Author: admin

ஒரு ஊரில் செல்வந்தர் செங்கோடன் இருந்தார். அவருக்கு ராமு, சோமு, காமு என்ற மூன்று மகன்கள் இருந்தார்கள். ராமுவிற்கு திருமணமாகி அதே ஊரில் வசித்து வந்தான்.சோமு தந்தையின் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டான். காமு வெளியூரில் படித்துக் கொண்டு இருந்தான். தந்தையின் செல்வத்தை ராமு சிறிது…சிறிதாக கரைப்பதிலே கவனமாக இருந்தான்.வேலைக்கு போகாமல் எத்தனை தீய பழக்கங்கள் இருக்கிறதோ அத்தனைக்கும் அடிமையாகி தன்னையும் கொஞ்சம்…கொஞ்சமாக அழித்துக் கொண்டு இருந்தான். காமு படிப்பதில் கெட்டிக்காரனாக இருந்தான்.அதனால், படித்து முடித்த கையுடன் வேலையும் தேடி வந்தது.காமு நகர் புறத்திலேயே வசித்து வந்தான். இந்த சூழ்நிலையில் சோமுவிற்கு திருமணம் செய்ய எண்ணிய செங்கோடன் பெண் பார்த்து முடித்தார்.திருமண வேலைகள் எல்லாம் நடந்து கொண்டு இருந்தன. பக்கத்து கிராமத்தில் தான் பெண் வீடு அங்கு தான் கல்யாணம்.தனியார் பேருந்து பிடித்து மாப்பிள்ளை வீட்டார்,மற்றும் உயரவினர்கள் எல்லாம் கிளம்பினார்கள். கேலியும் ,கிண்டலுமாக பயணம் செய்ததில் அலுப்புத் தெரியாமல் ஊர்வந்து சேர்ந்தார்கள். மாப்பிள்ளை…

Read More

நீதிக் கதை -வெ.ரா.நளினி -தொகுப்பு ————————கருணை —————இவ்வியக்கத்தக்க சம்பவம், 1919-செப்டம்பர் 12 ஆம் நாள் ‘உகண்டா ‘ நாட்டில் ,ஒரு சிறிய கிராமத்தில் நடந்தது. ‘மசாய்’ என்ற ஆதிவாசிகள் அடர்ந்த காடுகளில் சிறு சிறு நிலப் பகுதியைத் தமக்குச் சொந்தமாக்கி விவசாயத் தொழில் செய்து வாழ்ந்து வந்தனர்.அங்கு புதிதாக மணம் புரிந்த தம்பதிகள் மகிழ்ச்சியாகத் தங்கள் வாழ்வைத் தொடங்கினர்.ஓரிரு வருடங்களில் தாய்மை அடைந்த அந்தப் பெண்,குழந்தை பிறந்த நாட்களில் நோய்வாய்ப்பட்டு இறந்து போய் விட்டாள்.இந்நிலையில் ,நிலத்தில் விளையும் கிழங்கு ,காய்கறிகள்,பழங்கள் போன்றவற்றை ‘கொரில்லா’ என்ற ஒருவகைக் குரங்குகள் நாசப்படுத்தித் தொல்லை கொடுத்தன. தன்னந்தனியான அந்த வாலிபன்,தாயற்ற தன் அருமைக் குழந்தையைப் பாதுகாக்கவும், உழைத்துப் பயிரிட்ட உணவைக் கொரில்லாக்காளிடமிருந்து காக்கவும் இடைவிடாமல் போராடித் துன்புற வேண்டியிருந்தது.ஒருநாள் குழந்தை தூங்கும் நேரம், கூப்பிடு தூரத்தில் நிலத்தைப் பண்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்தான்.அப்பொழுது குழந்தையின் அழுகுரல் கேட்டதும் வீட்டை நோக்கி விரைந்தான். அவன் சற்றுத் தொலைவில் வரும்போதே, பெண்…

