வேம்புஇலை இஞ்சி மஞ்சள் சார்
சீரணமாகும் வயிற்றுப் பூச்சி மருந்து
மூக்குருட்டி கீரை சர்க்கரை குறைக்கும்
முள்ளு முருங்கை சளிவலி போக்கும்
பூண்டு சர்க்கரை வெட்டுக்காயம் போக்கும்
மல்லி, சீரகசார் வாயு நீக்கும்

பூச்சி கடித்த இடத்தில் சுண்ணாம்பு
தடவ குணமாகும் அரிப்பு நீங்கும்.


பனை தரும் உணவு உண்டு எதிர்ப்பு சக்தி பெற்று வாழ்வோம்
தினை தேன் நோய் எதிர்ப்புக்கு
திடமாய் இருக்க வெயிலில் சுற்றாது
நனை பால் கல்கண்டு தயிர்
பாலில் செய்யும் உணவு உண்டு
மனையில் விளையாடி மகிழ்வாய் இருக்க
சிறுவருக்கு நோய் வராமல் தடுக்கும்.


அவல் பொறி கடலை சுண்டல்
கொய்யா விளாம்பழம் நாவல் கொழுக்கட்டை
கவலை இல்லாமல் சீரண மாக்கும்
சிவாயநம எனும் மந்திரம் ஓத
கவனம் சிதறாத வாழ்வு தரும்
புவனம் போற்றும் புத்துயிர் வரும்
சிவனே எனசில நேரம் ஓய்வு
சிறந்த மருத்துவ சித்த மருந்து.

Share.

Leave A Reply