40-கைவினை கரவேல்

மாலை நேரம் சிறுவர்கள் எல்லோரும் பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

விளையாண்டு கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

எதிர் பாராத விதமாக பந்தை பிடிக்கப் போகும்போது கால் தடுக்கி விமல் கீழே விழுந்துவிட்டான்.

அடுத்த நெடியே கால் ஒடிந்து விட்டது போன்ற வலியுடன் உட்கார்ந்து விட்டான் விமல்.

சந்தோசமாக விளையாடிக் கொண்டு இருந்த சிறுவர்கள் சோகமாக அவனை சூழ்ந்து கொண்டார்கள்.

கண்ணன் மட்டும் விமலுக்கு ஒன்னும் ஆகாது,மெதுவாக எழுந்து வா! என் அம்மா சரி செய்து விடுவார்கள்… என்று கையைப் பிடித்துக் கொண்டு அழைத்து வந்தான்.

விமலும் கால் வலியுடன் நொண்டிக் கொண்டு வலியால் அழுது கொண்டு வந்தான்.

என்ன என்று விசாரித்த கண்ணன் அம்மாவும், பயப்பட வேண்டாம் சரியாகிவிடும் என நாட்காலியில் அமர வைத்தாள்.

உள்ளே சென்று விளக்கெண்ணெயுடன் வந்தவள் விமல் காலில் தடவி நீவி விட்டாள்.

விமல் வலியால் அழுதான் சரியாகிவிடும் என்று சொல்லிக் கொண்டே மெதுவாக… மிக மெதுவாக நீவி சுருண்டு இருந்த நரம்பை சரி செய்துவிட்டாள். கண்ணனின் அம்மா.

இப்போது எப்படி இருக்கிறது என்று விமலிடம் கேட்டாள் இப்போது பரவாயில்லை என்ற விமல் கால் ஒடிந்து விட்டதோ! என்று பயந்துவிட்டேன் என்றான்.

இன்னும் இரண்டு நாட்கள் வா…! சரியாகிவிடும் என்றவள், தனக்குத் தெரிந்த சித்த வைத்தியத்தை தகுந்த நேரத்தில் மறைக்காமல் செய்ததால் விமலும் இரண்டு நாட்களில் பூரணமாக குணமாகி விட்டான்.

பிறருக்கு உதவும் எந்த வேலையையும் மறைக்கக் கூடாது என்பதை தான்
ஔவையாரும் “கைவினை கரவேல்”   என்று சொல்லிச் சென்று உள்ளார்கள்.

Share.

Leave A Reply