Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

ஒரு டம்ளர் அளவு சரி விகிதத்தில் பாலும் தண்ணீரும் எடுத்துக் கொண்டு இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி தட்டிப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் . உடல் வலு குறைந்தவர்களுக்கு இழந்த வீரியத்தைப் பெற கொத்தமல்லி பயன்படுகிறது. கொத்தமல்லி சட்னி, கொத்தமல்லி துவையல் மற்றும் பொரியல், குருமா, குழம்பு போன்றவற்றில் கொத்தமல்லித் தழை சேர்த்து உணவில் உண்டால் உடல் வலிமை பெற்று இழந்த வீரியத்தை பெற முடியும். குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் ஒரு டம்ளர் தண்ணீரில் கொத்தமல்லிதழையை ஊறவைத்து வடிகட்டி கொடுக்க வேண்டும்.இவ்விதம் கொடுத்தால் வயிற்றுப் போக்கு குணமாகும். வாய் நாற்றம் அடித்தால் கொத்தமல்லி போட்டு ஊறவைத்த தண்ணீரை வாய் கொப்பளித்து வர வாய் நாற்றம் போகும் . சிலருக்கு ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அவர்கள் கீழே குறிப்பிட்டபடி குடித்தால் ஏப்பம் வராது . இஞ்சி தட்டிப்போட்டு சோம்பு, கொத்தமல்லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து…

Read More

“கேசவா ,ஞானியான மகாபுருஷர் எந்த ஒரு கர்மமும் செய்ய மாட்டார்களா ,என்பதை விவரியுங்கள்” எனக் கேட்கிறான் அர்ஜுனன் . அர்ஜுனா ,ஞானிக்கு மனத்துடன் புலன்களுடன் தொடர்பு அற்றுப் போய் விடும்.ஆகவே உண்மையில் அவர் எதுவும் செய்வதில்லை . உலகத்தார் பார்வயில் அவருடைய மனம், புத்தி, புலன்கள் முன் பழக்கத்தின் பிராப்தத்தின் சாஸ்திர முறைப்படியான கர்மங்களைச் செய்து  கொண்டிருக்கும். இத்தகைய கர்மங்களில் மமகாரமோ, அபிமானமோ, பற்றுதலோ, ஆசையோ அவருக்கு இராததால் ,அவர் செய்வது புனிதமாகவும், மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாகவும் இருக்கும் . ஆயினும்  அவர்களைச் சாஸ்திரங்களின் விதிமுறைகள் எவையும் கட்டுப்படுத்தாது.அந்த மாமனிதன் இவ்வுலகில் கர்மங்களைச் செய்வதாலும் ,செய்யாவிட்டாலும் எவ்விதமான பயனும் இல்லை . உயிரினங்கள் அனைத்திலும் எதிலுமே அவனுக்குத் தனக்காக ஆக வேண்டியது என்ற தொடர்பு சிறிதும் இருக்காது  என விவரிக்கிறார் கிருஷ்ணன் . ”கேசவா, மகா மனிதன் கர்மம், செய்வதினாலும், செய்யாவிட்டாலும் யாது ஒரு பயனுமில்லை என்று சொல்வதன் பொருளை விவரியுங்கள்”எனக்…

Read More

கயல் விழியை பட்டுப் புடவையில் அலங்காரம் செய்து அழைத்து வந்து நடுக் கூடத்தில் அமரவைத்தனர் . அங்கு உறவினர்கள், நண்பர்கள் என பலர் கூடி இருந்தார்கள் . ஒரே ஊர் என்பதால் ஒன்பதாம் மாதத்தில் சீமந்தம் செய்தார்கள்.கயல்விழிக்கு  நலுங்கு வைத்து ஆசீர்வாதம் செய்தார்கள் பெரியவர்கள் . ஆரத்தி நீரில் கற்பூரம் வைத்து திருஷ்டி கழித்த பின் கயல்விழியை அழைத்துச்  சென்று ஐந்து வகை சாதங்களைக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள். வந்திருந்தவர்கள் எல்லாம் திருப்தியாக உண்டு ஆசீர்வாதம் செய்து புறப்பட்டார்கள். கயல்விழியை பக்கத்து வீதியில் இருக்கும் தாயார் வீட்டிற்கு அழைத்துப் போனார்கள். மாமா மகனை திருமணம் செய்ததால் ஊர் பயணம் , பாசப்பிரிவுகள்  இப்படி எதுவும் கயல்விழி அறியாத ஒன்று . தாய் வீட்டிற்கு சென்ற பத்தாவது நாள் ஆண் குழந்தை பிறந்தது,கயல் விழிக்கு  இரு வீட்டினரும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தனர். குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் அழுது கொண்டே இருந்தது குழந்தை…

