அன்னை பால் கொடுத்த போது தமிழ் உணர்வு கலந்து விட்டதுதென்னை மரம் பலன் தந்து தன்னை பிறருக்கு கொடுத்து வாழ்ந்தது தன்னை உணர்ந்த தமிழன் எல்லாம் பிறருக்கு உதவும் நற் பண்பில் முன்னைப் பயன் மூத்த தமிழன் முத்தமிழ் உணர்வில் ஒன்று பட்டு. உள்ளம் நிறைந்த தாய் மொழி ஊட்டச் சத்து நிறைந்த முப்பால்கள்ளம் இல்லா மனம் தரும் கபடம் சூது ஓடிப் போகும் பள்ளம் மேடு பார்த்து வழிவிடும் பக்குவப் படுத்தி நெறி கூடும்துள்ளும் மனம் தமிழ் சுவையில் துன்பம் கூட இன்பம் ஆகும். ஒன்று படுத்தும் தமிழ் பணி ஓய்வு அறியா முழு மதி என்றும் இனிக்கும் இன்ப மொழி ஏற்றம் தரும் தமிழ் மொழி வென்று நிற்கும் செந்தமிழ் வாழ்வில் வாகை சூடும் முத்தமிழ் புத்துணர்வு இன்றும் என்றும் அமுத மொழி அன்பு கொண்டு வாழும் மொழி.
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
சுதந்திர மூச்சுக்காற்றை சுவாசித்தோம் பேச்சுரிமை எழுத்துரிமை பெற்று வளர்ந்தோம் சுதந்திர இந்தியாவில் பழமொழி பேசினாலும் சகோதரி சகோதர உணர்வாய் நேசிக்கிறோம் சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை வணங்கி அவர்கள் வழியில் நடக்கிறோம் சுதந்திரமாய் பறக்கும் பறவைகள் போல் எல்லா துறைகளிலும் கால் பதிக்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை நம் இந்தியா வெல்லும் உறுதி பெற்றது இந்தியா மாற்றங்களை வரவேற்கும் நம் இந்தியா மாதரை மதிக்கும் நம் இந்தியா ஏற்றங்கள் ஏணியாய் நாம் இந்தியா எத்தரை ஓட வைக்கும் இந்தியா ஆற்றல் அரவணைப்பு ஆன்மீகம் இந்தியா அன்பை பண்பை போதிக்கும் இந்தியா.
பொங்கி வரும் நீர்போல் புதுப்பொலிவு பெற்று ஏழு வண்ணங்களில் ஏழு சுரங்கள் பாட இயற்கையின் அழகில் இறைவனின் அற்புதம் மயிலின் ஆடல் குயிலின் கூவல் மானின் துள்ளல் மதி மயக்கும் இசை பச்சை மரங்கள் பறந்து வரும் கிளி மலர்ந்த பூக்கள் கொண்டு வரும் வாசனைதென்றல் காற்றோடு கரைந்து வரும் குரல் ரசிப்பதும் சிரிப்பதும் மனிதனின் மகத்துவம் பிரம்மனின் படைப்பின் ரகசியம் இதுவோ?” அன்பை பெருக்கு சோம்பல் விலக்கு உழைப்பை போற்று நம்பிக்கை ஊற்று” இயற்கையின் இயக்கம் ஒவ்வொரு இசை இதயம் மகிழ்வது மெல்லிய இசை பயத்தல் அசைவும் அதிர்வம் இசை பண் பதவு ஊற்றும் இசை கயல்விழி அன்னை அசைவும் இசை இறைவன் மெய்யுருகி ரசிப்பதும் இசை இயங்கும் உயிர்கள் ரசிப்பதும் இசை பிறப்பும் இறப்பும் எதிலும் இன்னிசை.
