Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

341.யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் . எதன்மீதும் பற்று இல்லாமல் மனதை கட்டியவன் குழப்பங்களில் எல்லாம் நீங்கியவன். வாழ்வில் துன்பமாகிய குழப்பம் இல்லாமல் போகும். 342.வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல . விரும்பிஉண்டு உறையும் மனையைத் துறந்து பற்றற்ற நிலையில் இவ்வுலக நிலைமை அறியாமை பல புரியும். 343.அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு துறவில் வலிமை வேண்டும் என்றால் ஐம்புல சுகங்களை விட்டுவிடவேண்டும் .அவ்வாறு விட்டு விட்டால் முழுமையான அடக்கம் காலத்தில் கிடைக்கும். 344.இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து . இயல்பாக நற்குணம் பெற்றவர் தவம் செய்ய இல்லாமை, உடைய பொருள் , மயக்க ஆசைகள் இருக்காது. வேறு நிலை மாறச் செய்தால் தவத்தில் இருந்து பிரித்து விடும் 345.மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை . வேறு நட்பு கேடு…

Read More

331. நில்லாத  வற்றை நிலையின  என்றுணரும்       புல்லறி வாண்மை  கடை நிலையில்லாதவற்றை நிலைமையை உறுதி செய்து மூங்கில் போல் வளைந்து கொடுத்து வாழ்தல் எல்லையாகும் . 332. கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று . நாடக அரங்கில் இசைக்குழல் பேருணர்வைத்தரும் ,அரசன், தலைவர்களுக்கு .பழக்கமாகி தொடர்ந்தால் செல்வம் குறைந்து போகும் தன்மை உடையது . 333.அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல் . நிலை இல்லாத செல்வம் பெற்றுவிட்டால் நிலை பெறுதலாகிய அறம் செய்ய வேண்டும் . 334,நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின். ஒன்றுபோல் காட்டும் நாள்காட்டி ஒரு புள்ளி இரு கூர்முள்காலத்தை உணர்த்துவது போல நிலையில்லா செல்வம் அறிந்து ஒரு உயிர் இரு உடலாக இருக்கும் குடும்பத்தினர் அறம் செய்து வாழ்வர். 335.நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும் . மரணப் படுக்கையில் இருக்கும் போது,…

Read More

கேசவா,பகவான் தனிப் பெருங்கருணையாளர் ஆயிற்றே ,கொடியவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களது இயல்பை ஏன் மாற்றக் கூடாது.தண்டனை கொடுப்பதேன் எனக் கேட்கிறான் அர்ஜுனன் . அர்ஜுனா , கொடியவர்களுக்கு தண்டனை அளிப்பதும்., அசுர உடலில் இருந்து அவர்களை விடுவிப்பதும் , கருணை இல்லை என எண்ணி விடக் கூடாது. குழந்தைகளுக்கு கையிலோ, காலிலோ கொப்புளம் கட்டி வந்தால் பெற்றோர் முதலில் மருந்து கொடுத்துப் பார்ப்பார்கள் . தீராவிட்டால், தாமதம் செய்வதால் இந்த விஷம் மற்ற உறுப்புகளுக்கும் பரவும் என்று தெரிந்தவுடன் மற்ற உறுப்புகளை காப்பாற்றும் நோக்கத்துடன் , விஷம் பட்ட உறுப்பில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கிறோம் .அல்லது வெட்டி எடுக்க அனுமதிக்கிறோம். இதற்கு காரணம் குழந்தையிடம் உள்ள பரிவுதானே அதுபோலத்தான் அசுரனிடம் உள்ள தீய குணங்களை களைவதற்காக முதலில் நீதியை எடுத்துக் கூறுகிறேன். உதாரணத்திற்கு துரியோதனனுக்கு அறிவுரை கூறியது போல தண்டனை நேரும் என்றும் அச்சுறுத்துகிறேன்.\ பயனளிக்காது போகவே கொடுமைகள் மேலும்…

Read More

42.முள்ளங்கி முள்ளங்கி இரண்டு வகைகளில் உள்ளது. சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி, முள்ளங்கியை குழம்பு , கூட்டு ,பொரியல் என செய்து உணவில் உட்கொள்ளலாம் . சிறுநீரகக் கோளாறுகளுக்கு முள்ளங்கி சாறு எடுத்து காலை ,மாலை என இரண்டு நேரம் குடித்து வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். சிறுநீரகப் பாதுகாப்பிற்கு தண்ணீர் நன்றாக குடிக்க வேண்டும். அதனுடன் முள்ளங்கி அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் . முள்ளங்கியை சாறு எடுத்து சாப்பிட்டா;ல் சளி, தலைவலி, சளியால் வரும் இருமல் நீங்கும். கர்ப்பிணிப் பெண்கள் முள்ளங்கி சாப்பிட்டு வந்தால் காலில் ஏற்படும் வீக்கம் குடையும். முழங்கி சாறு வாழைத்தண்டு சாறு சம அளவில் எடுத்து குடித்து வந்தால் சிறுநீர்கல்லடைப்பு நீங்கும். 43.கசகசா கசகசா கடுகு போல் வெண்மையாக இருக்கும்.சிறிதாக இருப்பதால் இது கசகசா என்று அழைக்கப்படுகிறது . கசகசா வாசனை சுவை கூட்டக் கூடியது. குளிர்ச்சி தரக்கூடியது. சூட்டை ஏற்படுத்தும் உணவுகள்…

