ஆரோக்கியமான குழந்தையாக உருவாவதற்கு உங்கள் குழந்தைகளை நன்றாக விளையாடவிடுங்கள்.வியர்த்து விறுவிறுத்து களைத்துப் போகும் வரை விளையாட அனுமதியுங்கள்.குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு,சத்தான உணவுகளும்,விறுவிறுப்பு ,வீரம் மிகுந்த விளையாட்டுகளும் மிகவும் முக்கியம்.
சத்தான உணவு ஒகே.வீரம் மிகுந்த விளையாட்டை விளையாடுவதற்கு எங்கே போவது ? இன்றைய சூழ் நிலையில் நகரத்தில் வாழும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் சுற்றிச் சுற்றி வரவேண்டும்.வாழவேண்டும் என்பது நியதி ஆகிவிட்டது.
கிராமங்களில் உள்ள குழந்தைகள் விளையாடுவதற்கு திறந்த வெளி இடங்கள் ஏராளம்.மண்ணில் உருள்வது,மரத்தில் ஏறுவது,நீரில் நீந்துவது என்று இருக்கும். இப்போது அங்கெல்லாம் கூட இவற்றுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வந்து விட்டனர்.
நகர்ப்புற குழந்தைகள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கூட மைதானத்தில் விளையாடுவதுடன் சரி.அதுவும் கட்டாயத்தின் பேரில்.பாதி குழந்தைகளுக்கு விளையாடும் ஆர்வமே போய்விடுகிறது.அந்த நேரத்தில் எங்காவது மரத்தடியில் அமர்ந்து கதை பேசுவது சகசமாகிவிட்டது.
இப்போது உள்ள பெற்றோர்கள் உலகத்தின் தரத்திற்கு ஏற்ப தமது குழந்தை உருவாக்க வேண்டும் என்ற பேராவலில் உள்ளனர். அதற்கு படிப்பு மட்டும் போதாது.விளையாட்டும் வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை தூண்டுகோலாக இருப்பதாக கருதி அவர்கள் எண்ணங்களை இறுக்கிவிடுகிறார்கள்.
நம் குழந்தை எல்லா வற்றிலும் சிறந்தவனாக விளங்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.இப்போது எல்லாம் இரண்டு வயதிலே குழந்தை பள்ளிக்கு செல்ல பழக்க வேண்டி உள்ளது.
குழந்தைகள் தூங்கும் நேரம்,எழும் நேரம்,சாப்பிடும் நேரம்,படிக்கும் நேரம் ,என்று பட்டியலிட்டு ஒரு அன்புச் சிறை வாழ்க்கையை உருவாக்கி விடுகிறார்கள்.அதோடு படிப்பு தவிர மீதி உள்ள நேரங்களிலும் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம்.அதில் குழந்தையின் விருப்பம் எதுவும் இல்லை.
ஒரு இரண்டு,அல்லது மூன்று வயது குழந்தையின் வாழ்க்கை தரம் அப்போதே பட்டியலிடப்பட்டு விடுகிறது. ஒரு குழந்தை ஒரு நாள் தனது வழக்கமாக செய்யவேண்டிய நேரத்தில் தூங்கி விழுகிறது.ஆனால் பெற்றோர்,அல்லது குழந்தையை பாதுகாப்பவர் அந்த குழந்தையை தூங்க விடுவதில்லை.இதுவும் சில இடத்தில் நடக்கத்தான் செய்கிறது.
குழந்தைகளுக்கு அனைத்துமே உணவு உடை,நடை எல்லாமே திணிக்கப்படுகிறது.இந்த கட்டுப்பாடுகள் தான் பிற்காலத்தில் அந்த குழந்தையின் வாழ்க்கையில் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.
சில-பல கட்டுப்பாடுகள்,வாழ்க்கை முறைகள் எல்லாம் அவர்கள் நலனுக்குத்தானே செய்கிறோம் ,அவர்கள் எதிர்காலம் சிறக்க வேண்டும் என்று தான் இவைகள் போதிக்கப்படுகின்றன இதில் என்ன தவறு இருக்கிறது ?
நீங்கள் சொல்வதில் எந்த தவறும் இல்லை.எந்த நியாயமும் இல்லை. அவர்களை எங்கே சுயமாக சித்திக்க விடுகிறீர்கள்.பிடிக்கிறதோ இல்லையோ எல்லாமே உங்கள் விருப்பம் என்றால் குழந்தையின் சுயசிந்தனையும்,அறிவாற்றலின் கூடுதல் திறமையையும் கிள்ளி எறிந்து விடுகிறீர்கள்.
உங்கள் கட்டுப்பாடுகள் உடைந்து அவன் வேலைக்கு செல்லும்காலத்தில் அவன் இளமையில் விட்டுப்போனவை அவனுக்கு எப்போதும் திரும்ப கிடைக்கபோவதில்லை.அதன் பலனை பல பெற்றோர்கள் தங்கள் முதுமை காலத்தில் அனுபவிக்க வேண்டியது இருக்கிறது.
குழந்தைகளை அடக்குமுறைக்கு உட்படுத்தாமல் நல்ல சிந்தனை,அன்பு,பாசம்,பகுத்தறிவு திறமையுடன் வளருங்கள்.உங்களே பிற்கால வாழ்க்கையும்,அவனின் அருமையான முற்காலவாழ்க் கையும் பிரகாசமாக அமையும் என்பதில் ஐயமில்லை.