லை..காரணம் கடந்த நாற்பது,ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூட சென்னையைச் சுற்றி  சிறிதும், பெரிதுமாக 600 க்கும் மேற்பட்ட ஏரிகள் நீர்நிலைகள் இருந்ததாக கூறப்படுகிறது.அப்போது ஏற்பட்ட பெருமழையில் பாதிப்புகள் இந்த அளவுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை.ஏனென்றால் தண்ணிர் அதன் வழியே செல்ல வழி இருந்ததுதான் காரணம்.
ஆனால் இன்றைய நிலை என்ன ?
கண்ணுக்கு எட்டிய தூரம் விண்முட்டும் கண்கவர் கட்டிடங்கள் தான் தெரிகின்றன. இப்போது பல ஏரிகள் இருந்தஇடங்கள்  அடையாளம் தெரியாமல் மறைந்து விட்டன. தண்ணீர் போக வேண்டிய இடங்களை எல்லாம் நீங்கள் மறித்துக் கொண்டால் பின்னர் அந்த தண்ணீர் எங்கே போகும் ?. சென்னையில் மட்டும் தண்ணீர் செல்லும் பாதைகள்,நீர்நிலைகளில் ஏறக்குறைய  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன



நகர வளர்ச்சி முக்கியம் தான் .ஏற்கனவே அதற்கு அதற்கு என்று ஒதுக்கிய இடங்களை(குளம்,நீர் வழிப்பாதைகள் ) விட்டுவிட்டு செய்தால் இதுபோன்ற பெரும் துயரங்களை சந்திப்பதை நாம் தவிர்க்கலாம்.
சென்னையின் புறநகர்ப் பகுதி மக்கள் ஏறக்குறைய ஒரு மாதத்துக்கும்மேலாக துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன.மாணவர்களின் உடைமைகள் காணாமல் போய்விட்டன. .பெருமழை காரணமாக பாதிப்படைந்தவர்களுக்கு முழுவீச்சில் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.இதற்கிடையே நீ,செய்யவில்லை,நான் செய்யவில்லை என்று ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டு இருப்பதை விட அனைவரும் நம் மக்களை ,நமது சகோதர  உள்ளங்களை காக்க கைகொடுக்க வேண்டும்.
இப்போது தான் சற்று மழை குறைந்து நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.சில இடங்களில் ஆட்கள் வரவில்லை,உதவிகள் வரவில்லை என்று கூறியவர்களும் உண்டு.உதவி செய்பவர்கள் செல்வதற்கும் வழிவேண்டும் அல்லவா? எதையும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு வீண் குற்றங்கள் சுமத்துவது சால சிறந்தது அல்ல.


இப்போது பலவிதமான முனைகளில் இருந்து மக்களுக்கு அனைத்து நிவாரணங்களும் கிடைத்துக்கொண்டு இருப்பதை காணமுடிகிறது.அதோடு அரசு தேவையான உதவிகளை,பணமாகவும்,பொருளாகவும்,இழந்தவைகளை திரும்பவும் வழங்குவதற்கு அவகாசங்கள் கொடுத்து அறிவித்து உள்ளன. உயிரிழந்தவர் குடும்பங்களுக்கும் குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வருகிறது.அவை மக்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் அமைந்து இருக்கிறது.

பிரபலங்களின் வரிசையில் எப்போதும் முன்னிற்கும் சினிமா துறையினரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சில இடங்களில் நிவாரணப் பணிகளும்,பொருளும் வழங்கி வருகின்றனர்.இந்த மழை வெள்ளத்துக்கு சில தனியார் தொலைக்காட்சி நிலையங்களும் பெரும் பாதிப்பு உள்ளாகியுள்ளன.அவர்களும் மிகப்பெரிய அளவிலான பொருட்செலவில் இருந்து மீண்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கே தமிழ் நாட்டில் உள்ள பெரிய நிறுவனங்கள்,ஊழியர்கள் வெள்ள நிவாரணத்துக்கு தாராளமாக நிதிகள் வழங்கி வருகின்றனர்.  தங்களது நமது அண்டை மாநிலங்களில் இருந்து அரசுகள் வெள்ள நிவாரணத்துக்கு உதவிக்கரங்கள் நீட்டியுள்ளது வரவேற்கத்தக்கது.சுகாதார பணியாளர்கள் இரவு பகலாக குவிந்துள்ள குப்பைகளையும் அகற்றி வருகின்றனர். அவை முழுமையடைய இன்னும் சில நாட்கள் ஆகலாம்.அதன் பின்னர் பாதிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் அவற்றில் சிக்கி-சிதைந்துள்ள பொருட்களை கணக்கெடுக்க வேண்டும்.அப்போது தான் உண்மையான பாதிப்பு மக்களுக்கு தெரியவரும்.
மழை முழுமையாக நின்றபின்னர் சூரியபகவான் தனது சொரூபத்தை முழுமையாக காட்டிய பின்  தான் நாம் அனைத்தையும் மீட்டெடுக்க முடியும்.அதுவரை மக்கள் பொறுமை காக்க வேண்டும்.
இந்த மழையினால் எவ்வளவு சேதம் என்பதை முழுவதுமாக தண்ணீர் வடிந்த பின்னர் தான் காணமுடியும்.அரசு எவ்வளவு நிவாரணம் பொருளாகவும்,பணமாகவும் வழங்கினாலும் அவர்களது இழப்பை ஈடு செய்ய முடியாது.பாதிக்கப்பட்ட மக்கள் புத்துணர்ச்சியுடன் தங்களது பணிகளை தொடங்க வாழ்த்துகிறோம்
Share.

Leave A Reply