Read More

சித்த-சிக்கன மருத்துவம் ————————————–ஊகாரம் -ஊஞ்சல் ஊஞ்சல் ஆடும் மனம் நல்லது,கெட்டது என்பதை தெரிந்து ஊஞ்சல் ஆடும். அன்று…அன்று சமைத்த உணவை சாப்பிடுவது உடல் நலனுக்கு நல்லது.ஊசுதல் மறுநாள்… மறுநாள் என வைக்கும்போது செய்த உணவு சுவை கெட்டு,மணம் கெட்டு இருக்கும். கெட்டது என்று தெரிந்தும் அதை தூக்கிப் போட மனம் இல்லாமல் ஊஞ்சல் ஆடும் மனம் சாப்பிடச் சொல்லும். உடனே அதை சாப்பிட்டு நோயை சம்பாதித்துக் கொண்டு வாந்தி, பேதி ,வயிற்று வலி இப்படி உபாதைகளுக்கு ஆளாகி மருத்துவரிடம் சென்று மருந்து,மாத்திரை என சாப்பிட்டு உடலும், உள்ளமும் கெட்டு மேல் மூச்சு ,கீழ் மூச்சு வாங்கி இத்தனை அவதிகளையும் பட்டுவிட நேரிடும்.ஊசுன பொருளை சாப்பிடக்கூடாது என்ற மன உறுதி இருந்தால் மீதமுள்ள சிறியதை தூக்கிப் போட்டுவிட்டு நிம்மதியாக ஆரோக்கியமாக இருக்கலாம். ஊஞ்சல் ஆடும் மனம் சாப்பாட்டு விசயத்தில் இருக்கக் கூடாது.பிடித்த உணவு என்று அதிகம் சாப்பிடவும் கூடாது.பிடிக்காதுஎன்று பட்டினியாக கிடக்கவும் கூடாது.சாப்பிட்டவுடன் எங்காவது போய்…

Read More

அப்பளக்குடுமி தாத்தா கதைகள்  நிறைமதியன் ————————–அப்பளக்குடுமி தாத்தா உள்பட சிறுவர்,சிறுமிகள் கூடி இருந்தார்கள்.தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார். அப்போது….கூட்டத்தில் ”போடா நொண்டி” என்று குரல் கேட்டு தாத்தா திரும்பினார்.”கால் ஊனம் என்பதற்காக கேலி பேசக்கூடாது. ஒருவர் உடல் ஊனமாக இருக்கலாம்.ஆனால்,மனம் வலுவாக இருக்கும்…”…அதற்கு ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்”என்றார்…’ஒரு ஊரில் ஏழு அண்ணன்களும், ஒரு தங்கையும் இருந்தார்கள். அதில் கடைசி அண்ணனுக்கு ஒரு கால் நொண்டி .அவனது பெயர் நிறைமதியன்.தம்பியை அண்ணன்கள் அவ்வளவாக கவனிப்பதே கிடையாது.இருந்தாலும் கடைசி தம்பி தன்னம்பிக்கையும், புத்தி கூர்மையும் உள்ளவனாக விளங்கினான்.தங்கை கமலாவிடம் அண்ணன்களுக்கு மிகுந்த அன்பு.அவளை அவர்கள் கண் இமை போல் காத்து வந்தார்கள்.தங்கை ‘எள்’என்றால் இவர்கள் ‘எண்ணெய்’யாக நின்றார்கள்.எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்து அவளை சந்தோஷமாக வளர்த்து வந்தார்கள்.அவளும்,பெரியவளாக வளர்ந்து விட்டால். தங்கப் பதுமைபோல் காணப்பட்டாள்.வளர்ந்து விட்டாலே ஒழிய குறும்புத் தனமும்,சிறுபிள்ளைத்தனமும் இருந்து கொண்டே இருந்தது.ஒருநாள் அவள் தோழிகள் எல்லோரும் பக்கத்தில் இருக்கும் தோப்பிற்கு…

