ஞானயோகம் தொடர்ச்சி
எந்தப் போகப் பொருள் மீதும் அவனுடைய மனதை ஈர்க்கும் திறன் புலனுக்கு இருக்காது. அது மனதை அனுசரித்தே செயல்படுகிறது.
உலக நன்மைக்காக எந்தப் புலனைக் கொண்டு எதுவரை சாஸ்திர, சம்மதமான பொருளை ஏற்பது நியாயம் என்று எண்ணி கருதும் போது அப்பொருளை ஏற்கிறது.
அதற்கு மாறாக எந்தப் புலனும் எந்தப் போகப் பொருளையும் தீண்டாது .இவ்வாறு புலன்களைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் ….
புலன்களின் சுதந்திர வேகம் முழுவதும் அழிந்து விடும் .புலன்கள் மனதுக்கு அனுகூலமாகக் செயல்படும்.இதுதான் புலன்களை போகப் பொருட்களில் இருந்து எல்லா வகைகளிலும் மீட்பது ஆகும் என விவரித்துக் கூறுகிறார் கிருஷ்ணன் .
”கேசவா, அஞ்ஞானிக்கும் ,ஞானிக்கும் உள்ள வேறுபாட்டை கூறுங்கள்” என கேட்கிறான் அர்ஜுனன்.
அர்ஜுனா, அஞ்ஞானியுடைய அனுபவத்திற்கும் ஞானியின் அனுபவத்திற்கும் , இடையே இரவிற்கும், பகலுக்கும் உள்ளது போன்ற வேறுபாடு உண்டு.
அஞ்ஞானியின் நிலை இரவாகும்.ஞானியின் நிலை பகலாகும் .என உருவகப்படுத்திக் காட்டுகிறார் .
இரவு என்றால் சூரியன் மறைந்த பிறகு ஏற்படும்.இரவு என்று பொருள் அல்ல.வெளிச்சம் நிறைந்த பகல். ,ஆந்தையின் கண்களுடைய தோஷத்தினால் இருள்மயமாகத் தெரிகிறது.அது போல அறிவுமயமான பரமானந்தமயமான பரமாத்மாவைக் காண முடியாமல் அஞ்ஞானம் என்ற திரை பிரகாசத்திறனை மறைக்கிறது.
பரமாத்மா என்ற சூரியன் பிரகாசித்து விட்டால் பரம சாந்தியும், நித்தியமான, ஆனந்தமும் நேரிடையாக அனுபவிக்கக் கிடைத்து விடும்.
பகல் போல் பிரகாசம் நிறைந்ததாக இருந்தாலும் கூட பரமாத்மாவின் கல்யாண குணங்கள், பிரபாவம் , ரகசியம் , தத்வம் அறியாத அஞ்ஞானிக்கு இரவாக அல்லது இரவு போல ஆகிறது.
அவனுக்குப் பரமானந்த விஷயம் பற்றி எதுவுமே தெரியாது.பரமானந்த அனுபவம் பெறாமல் தூங்கி விடுகிறான் .
சகல சாதாரண நிலையில் உள்ள உயிர் நிலையில் உள்ள ஜீவராசிகள் அனைவருக்கும் இரவாகவே இருக்கிறது .
பரமாத்மாவை அடைந்து விட்டவனுக்கு இந்த இரவு பகல் போல ஆகிறது. பரமாத்மா சுயரூபத்தை நேரிடையாக அனுபவித்து அதிலேயே நிலைத்து விடுகிறான் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .
அர்ஜுனா, என்ற கிருஷ்ணன் மேலும் விவரிக்கிறார். கடல் ஓயாது அலை அடித்துக் கொண்டு இருப்பதால் பல ஆறுகள் அதனுடன் சேர்ந்து கலக்கும் பொது கலங்கச் செய்யாமலேயே கலந்து விடுகின்றன ,அது போல…
திருப்தியுள்ள ஞானம் பெற்ற மனிதனிடம் அனைத்து போகங்களும் எவ்வித மாறுதலும் உண்டு பண்ணாமலேயே வந்து அடைகின்றன.அவனே, மேலான அமைதியை அடைகிறான். போகங்களை விரும்புவன் அமைதியை அடைவதில்லை.எந்த மனிதன் அனைத்து விருப்பங்களையும் துறந்துவிட்டு மமதை இல்லாதவனாக, அகங்காரமற்றவனாக,சிறிதளவு ஆசையும் இல்லாதவனாக சஞ்சரிக்கிறானோ,அவனே அமைதியை அடைகிறான்.அதாவது அவனே, சாந்தியைப் பெற்றவன் என கூறுகிறார் கிருஷ்ணன் .