Read More

22. ஒப்புரவறிதல் 211.கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு . மாற்றுதவி விரும்பாமல் கடமையைச் செய்யும் மழை போல கடமை செய்யும் உயர்ந்தரும் உண்டு. 212. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. வலிமையுடன் மிகச் சம்பாதித்த செல்வம் எல்லாம் அறச் செயலுக்கு உதவுவதற்கே காரணமாகும் . 213. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற . புதிய மேலான அமரர் உலகிலும் இந்த பூமியிலும் பெறுவது உலக வொழுக்கம். சமமாக நன்மை தருவது அதற்குப்பின்புதான். 214.ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் . சமுதாயத்தில் ஒற்றுமையுடன் உதவி வாழ்பவன் உயிர் வாழ்பவனாக மதிக்கப்படுகிறான் .அப்படி வாழாத மற்றவர்களை உயிர் இருப்பவர்களாக கருத மாட்டார்கள் . 215.ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. ஊரார் நீர் எடுக்க நிறைந்த ஊருணி போல் உலக மக்களுக்குப் பயன்படும் அறிவுடையோரின்…

Read More

ஞானயோகம் தொடர்ச்சி எந்தப் போகப் பொருள் மீதும் அவனுடைய மனதை ஈர்க்கும் திறன் புலனுக்கு இருக்காது. அது மனதை அனுசரித்தே செயல்படுகிறது. உலக நன்மைக்காக எந்தப் புலனைக் கொண்டு எதுவரை சாஸ்திர, சம்மதமான பொருளை ஏற்பது நியாயம் என்று எண்ணி கருதும் போது அப்பொருளை ஏற்கிறது. அதற்கு மாறாக எந்தப் புலனும் எந்தப் போகப் பொருளையும் தீண்டாது .இவ்வாறு புலன்களைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் …. புலன்களின் சுதந்திர வேகம் முழுவதும் அழிந்து விடும் .புலன்கள் மனதுக்கு அனுகூலமாகக் செயல்படும்.இதுதான் புலன்களை போகப் பொருட்களில் இருந்து எல்லா வகைகளிலும் மீட்பது ஆகும் என விவரித்துக் கூறுகிறார் கிருஷ்ணன் . ”கேசவா, அஞ்ஞானிக்கும் ,ஞானிக்கும் உள்ள வேறுபாட்டை கூறுங்கள்” என கேட்கிறான் அர்ஜுனன். அர்ஜுனா, அஞ்ஞானியுடைய அனுபவத்திற்கும் ஞானியின் அனுபவத்திற்கும் , இடையே இரவிற்கும், பகலுக்கும் உள்ளது போன்ற வேறுபாடு உண்டு. அஞ்ஞானியின் நிலை இரவாகும்.ஞானியின் நிலை பகலாகும் .என உருவகப்படுத்திக்…

Read More

141.பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். அயலான் மனைவியை விரும்பும் செயல் அறிவிலி செய்யும் குற்றம்.உயர்ந்தோராகிய இல்லற அறம் கண்டவர் கண்ணோட்டத்தில் இல்லை . 142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். பாலநெறி உடையவர் ஆற்றல் எல்லாம், வழித்தோன்றல் உடையவரிடமும் அறிவிலி நிலை இருக்காது. 143.விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துஒழுகு வார். நம்பியவரிடம் சொல்லுதல் வழி வெல்லுதல் மிக உறுதியாக வெளிப்படுத்துவது, நெருப்புபோல் இருந்து ஒழுக்கத்துடன் இருப்பார். 144.எனைத்துணையர் ஆயினும் என்னாம் நினைத்துணையும் தேரான் பிறனில் புகல். எத்தனை நட்பு ஆயினும் எத்தகையினைரையும் தினை அளவு நட்பு கொள்ளாது அயலான் மனைவிக்கு அடைக்கலம் தருவர். 145.எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. வறுமை உடையவள் என பிறன் மனையாளிடம் நெறி கடந்து செல்லுதல், துன்பம் என்ற உண்மை உணர்ந்து காலம் முழுதும் கேடு நிற்கும் என வணங்குவர் .…

Read More

13.அடக்கமுடைமை 121.அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் . மனம் ,மொழி ,உணர்வு, அடக்குபவர் வானோரில் ஒருவராய் போற்றப்படுவர் .அடக்கம் இல்லாதவரை துயரமான குற்ற செயலில் தள்ளி விடும் . 122.காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. காப்பது அறம். மன அடக்கம் உயர்வானால் அதைவிட உள்ளக்களிப்பு உயிர்க்கு இல்லை . 123.செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். சேர்தல் அறிந்து சேர்வது நன்மை பெறும் வாழ்க்கை .போதனை தெரிந்து செய்தால் அடக்கம் பெருமை தரும் . 124.நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. ஒழுக்கத்தில் அசையாது ,அழியாது மன அடக்கத்துடன் வாழ்பவன் உயர்வு ,மலை அரசனுக்கு கிடைக்கும் சிறப்பைப் போன்று பெருமை உடையதாகும். 125.எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து . இறைவனைப்பணிந்து வணங்குவது நன்மை தரும். அவர் உள்ளத்துள் ,செல்பவரே செல்வங்கள் பெற்று பெருமை…

