வாழை மரம் தன்னையே பிறர்க்காக கொடுத்து பிறருக்காக வாழ்வதுடன் தன் பக்க கன்றுகளைப் பக்கத்தில் பரவவிட்டு வாழ்ந்து கொண்டே இருக்கும்.
தானும் வாழ்ந்து பிறருக்காகவும் வாழ வேண்டும் என வாழை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.இனி எவ்வாறு நமக்குப் பயன்படுகிறது என ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
”வாழைப்பூ” துவர்ப்பு சத்து உடையது , துவண்டல், வடை செய்து உண்ணலாம்.
”வாழைப்பூ மூலரத்தம் மாபிரமி வெட்டை பித்தம் கோழை, வயிற்றுக் – கடுப்பு கெல்லாம்- ஆழியனல் என்ன எரிகைகால் எரிவந்தொலைத் துடலில் மன்ன வளர்க குந்தாதுவை ”
— எனப் பாடியிருக்கிறார்கள்.
வாழைப்பூ வாழைப்பூ சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நோயில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம். சக்கரை நோய் வராமல் தடுக்கும். இரத்த மூலம், சீதபேதி குணமாகும்.
தயிருடன் வாழைப்பூ சேர்த்து உண்ணும் போது பெண்கள் கருப்பை பலப்படும். கருப்பை நோய்களில் இருந்து தடுக்கப்படும்.
வாழைப்பூ சாற்றுடன் கடுக்காயை பொடி செய்து சாப்பிட்டு வர மூல நோய் நலமாகும். ஆண்மை பெருகும், புத்தி தெளிவு உண்டாக்கும், கபம், சளியை போக்கும்.
வாழைப்பூவை உணவில் சேர்த்து நோய் வரும் முன் காப்போம். மேலும், வெள்ளைப்படுதல், கை கால் எரிச்சல் நீங்கும்.
வாழைக்காய்
வாழைக்காய் கூட்டு,பொரியல், புட்டு, பஜ்ஜி, செய்து உண்ணலாம்.
வாழைக்காயில் இரும்புச் சத்து, மாவுச் சத்து நிறைய காணப்படுகிறது.
வாழைக்காய் வாயு என்று ஒதுக்கத் தேவையில்லை. அளவாக உண்டு வளமாக வாழலாம்.
வாழைக்காய் தோல் சீவும்போது மேல் பகுதியை லேசாக சீவ வேண்டும், மேல் பகுதிக்கு வாயுவைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு.
வாழைப்பழம் வாழைப்பழம் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
குழந்தைகள் முதல் முதியவர் வரை சாப்பிடுவது நல்லது.
இதய நோய் வராது.
பக்கவாதம் வருவதைத் தடுக்கும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
வைட்டமின் ஏ.பி.சி. பொட்டாசியம் சத்தும் வாழைப்பழத்தில் உள்ளது.
வாழைத்தண்டு
வாழைத்தண்டு நார்ச்சத்து மிகுந்த உணவு. பொரியல், கூட்டு வைத்து சாப்பிடலாம்.
சிறுநீர் கற்கள் அடைப்பு வராமல் தடுக்கும். குடலில் சிக்கி இருக்கும் முடி,நஞ்சு வெளியில் வந்து விடும்.
சிறுநீர் கற்கள் அடைப்பு ஏற்பட்டால் வாழைத்தண்டு சாறு எடுத்து காலை மாலை குடித்து வர சிறு நீர் கற்கள் வெளியில் வந்து விடும்.
முற்றிய வாழைத்தண்டு சாறு 100 மி.லி. சேர்த்து கலக்கி குடித்தால் பாம்பு விஷம் முறியும். ‘தீ’ காயங்கள் ஏற்பட்டு விட்டால் வாழை பட்டையில் சாறு எடுத்து காயத்தில் போட்டு வர காயம் விரைவில் ஆறிவிடும்.
கொப்பளம் வருவது தடுக்கப்படும். வாழைப்பட்டை நாரைப் பூ தொடுக்க பயன்படுத்தலாம். வேர் பகுதியை சீவி நட்டு வைத்தால் புதிய கன்று வளர ஆரம்பிக்கும்.இப்படி ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன்படும் வகையில் இருக்கும் வாழை மரத்தை குலை தள்ளி இருக்கும் போது திருமணம், வீடு மனை புகுவிழா, கோவில் திருவிழா என நல்ல காரியங்களுக்கு மங்களப் பொருளாக வாழைமரம் கட்டப்படுகிறது.
வாழை இலைவிருந்தோம்பலுக்கு முக்கியமாகப் பயன்படுவது வாழை இலைதான். நல்லது, கெட்டது என்று எது வந்தாலும் வாழை இலை உணவு உண்ண பயன்படுகிறது.
வாழை இலையில் உள்ள பச்சையம் நாம் சாப்பிடும் போது நமக்குக் கிடைக்கிறது. தன்னையே பிறருக்குப் பயன் உள்ளதாக இருக்கும் வாழை மரத்தையும் பயன்படுத்துவோம் , நாமும் வாழை மரமாய் பிறருக்கு வாழ்ந்து காட்டுவோம்.
வாழைப்பழத்துடன் ,ஏலக்காயைப் பொடி செய்து பிசைந்து சாப்பிட்டு வர எல்லா நோய்களையும் கட்டுப்படுத்தும்.எனவே தான் கோயில்களில் வாழைப்பழத்தை பஞ்சாமிர்தம் செய்து பிரசாதமாக கொடுக்கிறார்கள்.
வருடப் பிறப்பு நாட்களில் வேப்பம் பூவுடன் வாழைப்பழத்தை பிசைந்து பிரசாதமாக கொடுக்கிறார்கள்.
வாழை மரம் வாழை மரமே வாழை மரமே வளவளப் பான வாழை மரமே இலை பூ காய் கனி தண்டு நார் என தந்து நீயும் மகிழ்வாய் உனைக் கண்டு பிறருக்குத் தந்து நானும் மகிழ்வேன்.