வான் தரும் கோடை மழை
   புவி உயிர் வாழத் தேவை 
தான் தனது எண்ணம் கொண்டு 
   ஏரி குளம் மூடியதன் விளைவு 
ஏன் இந்த மழை என்று 
   எண்ணித் தவித்த தவிப்பில் சென்னை 
ஆன்மா வாழ இயற்கை தேவை
   அழித்து வாழ்ந்ததால் இயற்கை சீற்றம் 
தண்ணீர் தண்ணீர் என்று தவித்தவர் 
   தண்ணீர் வெள்ளத்தில் தவிக்கும் நிலை 
கண்ணீர் விட்டு கதறும் குழந்தைக்கு 
   பால் கூட கிடைக்காத அவலம் 
மண் தெரியாத வெள்ளக் காடு 
   படகு விட்டு காப்பாற்றும் நிலை 
விண் பொய்த்துப் போகும் என்ற 
  அசட்டையால் வந்த அதிர்ச்சி வைத்தியம் 



சோதியாய் வந்த அண்ணாமலை அப்பன் 
   நீராய்  கொட்டி குளிர்ந்து போனான் 
சாதி மதம் பார்க்காத இறைவன் 
   உயர்வு தாழ்வு பார்க்க மாட்டான் 
போதிமர புத்தர் போதனை போல் 
   ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் 
மோதி முட்டி வரும் தண்ணீருக்கு 
   எல்லோரும் சமம் தான் என்று !
Share.

Leave A Reply