Read More

111.தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். ஒருவரின் தகுதி, வாழும் பகுதி மக்களுடன் நல்ல முறையில் நடப்பதே, நடுநிலை பெருமையாகும். 112.செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு  உடைத்து . நடுநிலையுடன் வாழ்பவர் செல்வம் உயர்வான செயலுக்கு பயன்படுவதால் அழியாமல் மிச்சமாகி மக்களுக்கும் பாதுகாப்பாக உதவும். 113.நன்றே தரினும் நடுவிகந்தாம்  ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் . நலம்  தந்தாலும் நடுநிலைமை கெட்டால் வரும்செல்வம் என்றால் அன்றே தவிர்க்க வேண்டும்.. 114.தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும் . தர்மம் செய்பவர், நடுநிலைமை இல்லாதவர் என்று சொல்வர் அவர் அவருடைய பிள்ளைகளின் செயல் பாட்டால் தெரிந்து கொள்ளலாம். 115.கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. வறுமையும், செல்வாக்கும் எல்லோர் வாழ்விலும்  நடக்கும்.மன அமைதி தருவது நடுநிலைமை தவறாது ஒழுக்கத்துடன் வாழ்வதே பெருமை தரும் . 116.கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுஒரீஇ…

Read More

இவ்வுலக ஆட்சி என்ன ?மூவுலக ஆட்சியே எனக்குக் கிடைக்குமானாலும் நான் குலநாசத்தை விரும்பவில்லை என்கிறான் அர்ஜுனன்.  அர்ஜுனா,வெற்றி தோல்வி இலாப நஷ்டம்,சுக துக்கம், இவற்றை சமமாகக் கருது.அதற்குப்பின் யுத்தத்திற்குத் தயாராகு என்கிறார் கிருஷ்ணன். வெற்றி,தோல்வி,லாப, நஷ்டம்,சுக,துக்கம் இவற்றை சமமாக கொள்வது எப்படி ? எனக் கேட்கிறான் அர்ஜுனன் . போரில் ஏற்படும் வெற்றி, தோல்விகளினால் மனதில் விருப்பு,வெறுப்போ, இன்ப,துன்பமோ போன்ற மாறுதல் உணர்வுகள் உண்டாகக்கூடாது.அவற்றை சமமாகக் கருத வேண்டும் என்றார் கிருஷ்ணன். மேலும் கூறுகிறார் நான் கூறிய மனப்பாங்குடன் யுத்தம் செய்வதால் பாவம் சிறிதளவு கூட உன்னைத் தீண்டாது நற்செயலாலோ ,தீய செயலாலோ ஏற்படக்கூடிய கர்ம பந்தத்திலிருந்து முற்றிலும் விடுபடுவாய் என்ற கிருஷ்ணன்… இந்த புத்தி உனக்கு ஞானயோக விஷயத்தில் கூறப்பட்டது.இனி இதனைக் கர்மயோக விஷயத்தில் கேள். அந்த புத்தியோடு கூடியவனாக ஆகி கர்மபந்தத்தை முழுமையாக விலக்கி விட்டு ,முற்றிலும் அழித்து விடுவாய் என்கிறார் கிருஷ்ணன். ‘கர்ம பந்தம்’ என்ற சொல்லுக்கு…

Read More

ரகுவரன் வண்ணத் தாள்களில் சின்ன சின்னதாய் குருவி,கிளி, வாத்து,மயில் என்று பொம்மைகள் செய்து கொண்டிருந்தான். வீட்டிற்குள் நுழைந்த வரதராசன் மகன் கத்திரியும், தாளுமாக இருந்த கோலத்தைப் பார்த்து மயிர்கால்கள் குத்திட்டு நின்றன. கோபம் தலைக்கு ஏறியது. ”படிடா என்றால் படிக்க மாட்டேன் என்கிறாய்.எப்ப பாரு கிளியும், வாத்துமா செய்து வீடு முழுக்க குப்பை போடுவது தான் மிச்சம். ஒரு பைசாவிற்கு பிரயோசனம் இருக்கிறதா?” இப்படி இருந்தா எப்படிடா பொளைக்கப் போறே, நாலுபேரைப் போல் நல்லா படிக்கணும் ,நாள்ள வேலைக்குப் போக வேண்டும் என்ற நினைப்பே வராதாடா, ” கோபமாக கத்தியவர்… ரகுவரன் முதுகில் இரண்டு போடு போட்டார் .செய்து வைத்திருந்த பொம்மைகளை காலால் எட்டி உதைத்தார். ரகுவரனுக்கு தன்னை அடிக்கும் பொது கூட வலிக்க வில்லை. ஆனால் பொம்மைகளை உதைத்தது மனதில் வலித்தது. ”கலை நயமாக தான் வடித்த பொம்மைகளைப் பார்த்து பாராட்ட வேண்டாம். இப்படி எட்டி உதைக்காமல் இருந்திருக்கலாமே ”என்று…

Read More