Read More

.கிருஷ்ணரின் கீதை அர்ஜுன உபதேச யோகம் -தொடர்ச்சி ————————— அர்ஜுனன்.மேலும் கூறினான்,ஆட்சி பீடத்தின் பேராசையால் போர் புரிய முனைந்துள்ளனர்.நாமே அரசு ஆசையைத் துறந்து போரிலிருந்து விலகுவோமானால் அவர்கள் யாரையும் கொல்ல எக்காரணமும் இருக்க முடியாது.ஒருக்கால் அவர்களில் யாராவது என்னைக் கொல்ல விரும்பி கொல்ல வந்தால் நான் அவர்களை கொல்ல மாட்டேன் என்றான் அர்ஜுனன் .கெடுதி செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு எதிரே வரும் ஆததாயியை ஆலோசியாமல் கொன்று விட வேண்டும் .ஆததாயியைக் கொல்வதால் கொல்பவருக்கு ஒரு குற்றமும் ஏற்படாது.1.தீ வைப்பவன் ,2.நஞ்சு கொடுப்பவன் ,3.ஆயுதமெடுத்துக் கொல்ல வருபவன்.,4.செல்வத்தைப் பறித்துக் கொள்பவன் ,5.நிலத்தைப் பறித்துக் கொள்பவன் ,6.மனைவியைப் பறிப்பவன்.    இந்த ஆறு தீய குணங்கள் உடையவரே ஆததாயி எனப்படுபவர். இந்த ஆறு தீய குணங்களும் துரியோதனனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் இருந்தது.1.அரக்க மாளிகையில் நெருப்பு வைத்துப் பாண்டவர்களை உயிரோடு கொளுத்த முயன்றார்கள்,2.பீமசேனனின் உணவில் நஞ்சைக் கலந்தார்கள்.3.கையில் ஆயுதம் எடுத்துக் கொல்லத் தயாராக இருக்கிறார்கள்.4..சூதாட்டத்தில் வஞ்சனை செய்து பாண்டவர்களின் அணைத்துச்…

Read More

அன்னையின் வளர்ப்பு———————————-தாத்தாவைச் சுற்றி சிறுவர்களும், சிறுமிகளும் வட்டம் போட்டு உட்கார்ந்து இருந்தார்கள். அதில் இருந்து ஒரு சிறுமி எழுந்து, N” தாத்தா என் பொம்மையை ரகு எடுத்துக் கொண்டு தர மாட்டேன் என்கிறான்” என்று அழுதாள்.’ரகு இங்கு வா. அந்த பொம்மையை கொடுத்துவிடு. உனக்கு தாத்தா நல்ல கதை சொல்கிறேன்” என்று அருகில் அமரச் சொன்னார்.கதை கேட்கும் மகிழ்ச்சியில் பொம்மையை கொடுத்து விட்டான் ரகு.அப்பளக்குடுமி தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.” ஒரு ஊரில் கதிரேசன்,கல்யாணி என்று கணவனும்,மனைவியும் இருந்தார்கள்.அவர்களுக்கு ஒருமகன் பிறந்தான்.அவனுக்கு கண்ணாயிரம் என்று பெயர் வைத்து சீராட்டி,தாலாட்டி வளர்த்து வந்தார்கள்.அவனும் வளர்ந்து நான்கு வயதைத் தொட்டுவிட்டான்.ஒரே பையன் என்பதால் கல்யாணி மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தாள்.ஒரு நாள் அவன் பக்கத்து வீட்டு சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.அந்தப் பெண் குழந்தை ஒரு பொம்மை வைத்திருந்தது.அந்தப் பொம்மை மீது ஆசை வந்தது கண்ணாயிரத்துக்கு.அந்தச் சிறுமிக்குத் தெரியாமல் பொம்மையை எடுத்துக் கொண்டு வந்து அம்மாவிடம்…

Read More

கொடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.விளைந்த பயிர்கள் இருக்கும் வயலில் மழை அதிகமாக பெய்து பயிரை கெடுப்பதும் மழை.மற்றொரு பக்கம் கரை நிறைய தண்ணீர் கொடுத்து விளைச்சல் எடுக்க வைப்பதும் மழை..விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.வானத்தில் இருந்து மழைத்துளி விழாமல் போனால் விவசாயம் மட்டுமல்ல ,மாற்றாக பசுமையான புல்லின் தழைகள் கூட காண்பது அரிதாம்..நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின் மழை தான் கடல் நீர் உறிஞ்சி பெய்யாவிடில்.நீண்ட கடலும் நீர்நிலை குறைந்து போகும்.வயல் வருந்தும்

