ஒரு பெண் தாய்மை அடையும் போது முழுமை  பெறுகிறாள். அந்த பத்து மாதமும்  அவள் சாப்பிடமுடியாமல் வாந்தி எடுத்து கருவை சுமந்து உட்கார முடியாமல் நடக்க முடியாமல் ,தூங்க முடியாமல் அவள் படும் வேதனைகளை சுகமாய் ஏற்று ..
கருவாகி  உருவாகி   சிசுவாகப்  பிறந்தாள் 
   இருள்   கண்டு  ஒளி கண்டாள்
குருவான  தாயின்  தாலாட்டுக்  கேட்டாள்
   இசையோடு  குரலோசை இனிமையை உணர்ந்தாள்
இருகரம்  தூக்கி   உச்சி  முகர்ந்த 
   தந்தை  முகம்பார்த்து  கை-கால் உதைத்தாள்
உருக்கமான   நிலைகண்டு  தாயின்  சுமை 
   சுகமாகி  நெகிழ்ந்து  அன்பில்  கரைந்தாள்

உச்ச கட்டமாகப் பிரச வ வலி தாங்கி குழந்தை பிறந்ததும் உடல் அளவில் பாதித்தாலும்.
குழந்தை முகம் கண்டு இன்புற்று தன் சுகம் மறந்து குழந்தையின் நலன் கருதி குழந்தையின் நலனே தன் நலனாக எண்ணி சுகம் அடைபவளே பெண்.

வளர்க்கும் பருவம் 

பெற்ற குழந்தையை பேணி வளர்க்கும் போது ”கண்ணும் கருத்துமாக  இரவு குழந்தை அழும் போது எழுந்து கண்விழித்து தன் உதிரத்தை பாலாக கொடுத்து , சளிப்பிடிக்காமல், காய்ச்சல் வராமல் பார்த்து …பார்த்து வளர்த்து…



அவர்களுக்கு உடல் உபாதை என்றால் தான் வருந்தி, அவர்கள் உடல் நலம் காத்து ,அந்த..அந்த  பருவத்திற்கு  ஏற்ப உணவு கொடுத்து,பேச கற்றுக் கொடுத்து உறவை அறிமுகப் படுத்தி விளையாடும் போதுஅவளும் குழந்தையாகி விளையாடி ,  தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்துகள்  அந்த..அந்த…… மாதத்திற்கு கொடுத்து காய்ச்சல் வந்து,   சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு கதை சொல்லி பாட்டு சொல்லி  உணவு ஊட்டி தன் சிரமம் பொறுத்து குழந்தையின் வளர்ச்சி ஒன்றே  பெரிதாக என்னும் இடத்தில் ,பொறுப்பு உள்ள பெண்ணாக இருக்கிறாள். குழந்தை வளர்ப்பு சுமையாக இருந்தாலும் சுகமாக ஏற்பவள் தாய்.

இளமை பருவம் 
இளமை பருவம் வரும் போது குழந்தையை பள்ளிக்கூடம்  அனுப்பி ,கல்வியும், ஒழுக்கமும் நற்பண்புகளும் கற்றுக் கொடுத்து , கணவன் , மாமி,  மாமனார்,  நாத்தனார், கொழுந்தன் என்று கவனித்து , அலுவலகம் செல்லும்  பெண் என்றால் இல்லத்தையும் கவனித்து அலுவலக வேலைகளையும் கவனித்து காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கச் செல்லும் வரை சுழன்று கொண்டு வேலைகளை கவனித்தாலும் தனது குடும்பம், தனது குழந்தைகள் ,தான்  வேலை செய்யும் அலுவலகம் என்ற எண்ணத்தில் தனக்கு உள்ள பொறுப்புகளை எண்ணி திட்டமிட்டு செயல்படுவாள்.சோர்வு வந்தாலும் சுகமாக ஏற்பவள் தாய்.


கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் கல்யாண வரன் தேடி உரிய வயதில் திருமணம் செய்து  பிள்ளைகளை குடும்பம் ஆக்கி அவர்களுக்கு குழந்தைகள்  பிறக்கும் போது இவர்களுக்கு முதுமை வந்தாலும் ஓடி…ஓடி  …. கவனித்து பேரன் ,பேத்தி என, அவர்களை கவனிக்கும் போதும் பெண்களுக்கே  வேலைகளும், பொறுப்புகளும் அதிகம் என்றாலும் அதை மனமகிழ்வுடன் ஏற்று சீராட்டி,பாராட்டி சீர் தூக்கிப் பார்ப்பவளே பெண்.

முதுமை பருவம் 
வாழ்ந்து ,அனுபவித்து முதுமையை எட்டும்போது அவளுக்கு என்று பல அனுபவப் பாடங்கள் அவற்றை பிறருக்குச் சொல்லிக் கொடுத்து தன்னுடன் முடியாமல் வழிவழியாக வாழையடி வாழையாக விதைப்பதே முதுமை பருவம்.


இக்கால கட்டங்களில் நோய் தாக்கினால் தாங்கிக் கொண்டு குழந்தைகள் நலனே தன் நலனாக கருதி அவர்கள் மனம் போல் நடந்து துன்பம் வந்தாலும் இன்பமாக ஏற்று அனுசரித்துப் போகும் போது சுகமாக ஏற்பவளே பெண்.

மனைத்தக்க மாண்புடையாள் ஆகித்தற் கொண்டாள்
வளத்தக்கான்  வாழ்க்கைத் துணை    (குறள் 51)
இல் வாழ்க்கைக்கு ஏற்ற நற்குணம் உடையவளாகி தன் கணவனின் வருமானத்திற்குத் தகுந்தபடி வாழ்க்கை நடத்தும் மங்கை சிறந்த மனைவி என்கிறார் வள்ளுவர்.
மேலும், 
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் 
இல்லவள் மாணாக் கடை           (குறள் 53)
துணைவி நற்குணங்கள் பெற்றிருந்தால் வாழ்க்கையில் இல்லாதது ஒன்றும் இல்லை.அவள் துர்குணம் பெற்றவள் ஆனால், வாழ்க்கையில் இருப்பதும் ஒன்றும் இல்லை என்கிறார் வள்ளுவர்.ஒரு குடும்பத்திற்கு உயர்வும் ,வீழ்ச்சியும் பெண் என்பதைத்தெளிவாக கூறுகிறார்.


எனவே ,பெண் என்பவள் சுமைகளை சுகமாக ஏற்று வீட்டிற்கும் ,நாட்டிற்கும் சுகத்தை கொடுப்பவள் பெண்.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் 
நன்கலம் நன் மக்கட் பேறு,  (குறள் 60)
மனைவியின் நற்பண்புகளே இல்வாழ்க்கைக்கு மங்களம் என்பார்கள்.நல்ல குழந்தைகள் வாய்ப்பது குடும்பத்திற்குச் சிறந்த ஆபரணங்கள் அணிவித்தது போலாகும்.

சுமைகளை சுகமாக ஏற்பவள் பெண் 
   சுகந்த மலராய் புன்னகை சிந்தி 
ஆமை போல் புலன் அடக்கி 
   ஆண்மைக்கு சேவை செய்து பணிந்து 
ஊமை போல் மெளனம் காத்து 
   உயர்வு கொள்ள பாடு பட்டு 
உமையவள் சக்தி பெற்று சுகமாய் 
   உழைப்பவள் பெண் சுகமான பெண்

Share.

Leave A Reply