கேசவா, அகங்காரம் அற்றவனாக,ஆசை அற்றவனாக என கூறுவதன் கருத்தை விளக்குங்கள் எனக் கேட்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா, காமமும், ஆசையும் அற்றுப் போனாலும் கூட மனிதன் தான் காமமற்றவன் தனக்கு ஆசை கிடையாது என்று அகங்காரத்தையும் , மமகாரத்தையும் மனதில் வைத்திருக்கலாம். சித்த புருசன் ஆகமாட்டான்.
அகங்காரம் அழிந்தால் தான் மற்றவை எல்லாம் அழியும் .எல்லாவற்றிற்கும் காரணமான அகங்காரம் எஞ்சி இருக்கும் வரை காமம், ஆசை, மமகாரங்கள் ஏதாவது ஒரு உருவத்தில் தலை தூக்கத்தான் செய்யும்.
சிறிதளவாவது காமம், ஆசை, மமகாரம், அகங்காரம் இருந்தாலும் பூர்ணமயமான நித்தியமான சாந்தி கிடைக்காது.
அகங்காரம் போய்விட்டால் காமம் , ஆசை , மமகாரம் போய்விடும் .அகங்காரம் தான் இவற்றிற்கெல்லாம் மூலகாரணம் .காரணம் அழிந்தால் கார்யம் உண்டாகாது என விளக்குகிறார்.
மேலும் ,அர்ஜுனா, பிரம்மத்தை அடைந்தவனின் நிலை இதுதான் .பிரம்மத்தை அடைந்தபின் யோகி ஒரு போதும் மோகமடைவதில்லை . உயிர் பிரியும் நேரத்தில் இந்த பிரம்ம நிலையிலேயே நிலை பெற்று பிரம்மானந்தத்தை அடைகிறான், என்கிறார் கிருஷ்ணன் .
”’கேசவா, பிரம்மானந்தத்தை அடைபவனுக்குப் பற்று இருக்காது’என்று கூறுவதன் பொருள் என்ன? எனக் கேட்கிறான் அர்ஜுனன் .
“”அர்ஜுனா, பிரம்மம் என்றால் என்ன? ஈசுவரன் யார் ? பிரபஞ்சம் எது ? மாயை என்றால் என்ன ?இவற்றிடையே ஒன்றுக்கொன்று என்ன சம்பந்தம் ? நான் யார்? எங்கிருந்து வந்தேன் ? நான் செய்ய வேண்டியது என்ன ? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் முதலிய விசயங்களைப் பற்றிய உண்மை அறிவு இல்லாமல் இருப்பதே மோகம்.
இந்த மோகம் ஜீவனுக்கு அனாதிகாலமாக உள்ளது.அதனால் தான் இவன் சம்சார சக்கரத்தில் சுழல்கிறான் .
ஆனால், அகங்காரம், மமகாரம் ,பற்று ஆசைகள் விலகிய மனிதன் மேலே சொன்ன பிரம்ம நிலையை அடையும் போது ,அவனுடன் ஆயுள் காலமாகத் தொடர்ந்து வந்த மோகம் அடியோடு அழிந்து போகிறது, மறுபடியும் அது தோன்றாது.
”கேசவா, மரண காலத்தில் இருக்கும் அவன் மனம் ஏதாவது ஒரு காரணத்தினால் சமபாவனையில் திடமாக இல்லாவிட்டால் அவனுடைய கதி என்னவாகும்” எனக் கேட்கிறான் அர்ஜுனன் .
மரண காலத்தில் இருக்கும் சம பாவனை அந்த மனிதனை அக்கணமே கரையேற்றிவிடும் . ஆனால், மரண காலத்தில் சமபாவனைகளிலிருந்து அவன் மனம் ஒன்றி இருந்தால், அவனுடைய பயிற்சியும், சாதனையும் வீண் போகாது .அவன் யோகத்தில் நலுவியவனுடைய கதியை அடைவான்.சமபாவனையின் சம்சாரத்தினால் அவன் அடுத்த பிறவியில் அதன்பால் ஈர்க்கப்படுவான் பின் பரமாத்மாவை அடைந்துவிடுவான் என விளக்குகிறார் கிருஷ்ணன் .