மனதில் உறுதி வேண்டும்,வாக்கினிலே இனிமை வேண்டும்.நினைவு நல்லது வேண்டும் என்றார் பாரதி.


  1. மனதில் உறுதி
  2. வாக்கில்  இனிமை 
  3. நினைவு நல்லது 
இவை மூன்றும் ஒரு பெண்ணுக்கு அமைந்து விட்டால் அவள் பாரதி கண்ட புதுமை பெண்ணாக வெற்றி நடைபோடுவாள்  என்பது உறுதி.

படிக்காத பெண்களில் இருந்து படித்த பெண்கள் வரை துன்பமும்,துயரமும் வருவது இயற்கை.அதை நாம் எப்படி எதிர் கொள்வது.எப்படி முறியடிப்பது என்பது தான் நமது திறமை.

  • துன்பம் வரும் போதுஎல்லாம் துவண்டு விடாமல் துணிந்து எதிர்க்க கற்றுக் கொள்ள வேண்டும்.
  • பிறர் நம்மை துன்பப் படுத்தும் போதுபொறுமையாக ஏற்றுக்கொண்டு,அவர்களை தாமாகவே உணரச் செய்வது.
  • வெளி இடங்களுக்கு நாம் தனியாக செல்லும் போது கண்டிப்பாக ,கண்டிப்புடன் நடந்து கொள்வது.
  • நாம் ஆடவருடன் பழகும் போது ஒரு எல்லையை  வரைமுறை படுத்திக் கொள்வது.
  • தனது மன வலிமையை தானே வளப்படுத்திக் கொள்வது.
இவை எல்லாம் நம்மை நாமே காத்துக் கொள்ள உதவும் , மனஉறுதியும்,கவசமும் ஆகும்.
எல்லா பெண்களும் கராத்தே கற்றுக்கொள்ள முடியாது.ஆனால் எல்லோரும் மன வலிமையை கற்றுக் கொள்ள முடியும்.அப்படி நாம் கற்றுக்கொள்ள காசோ,பணமோ,தேவை இல்லை.மனதில் உறுதி மட்டும் தான் வேண்டும்.அந்த மன உறுதியை வளர்த்துக் கொள்வது நம்மிடம் தன உள்ளது.

இந்த உலகிற்கு எவ்வாறு பஞ்ச பூதங்கள் தேவையோ அது போல் இந்த உடலுக்கு ஐந்து புலன்கள் அவசியம்.
அதில் ஒரு உறுப்புதான் வாய். அந்த வாயால் நமது எண்ணங்களை பிறர் அறியச் சொல்ல முடியும்.
"உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே இனிமை உண்டாகும் "என்றார் பாரதி.
உள்ளத்தில் உண்மையை வளர்த்துக் கொண்டு இனிமையாக சொற்களை பேசினால் இந்த உலகம் உயர்வு கொள்ளும்.
நல்ல சொற்கள் பல இருக்க சிலர் வாயைத் திறந்தாலே கேட்க முடியாமல் காதை பொத்திக் கொள்ளும் அளவிற்கு பேசுவார்கள். சிலர் பேசினால் விட்டால் போதும்  என்று ஓடும் அளவிற்கு பேசுவார்கள்.
இப்படி மனிதர்களில் பல விதமான மக்கள் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நாம் பேசுவதை செவிசாய்த்து கேட்கும் இனிமையான சொற்களை பயன்படுத்தி பேசினால் சொல்பவரும் மகிழலாம், கேட்பவரும் மகிழலாம்.
எல்லா மக்களையும் சகோதர,சகோதரியாக நேசியுங்கள்.பிறரைப் போற்றுவது வாழ்வியல் பண்பாகும்என்கிறார் மகாத்மா காந்தி.
நினைவு நல்லதாக போற்றும் பண்பு எங்கிருந்து வருகிறது.பொறாமை இல்லா மனதில் இருந்து வருகிறது.
பொறாமை இல்லா மனம் இருக்க என்ன செய்யலாம் ?

இதற்கு காந்திய வழியே சிறந்தது.மக்களிடம் அன்பு காட்டி சகோதர,சகோதரியாக நினைக்கும் போது அன்பின் ஆற்றலை உணர்வது பல சமயங்களில் எளிமையானதன்று. காந்தியடிகளின் அகிம்சைப் போராட்ட முறைகளை அறிந்த போது மார்ட்டின் லூதர்கிங்குக்கு ஓர் அவநம்பிக்கை ஏற்பட்டது.அவநம்பிக்கையை வெற்றிகொண்டு அன்பு,மற்றும் அகிம்சையின் ஆற்றல் ,திறனும்,வலுவும் மிக்கது என்பதை மார்ட்டின் லூதர்கிங் உணரும்படி செய்தார் காந்தி.
காந்தி கொண்ட உயரிய நல்எண்ணம் அகிம்சை வழியில் சுதந்திரம் பெறவேண்டும் என்பது,எத்தனை இன்னல்கள் வந்த போதும் அஞ்சாநெஞ்சம் கொண்டு அகிம்சை வழியில் அன்பால் வென்றவர் காந்தியடிகள்.


எனவே,நமது "நினைவு நல்லவற்றை நாடும் போதுநமது செயலும் நல்லவையாக முடியும்"  என்பது திண்ணம்.

பெண்களாகிய நாம் போராளிகள் அல்ல.அன்பில் சிறந்தவர்கள்.நமது எண்ணங்களை தைரியமாக பதிவு செய்யும் போது தான்,நமது கருத்துக்கள் பரிமாறப்படுகிறது.அப்படி பரிமாறும்போதுதான் நமது செயல் திறன் அதிக வீச்சுடன் வெளிவரும்போது அறியாமைகள் அகற்றப்பட்டு திறமைகள் வளர்க்கப் படுகின்றது.

எனவே பெண்கள் ஆகிய நாம் எழுத முன் வரவேண்டும்.சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
நமது பேனா முனைகளுக்கு ஓய்வு கொடுக்க கூடாது.நமது உணர்வுகளை மையமாக்கி எழுதி இந்த சமுதாயத்திற்காக அர்ப்பணிக்கிறோம்.
Share.

Leave A Reply