111.தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

ஒருவரின் தகுதி, வாழும் பகுதி மக்களுடன் நல்ல முறையில் நடப்பதே, நடுநிலை பெருமையாகும்.

112.செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு  உடைத்து .

நடுநிலையுடன் வாழ்பவர் செல்வம் உயர்வான செயலுக்கு பயன்படுவதால் அழியாமல் மிச்சமாகி மக்களுக்கும் பாதுகாப்பாக உதவும்.

113.நன்றே தரினும் நடுவிகந்தாம்  ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல் .

நலம்  தந்தாலும் நடுநிலைமை கெட்டால் வரும்செல்வம் என்றால் அன்றே தவிர்க்க வேண்டும்..

114.தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும் .

தர்மம் செய்பவர், நடுநிலைமை இல்லாதவர் என்று சொல்வர் அவர் அவருடைய பிள்ளைகளின் செயல் பாட்டால் தெரிந்து கொள்ளலாம்.

115.கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

வறுமையும், செல்வாக்கும் எல்லோர் வாழ்விலும்  நடக்கும்.மன அமைதி தருவது நடுநிலைமை தவறாது ஒழுக்கத்துடன் வாழ்வதே பெருமை தரும் .

116.கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின் .

கெடுதி வந்துவிடும் என்பது உணர்ந்த மனம் ,நடுநிலைமை நீக்கி தீமை செய்தால் வருந்த நேரும்.

117.கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு .

துன்பமான கொடுமை என உலகத்தார் சொல்ல மாட்டார்கள் நடுநிலைமை தவறாது அறத்துடன் வாழ்பவர் பணிவுடன் வணங்குதல் கண்டு .

118.சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்  கணி.

சமம் செய்து பாரத்தை காட்டும் நிறைகோல் போல் தகுதியால் வெண்கலமாய் உருப்படக்கி ஒழுக்கத்துடன் வாழ்வதே பெருமையாகும்.

119.சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

சொல்லில் மனக்கோணல் இல்லாது நடுநிலைமை உறுதி, உள் மனக்கோணல் இல்லாது இன்பம் அடையும்.

120. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம்போற் செயின்.

செய்தொழில் செய்பவர் மெய்காவலர் போல் ,தொழில் காத்து மதித்து பிறரையும் பேணுதல் தொழில் ஒழுக்கமாகும் .

Share.

Leave A Reply