Read More

கிருஷ்ணரின் கீதை -அர்ஜுன உபதேச யோகம் -தொடர்ச்சி ‘யுத்ததிற்காகக் கூடியிருக்கும் இந்த கெளரவர்களைப் பார் என்று கிருஷ்ணன் கூறியதற்கு காரணம் இருக்கிறதா ?’ (போல்ட்)‘’ஆமாம்’’ என்ற சஞ்ஜயன் விவரிக்க ஆரம்பிக்கிறான் .‘அர்ஜுனா ,நீ சொன்னபடியே இங்கிருந்து எல்லோரையும் நன்றாகப் பார்க்க முடியுமோ, அந்த இடத்தில் கொண்டு வந்து நான் ரதத்தை நிறுத்திவிட்டேன் .ரதம் அசையாமல் நிற்கும்.எவ்வளவு நேரம் பார்க்க வேண்டுமோ, அவ்வளவு நேரம் நீ நன்றாகப் பார்.கெளரவர்களைப் பார் ,எல்லோரும் உன்னுடைய உறவினர்கள் நன்கு பார்த்துக் கொள் , என்று சொல்லிய கிருஷ்ணன் அர்ஜுனனுடைய உள்ளத்தில் மறைந்திருக்கும் பாசத்தை எழுப்பி விடுகிறார்..அர்ஜுனன் பந்த பாசத்தை நினைத்துத் தமது பலவீனத்தைக் கருணையுடன் வெளிப்படுத்துவதற்கு இந்தச் சொல் வித்துப் போல் ஆகிவிட்டது.அர்ஜுனனை நிமித்தமாக வைத்துக் கொண்டு உலக நன்மைக்காகவே கிருஷ்ணன், தாமே இந்தச் சொற்களால் அர்ஜுனனுடைய உள்ளத்தில் இப்படி ஓர் எண்ணத்தை உண்டு பண்ணி யுத்தம் செய்ய மறுக்கும்படி செய்கிறார்.அதன் விளைச்சலாக கிருஷ்ணனின் முகத்தாமரையில்…

Read More

 உகரம் உசைக்காலம் வைகறைப் பொழுது விடியும் காலத்தில் எழுந்திரிக்கும் போது வெளிமண்டலத்தில் இருந்து வந்திருக்கும் சுத்தமான காற்றை சுவாசிக்கும்போது உடலுக்குப் புத்துணர்வு ஏற்படுகிறது.”குயில் கூவி துயில் எழுப்பும்” என்பது போல் குயில், குருவி, காகம், அணில், பறவையின் காணம் காதுக்கு சங்கீதமாகும்.உசைக் காலம் என்பது பிரம்ம முகூர்த்தம் என்பர். இந்த நேரத்தில் படிப்பது,உடல் பயிற்சி செய்வது,பாடல் பாடுவது,பூஜை செய்வது இவற்றிற்கு உகந்த நேரம்.மனம் மகிழ்ச்சி அடையும்.மனம் அமைதியாகவும் ,மகிழ்ச்சியாகவும் இருந்தால் நோய் பக்கத்தில் வர பயப்படும்.வந்தாலும் காற்று போல் பறந்தோடி விடும்.உச்சி தலையின் மையப்பகுதி ,பிறந்த குழந்தை சுவாசிக்கும் பகுதி உச்சிக்குழி,உச்சியில் சூடு,வெப்பம் தாக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்,”உச்சியைக் காய வைக்கக் கூடாது” என்று பெரியவர்கள் சொல்வார்கள்.உச்சி குளிர எண்ணெய் தேய்,எண்ணெய் தேய்த்துக் குளி என்பது எல்லாம் உச்சி வெப்பத் தாக்குதல் ஏற்படாமல் இருக்கத்தான் .உச்சி வெப்பமானால் முடி உதிரும்.உடல் சூடு உடல் சூடு ஆனால், வயிற்றுவலி,நீர்க்கடுப்பு,சீதபேதி போன்ற நோய்கள் தாக்கும்.வயிற்றுவலி ஏற்பட்டால் வயிற்றிலும்,உச்சியிலும் குளிர்ந்த…

Read More

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.வானத்தில் இருந்து பெய்யும் மழை பெய்யாது போனால் நெல் விளையாது.நீரில்லாமல் உலகத்து உயிர்கள் வினைபயனால் வெகுண்ட பசியால் வாடுவர்.ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்.ஏரின் உழார் உழவர்கள் , ஏன் என்றால் மேகம் நீர் பெய்யாது வெள்ளம் செல்லாது வளம் இல்லாத வாய்க்கால் கண்டு.

Read More