கருவில் இருந்து தாயின் தமிழுணர்வு
சுவாசம் ரத்தத்தில் கலந்து உந்தியில்
இருமடங்காகி இதயம் இயங்கிய போது
தமிழ்.. .தமிழ்… என்று சுவாசித்தது
மேருமலை போல் உயர்த்தி மதித்ததால்
உருகி மனதில் மனம்வீசி பரவியது
சிருட்டி வசமானது சிம்மாசனத்தில் தமிழ்!
புகழ் ஓங்கி ஒளிர்தல் ஒளிர்வு.
மதுரைதமிழ் சென்னைதமிழ் கொங்குத்தமிழ் புதுவைத் தமிழ்
என எங்கு சென்ற போதும் சங்கமம் ஆக பாலம் அமைந்தது
“யாதும் ஊரே யாவரும்” தோழமை
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
எண்ணத்தை பதிவாக்கி வாழ வழிவகுத்த
எங்கள் தமிழ் என்னுயிர் தமிழ்
உயிரும் உணர்வும் தமிழே நிறைந்து.