Read More

கண்ணனுக்கு இன்று பள்ளி விடுமுறை .தாமதமாகவே எழுந்தான் . மகன் எழுந்ததைப் பார்த்த பூங்கொடி ‘ கண்ணா எழுந்து விட்டாயா , பல் துலக்கி விட்டு வா’ பால் தருகிறேன் ”என்றாள். சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தவன் காலைக் கடன்களை துரிதமாக முடித்தான் . அம்மா எடுத்து வைத்த பாலைக் குடித்தான் . தொலைக்காட்சியைப் போட்டு மாற்றி..மாற்றி போட்டுப்  பார்த்தவன் , எதுவும் பிடிக்காமல் எழுந்து பந்தை எடுத்து அடித்து விளையாடினான். ‘குளித்து விட்டு வா கண்ணா சாப்பிடலாம்’, அப்பாவிற்கு அவசர வேலை என்று போய் விட்டார்கள் என்றாள் பூங்கொடி . ‘சரியம்மா’ என்றவன் குளிக்கச்சென்றான் . அவன் வருவதற்குள் தோசை சுட ஆரம்பித்தாள் பூங்கொடி . கண்ணன் வந்தவுடன் சாமியை கும்பிட்டுவிட்டு சாப்பிட வந்தான் . இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள், சட்னி, வைக்கட்டுமா ? என்றாள் பூங்கொடி. ”போதும்” என்றவன்  சாப்பிட்டு முடித்தான். வெளியில் இருந்து ‘பெல்’ அடிக்கும் சத்தம்…

Read More

கேசவா , சத்திரியர்களின்  குணமாக கருதப்படுவதை விவரியுங்கள் எனக் கேட்கிறான் அர்ஜுனன் . அர்ஜுனா, யுத்தம் புரிவது , துஷ்டர்களைத் தண்டிப்பது முதலியவை சத்திரியர்களுடைய சுய தர்மமாகும் . அகிம்சை அமைதி முதலிய பண்புகள் குறைந்து காணப்படும் . வைசிய தர்மமான வேளாண்மை முதலிய கடமைகளில் இம்சை முதலிய குறைகள் காணப்படுகின்றன. என விவரிக்கிறார் கிருஷ்ணன் . கேசவா, தர்மத்தில் மரணமே  நேர்ந்தாலும் அதுமேன்மை தரும் என்பதை விவரியுங்கள் எனக் கேட்கிறான் அர்ஜுனன் . அர்ஜுனா ,இடையூறுகள் வராமல் வாழ்நாள் முழுவதும் சுயதர்மத்தைக் கடைபிடித்தவன் தன் விருப்பப்படி  சுவர்கத்தையோ, மோட்சத்தையோ அடைவான் என்பதில் ஐயமில்லை . இடையூறு  வந்தும் கூட அவன் சுயதர்மத்தில் இருந்து வழுவாமல் உறுதியாக இருந்து வந்தால் அவனுக்கு மரணமே ஏற்பட்டாலும் , அதுமேன்மையையே  தரும். இதிகாசங்களிலும் , புராணங்களிலும் இப்படி பல உதாரணங்கள்  கிடைக்கின்றன. சுயதர்மத்தைக் கைவிடாமல் கடைப்பிடித்து அதனால் மரணம் வரை கஷ்டங்களை ஏற்பவர்களுக்கு நற்கதி…

Read More

மார்கழி மாதம் அதிகாலை எழுந்து நீராடி வாசலில் கோலம் பூவைத்து கார்மேக கருக்களில் பிரம்ம முகூர்த்தத்தில் கோவிலுக்குச் சென்று திருமஞ்சனம் கண்டு பார்புகழும் திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பஜனை பாடி இறைவனை வணங்கி சார்பு பற்று நீங்க வலம் வந்து அருள் பெறுவது மங்கையர் நோன்பு கன்னிப் பெண்கள் முதல் முதியவர் வரை நோன்பு இருப்பது குடும்ப நலனுக்கே தன்னலம் கருதாது வழிபாடும் போது மனமும் உடலும் ஆரோக்கியம் பெரும் சன்மார்க்க நெறியால் நன்மைகள் விளையும் சக்கரச் சுழற்சியில் சகலமும் நலமாகும் திண்மை விலகும் தீரம் உருவாகும் திடமான நம்பிக்கையே மங்கையர் நோன்பு இல்லத்தை தூய்மை செய்து பொலிவுடன் போகி அன்று காப்புக் கட்டி நல்ல நேரத்தில் கதிரவனுக்குப் பொங்கலிட்டு குலவை போட்டு மஞ்சள் கரும்பு வைத்து இல்லறம் நல்லறமாக இறைவனை வணங்கி இன்ப பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லி வெல்லப் பொங்கல் பகிர்ந்து உண்டு ! வள்ளுவர்வழியில் வாழ்வதுவே மங்கையர் பொங்கல்