வீரம் விளைந்த சிவகங்கை சீமையின் வரலாற்றுப் புறநானூற்று காட்சி ஒன்றுண்டு முதல்நாள் மறுநாள் நடந்த போரில் கணவனையும் தந்தையும் இழந்த பெண். போர்பறை கேட்ட வீரக்குடி மகள் விளையாடிக் கொண்டிருந்த மகனை அழைத்து வெள்ளையாடை உடுத்தி வேலொன்றை கையில் கொடுத்து போர்க்களம் நோக்கி போய்வா மகனே என்றனுப்பினாள்.தமிழ் இலக்கியத்தின் ஒப்பற்ற பாடல் பாடலை எழுதியவர் பெண் பாற்புலவர் ஒக்கூரில் பிறந்த மாசாத்தியார் என்று அழைக்கப் பட்ட இலக்கியப் பெண். வீரமங்கை வேலு நாச்சியார் மருதுபாண்டியர் பிறந்த பூமி சிவகங்கை சீமை யாதும் ஊரே யாவரும் கேளிர் உலகளாவிய சிந்தையே உதித்த இடம்.தமிழ்க் கவிஞர் கனியன் பூங்குன்றன் தமிழரிடம் நிலைத்த இடம் சிவகங்கை மாசாத்தனார் கபிலர் வாழ்ந்த ஊர் மங்கா புகழ் சேர்த்த சிவகங்கை. கவியரசு கண்ணதாசன் பண்டிதமணி கதிரேசன் சுத்தானந்த பாரதியார் பிறந்த மாவட்டம் சிவகங்கை கீழடி அகழாய்வில் கீழேதோண்ட 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழனின்…தமிழி எழுத்துக்கள் தமிழ் பிராமியில்குவிரன் ஆத(ன்)…
கருவில் இருந்து தாயின் தமிழுணர்வு சுவாசம் ரத்தத்தில் கலந்து உந்தியில் இருமடங்காகி இதயம் இயங்கிய போது தமிழ்.. .தமிழ்… என்று சுவாசித்தது மேருமலை போல் உயர்த்தி மதித்ததால் உருகி மனதில் மனம்வீசி பரவியது சிருட்டி வசமானது சிம்மாசனத்தில் தமிழ்! புகழ் ஓங்கி ஒளிர்தல் ஒளிர்வு.மதுரைதமிழ் சென்னைதமிழ் கொங்குத்தமிழ் புதுவைத் தமிழ் என எங்கு சென்ற போதும் சங்கமம் ஆக பாலம் அமைந்தது “யாதும் ஊரே யாவரும்” தோழமை எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எண்ணத்தை பதிவாக்கி வாழ வழிவகுத்த எங்கள் தமிழ் என்னுயிர் தமிழ் உயிரும் உணர்வும் தமிழே நிறைந்து.
வேம்புஇலை இஞ்சி மஞ்சள் சார் சீரணமாகும் வயிற்றுப் பூச்சி மருந்து மூக்குருட்டி கீரை சர்க்கரை குறைக்கும் முள்ளு முருங்கை சளிவலி போக்கும் பூண்டு சர்க்கரை வெட்டுக்காயம் போக்கும் மல்லி, சீரகசார் வாயு நீக்கும் பூச்சி கடித்த இடத்தில் சுண்ணாம்பு தடவ குணமாகும் அரிப்பு நீங்கும். பனை தரும் உணவு உண்டு எதிர்ப்பு சக்தி பெற்று வாழ்வோம் தினை தேன் நோய் எதிர்ப்புக்கு திடமாய் இருக்க வெயிலில் சுற்றாது நனை பால் கல்கண்டு தயிர் பாலில் செய்யும் உணவு உண்டு மனையில் விளையாடி மகிழ்வாய் இருக்க சிறுவருக்கு நோய் வராமல் தடுக்கும்.அவல் பொறி கடலை சுண்டல் கொய்யா விளாம்பழம் நாவல் கொழுக்கட்டை கவலை இல்லாமல் சீரண மாக்கும் சிவாயநம எனும் மந்திரம் ஓத கவனம் சிதறாத வாழ்வு தரும் புவனம் போற்றும் புத்துயிர் வரும் சிவனே எனசில நேரம் ஓய்வு சிறந்த மருத்துவ சித்த மருந்து.
