
"உணர்வற்ற உயிராகவும் ", உயிர் தரும் ஓர்
உடலாகவும் இருப்பது பெண் இனம்
"மது,மாது, சூது" என பெண்ணையும் ஓர்
போதை பொருளாக்கி பார்ப்பது ஆண் இனம்
அன்று பாண்டவர் சபையில் துச்சாதனன்
கைகளால் துயில் உரிக்கப்பட்டாள் ஓர் பெண்
இன்று பல துச்சாதனர்கள் பெண்களை தன்
கண்களால் துயில் உரிக்கிறார்கள்
இன்று எங்கே,அந்த கண்ணன் ?
அடுப்பாங் கரையிலிருந்து போராடி முற்றத்துக்கு
வந்தாள் ! முற்றத்திலிருந்து போராடி வாசலுக்கு
வந்தாள் !! வாசலிலிருந்து போராடி இன்று
வேலைக்கு வந்தாள் !!!
இப்படி போராடி போராடி ஜெயித்த
பெண்களைக் காட்டிலும் தோற்று அடுப்பாங்
கரையிலே அஸ்தியான பெண்கள் அதிகம்
சந்தேகம் என்னும் ஓர் உணர்வைக் கொண்டு
இங்கு சில ஆண்கள் ராமராகின்றனர்
சந்தேகத் தீயில் இருந்து மீண்டு எழ
முடியாமல் பல சீதைகள் பலியாகின்றனர் !
படுக்கையில் சமம் தரும் ஆண்கள் ஏனோ
அவள் தம் வாழ்க்கையிலும் சமம் என
நினைக்க மறந்து விடுகின்றனர்
மண்ணுக்கும் கேடாய் மதிப்பிரோ பெண் இனத்தை !