பொங்கி வரும் நீர்போல் புதுப்பொலிவு பெற்று
ஏழு வண்ணங்களில் ஏழு சுரங்கள் பாட
இயற்கையின் அழகில் இறைவனின் அற்புதம்
மயிலின் ஆடல் குயிலின் கூவல்
மானின் துள்ளல் மதி மயக்கும் இசை
பச்சை மரங்கள் பறந்து வரும் கிளி
மலர்ந்த பூக்கள் கொண்டு வரும் வாசனை
தென்றல் காற்றோடு கரைந்து வரும் குரல்
ரசிப்பதும் சிரிப்பதும் மனிதனின் மகத்துவம் பிரம்மனின் படைப்பின் ரகசியம் இதுவோ?

” அன்பை பெருக்கு
சோம்பல் விலக்கு
உழைப்பை போற்று
நம்பிக்கை ஊற்று”

இயற்கையின் இயக்கம் ஒவ்வொரு இசை
இதயம் மகிழ்வது மெல்லிய இசை
பயத்தல் அசைவும் அதிர்வம் இசை
பண் பதவு ஊற்றும் இசை கயல்விழி அன்னை அசைவும் இசை
இறைவன் மெய்யுருகி ரசிப்பதும் இசை
இயங்கும் உயிர்கள் ரசிப்பதும் இசை
பிறப்பும் இறப்பும் எதிலும் இன்னிசை.

Share.

Leave A Reply