Read More

விருந்தோம்பல் 81.இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு . இல்லறத்தார் தீங்கு வராமல் காத்து இல்வாழ்க்கை வாழ்வது எல்லாம் உறவினர்களை உபசரிப்பதற்கே . பயிர் தொழில் செய்வது வயல் நிலத்தில் தட்டுப்பாடு வராது காப்பதால் மதிப்பு உண்டாகும் . 82.விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று வீட்டின் பின்புறம் உறவினர் இருக்கும் போது தான் மட்டும் உண்பது குற்றமாகும்.உயிர் வாழும் அமிர்தமே என்றாலும் அது விரும்பும் செயல் அன்று . 83.வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்த பாழ்படுதல் இன்று . வம்சத்தை உபசரித்து தங்கவைத்து பாதுகாத்து வாழும் வாழ்க்கை சூரியஒளி போன்றது.வீணாகப் போவது இல்லை . 84.அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். களங்கம் இல்லா மனதுடன் விருந்தினரை பசியாற்றும்போது , உபசரிப்பான் இடம் தேடி நன்மை செய்ய திருமகள் வருவாள் . 85.வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிக்ஸில் மிசைவான்…

Read More

இவன் தான் ”ஆத்மாவிடமே திருப்தியும், ஆத்மாவிடமே சந்தோசமும் உள்ளவன்” என விளக்குகிறார் கிருஷ்ணன் . மேலும் கூறுகிறார், அர்ஜுனா, எவனுடைய மனம் துன்பங்கள் வரும்போது மனம் கலங்குவது இல்லையோ, சுகங்களை அடையும் போது அவற்றில் சிறிது கூட ஆசை கொள்வதில்லையோ ,எவனுக்கு விருப்பு, பயம், கோபம் இவை முற்றும் அற்றுப் போயினவோ அத்தகைய முனிவன் சமாதி நிலையை அடைந்தவன் ஆவான் என்று கூறுகிறார் கிருஷ்ணன். நல்லவை என்பது அவரவருக்குப் பிரியமானது .கெட்டவை என்பது அவரவருக்குப் பிடிக்காதது. நல்லவை, கெட்டவை என்பது பொருட்களைச் சார்ந்தது அன்று அவரவரின் மனோபாவத்தைப் பொறுத்தது. உலகியலில் மனதிற்குப் பிடித்த பொருள் கிடைத்தால் சாதாரண மனிதனுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்படும் அந்த மகிழ்ச்சியில் மூழ்கிச் சொற்களால் தன் திருப்தியை வெளிப்படுத்துவான் . பிடிக்காத பொருள் கிடைத்தால் சாதாரண மனிதன் மிகுந்த வருத்தம் அடைவான் . சித்தயோகி எந்தப் பொருளையும் , மகிழ்ச்சி பொங்க கொண்டாடமாட்டான் ,வெறுக்கவும் மாட்டான். மன அமைதியுடன்…

Read More

சுமதியின் நான்கு வீடு தள்ளி சுபா வீடு இருந்தது. இருவருக்கும் பல வகையில் ஒற்றுமை இருந்தது. ஒரே மாதத்தில்  பிறந்தவர்கள்.ஒரே வீதியில் வசிப்பவர்கள்.ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள்  என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், ஒரு வேறுபாடு இருந்தது. சுமதி அதிகம் பேசமாட்டாள். சுபா பேசிக்கொண்டே இருப்பாள். இருவரும் நல்ல தோழிகள்.எங்கு சென்றாலும் இருவரையும் பார்க்கலாம். தனியாகப் பார்ப்பது வீட்டில் இருக்கும் போது மட்டும் தான். காலங்கள் கடந்தன…பள்ளிப் படிப்பு முடிந்தது.கல்லூரிக்கு வெளியூர் போக வேண்டும். இருவரும் வேறு….வேறு …கல்லூரியில் சேர்ந்தார்கள். பிரிவு என்பது முதல் முறை என்பதால் கல்லூரிக்கு  போகாமல் இருந்து விடுவோமா  எனக்கூட யோசித்தார்கள். படிப்பு பெண்களுக்கு அவசியம் வேண்டும் என்பதை இருவரும் உணர்ந்து இருந்ததால் பிரிவை தாங்கிக் கொண்டு கல்லூரிக்கு சென்றனர். கால மாற்றம் பிரிவுத் துயர் மறைந்தது.வேறு தோழிகளின் நட்பு திசை மாறியது. சுமதிக்கு கிடைத்த தோழி மாலா .அவள் படிப்பிலும் கெட்டிக்காரி.செயல் திறனிலும் கெட்டி. இப்படி ஒரு தோழி…

Read More