தேவசந்திரன் எழுதும்
தொடர் கதை
பார்சல்கள் உடைக்கப் பட்டன!
மேலும், இந்த கரடி பொம்மைகளையும் உடைத்துப் பார்க்க வேண்டும்!…
அழகான கரடி பொம்மைகள் சில நொறுக்கப்பட்டன!
ஆனால், எதிர்பார்த்தபடி எதுவும் இல்லை!
தவறான தகவலா? இன்ஸ்பெக்டர் யோசித்தார்.
சாரி! தொந்தரவுக்கு மன்னியுங்கள் என்றார் இன்ஸ்பெக்டர்.
பரவாயில்லை சார்! நல்லதுக்குத் தான் காலமே இல்லையே!
அவன் அவ்வளவு தெளிவாக சொன்னானே
இடையில் என்ன ஆயிற்று!…ஏமாந்து விட்டோமா?
நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெரிய கட்டிடம்.
அழகான பொம்மைகள் ஆயிரக்கணக்கில் உருவாகிக் கொண்டிருந்தன.
விரைந்து வந்த அந்த கார் உள்ளே நுழைந்தது.
உள்ளே சென்று நின்றது கார்.
காரில் இருந்து திமு திமு என்று இறங்கினார்கள்!
ஒரு அறைக்குள் நுழைந்தனர். கதவுகள் மூடிக் கொண்டன! உடனே….
இருள் சூழ்ந்த அந்த அறை மெல்ல கீழே இறங்கியது.
சிறிது நேரத்தில் அப்படியே நின்றது. கதவு திறந்தது!
அனைவரும் ஒரு மிகப்பெரிய ஹாலில் நுழைந்தனர்.
சுற்றிலும் எலக்ட்ரானிக் கருவிகள். ஒரு கரடி பொம்மை வாயை பிளந்தபடி இருந்தது! வாயில் இருந்து பச்சை விளக்கு விட்டு விட்டு எரிந்தது!
அதைத் தொடர்ந்து….
ஹா…ஹா…ஹா…
சபாஷ் வெங்கு என்ற குரல் கேட்டது.
வெங்கு! உனது திறமையை மெச்சினேன்!
எல்லாம் உங்கள் உத்தரவு பாஸ்!
அதோடு அந்த இன்ஸ்பெக்டர் புலியின் முகத்தில் நன்றாக கரியை பூசி விட்டாய் வெங்கு!
இந்தா உனது திறமைக்கு எனது பரிசு!
ஆயிரம் ரூபாய் கட்டு ஒன்று மேஜையில் விழுந்தது! மேலே பார்த்தான் வெங்கு. பணம் எங்கே? இருந்து விழுந்தது…
வெங்கு பணத்தை எடுத்துக் கொண்டான்.
ஒரு எச்சரிக்கை! காட்டி கொடுக்க முயலும் துரோகிகளுக்கு என்ன தண்டனை தெரியுமா?
மல்லனைப் போல் மணலிலே பிணமாக சுட்டு வீழ்த்தப் படுவார்கள்.
ம்… எல்லோரும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக நினைத்து ஆனந்தத்தில் மூழ்குங்கள்!…
ஓவர்!… போகலாம்!!
ஓகே பாஸ்!
தொடரும்.