கருமுகிற் கொழுந்து எழில் காட்டும் சோதிராமன் ஆர்உயிர் நின்றுஊ சலாடியது தந்தைக்குகருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார் கண்ட கல்மிசை காருந்தன் கழல்துகள் கதவஅகலிகை இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார் வரிசிலை அன்னலும் வாட்கன் நங்கை சீதையும் இருளின் எழுகின்ற புகர்முகயா னையின் உரிவைப் போர்வை போர்த்த உதயம் செய்தான் ராமன். தயரதன் புதல்வன் தாமரைக் கண்ணன் கயல்பெரு கடலுள் வைக்கும் கடவுளே என்பார் ஆயமேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய் மையரு தவம் எலாம் வாரி மீண்டதே மணமுடிக்க ஆய வருபயன் மற்றொன்று உண்டோ? தந்தையும் தாயும் நீரே தலைநின்றன் பணிமின் என்றான் நாயகன் அவ்வாசம் அனல்குழை தூங்கு தன்செவியில் தொடரா மனம் ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் கோசலை. அஞ்சினன் அஞ்சு அன்னம் மின்இடை அலச ஓடி குஞ்சரம் அனைய வீரன் தோள்தழுவிக் கொண்டாள் சீதை வஞ்சனை நெஞ்சுறப் பட்டது பொய் மான் அரக்கன் அவ்வுரை எடுத்து அரற்றினான் ராமா பஞ்சியை…
ஐம்புலன் அடக்கம் வேண்டும் என்று ஐந்து குறுவிடம் கற்ற மேதை ஓம் நமோ நாராயணா என்னும் எட்டெழுத்து மந்திரத்தை உலகுக்குச் சொல்ல காம்பு பூவை தாங்கி நிற்பது போல் மக்களைத் தாங்க வந்தவர்ஆம்பல் ஊதும் கிருஷ்ண பக்தி ஆயிரம் ஆண்டு ஜெயந்தி விழா. பல்லாண்டு பல்லாண்டு வாழப் பாடும் நாராயண நாம பக்தி நெறி நல்லோர் உறவு நாளும் வளர தன்னடக்கம் கொண்டு வாழ்ந்த மகான் கல்யாணம் செய்தும் துறவு ஏற்ற தூய மனம் கொண்ட மகான் நல்குதல் விரும்பி நன்மைகள் செய்து நானிலம் வணங்கும் மகானே ராமானுஜர்.
கற்றலில் தேர்ச்சியும் கனிவான நேசமும் கடமை வேட்கையும் கனியப் பெற்றவர் கற்பு எளிமை பணிவு சேவையில் “பிஷனரி ஆஃப் சாரிட்டி” அமைத்தவர் உற்ற உறவாய் இந்தியாவை நேசித்தார் அறப்பணி ஆற்ற தன்னையே அர்ப்பணித்தார் குற்றம் பார்க்காமல் கொள்கை கொண்டார் ஏழை குழந்தைகள் ஏக்கம் போக்கினார். தாய்மைக்கே உரிய நேச உணர்வால் தாயாய் இருந்து கல்வி போதித்தார் ஓய்வு அறியாமல் பாடு பட்டார் தொழு நோயாளியை குளிக்க வைத்தார் வாய் மொழியில் அன்பு கொண்டு வாடியவர் குறை போக்க முனைந்தார் காய் மனதையும் கனிய வைத்தார் பொறுமை காத்த அன்னை தெரசா.
விடுதலை விடுதலை விடுதலை அடிமை கொண்ட வெள்ளையன் வெளியேற ஒன்றுபட்டு வாடும் மக்கள் குரல் எழுப்பி வீறுகொண்டு எழுந்த போது விடுதலை. அடிமை பட்ட இந்தியா கப்பம் கட்டும் போது கணக்கில்லா செல்வத்தை தடிப்பிடித்த காந்தி கொள்கையில் நின்றவர் கப்பல் வாங்கி கடலில்விட்டு வென்றவர்.வழக்குத் தொழில் செய்த போதும் வாழ்வு இழந்து தேசம் காத்தவர் இழந்த பொருள் அனைத்தும் என்றாலும் வலிமை கூடி எதிர்த்து நின்றவர். அடிப்பட்டு இடிபட்டு இன்னல் பட்டபோதும் மனம் இடிந்து போகாமல் எதிர்த்தவர் முடி நரைத்து முதுமை வந்த போதும் சிறை சென்று செக்கிழுத்த செம்மல்.வலி பொருத்து ரத்தம் சிந்தி பொலிவு இழந்த போதும் வீறுகொண்டு பொழிவு பெற்று பொங்கி எழுந்து எதிர்த்து நின்ற வேங்கை அவர் அமர்ந்து இருந்து பல நூல்கள் படைத்து தந்த வழி வகுத்தவர் அமரர் ஆனபோதும் கூட நம் மனதில் நிற்கும் கப்பலோட்டிய தமிழன்.