என்று தனியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்ற பாரதியார் பாடல் உமது சுவாசம் சுவாசம் நீற்கும் போதும் துணைவியார் பாட வென்று விட்ட சுதந்திர சுவாசத்தை இறுதி மூச்சில் சுவாசித்து விண் உலகு சென்றவர்என்றும் பாரதியார் பாடல் உன் இதய சுவாச மாகி பாடிக் கேட்ட ரசிகன். தூய தமிழ் கொள்கை கொண்டு எழுந்து துயர் கண்டு அச்சம் இல்லாத சிங்கம் வையகம் தாயகம் வானளவு உயர்ந்து நின்றவர் மகன் இறந்த போது பம்பாயில் இருந்து துயர துக்கம் இன்னல் தந்த போதும் கப்பல் வாங்கி இந்திய தேசம் காத்தவர் வயது குறைந்த மகன் இறுதி சடங்கு செய்ய முடியாத தந்தை இந்தியமகன்.இரண்டு அடி திருக்குறள் நெறி கொண்டு இன்பம் கொண்டு வாழ்ந்த நல் மனிதர் பேரன் இன்று பெயர் சொல்லும் பிள்ளை உமது வழியில் தூய தமிழ் நேசம்சேர நாட்டு மண்ணில் செக்கிழுத்த…
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
மீசைப் பாரதி முண்டாசு கவிஞர் திசை எட்டும் கொட்டிய முரசு இசைப் பாட்டு முழங்கி சுதந்திர தாகத்தை எழுப்பிய பாரதி.தேசம் போற்றும் மகாகவி பாரதி பெண் விடுதலை வேண்டி எழுதி நேசம் கொண்ட பாரதி விண் முட்ட எழுப்பினார் குரல். சாதி சமுதாயம் வெறுத்த பாரதி போதி மரத்து புத்தர் போல மாற்றப் போட்டார் பூணூல் ஏற்றம் கண்டார் மக்கள் மனதில்.கும்மிப் பாட்டு பாப்பா பாட்டு விம்மி எழும் அஞ்சா பாட்டு தமிழர் நிமிர்ந்த பாட்டு எத்தர் கூட்டம் பயந்த பாட்டு. இயற்கை ரசிக்கும் ரசிகன் பாரதி இறை நேசம் கொண்ட பாரதி விடுதலை வேள்வி பாரதி வீறு நடை போட்ட பாரதி. வறுமைக் கோட்டில் வாடிய பாரதி எட்டய புரத்து கவிஞன் பாரதி அஞ்சா நெஞ்சன் பாரதி மரணம் இல்லா மகாகவி பாரதி.
இராமையா சின்னம்மை பெற்றெடுத்த இராமலிங்கம் அண்ணன் அண்ணியிடம் வளர்ந்த பிள்ளை இராமலிங்கம் தலைப் பேனையும் கொல்லவிடாது தலையில் விட்டுக் காத்த இரக்கசீலர்சரலமாக கந்தகோட்ட முருகனைப் பாடினார் சிந்தனை முழுவதும் இறைவன் மீதிருக்க இராமலிங்கம் பள்ளிக்குப் போகாத பண்டிதர் கடுக்கனை திருடனுக்கு கொடுத்த தயாளன்.பசித்த பிள்ளைக்கு வடிவாம்பிகை தமக்கை வடிவில் வந்து உணவு கொடுக்க புசித்த பிள்ளைக்கு முருகன் அருள்கொடுக்க சொற் பொழிவு தடையின்றி வழங்க கசிந்து நடராஜர் அருள்கூடி சிதம்பரர் அருளால் தண்ணீரில் விளக்கு எரிய பசித்தவர்க்கு உணவு தெய்வ வழிபாடு அணையா அடுப்பு அன்னதான தர்மசாலை. ஒருதிரை மாயசக்தி ஒருதிரை கிரியாசக்தி ஒருதிரை பராசக்தி ஒருதிரை இச்சாசத்திஒருதிரை பராசக்தி ஒருதிரை ஆதிசக்தி ஒருதிரை தூசிற்சக்தி ஒளிருமச் சக்திஏழுமே கருப்பு நீலம் பச்சைசிவப்பு பொன்மை வெண்மை பொருந்தி ஆறும்கலந்த கலப்போடு எழுதிரை அருட்பெருஞ் சோதிச்சுடரின் தனிப்பெருங் கருணை வடலூர் வள்ளலார் ஞான சோதியே.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒழுங்குடன் செல்லும் எறும்பு இணைந்து ஒன்றுபட்டு வானில் பறக்கும் பறவை தலைமை ஏற்று இணைந்து வாழும் ஒன்றிணைந்து விலங்குக் கூட்டம் வாழும் பிரிந்து செல்லாமல் பாதுகாத்து வெல்லும் ஒன்று பட்டே தேன்கூடு கட்டும் தேனிவாழும் முறை சொல்லும் இணைந்து. அடிமை ஆட்சி உடைத்து எரிந்து சுதந்திரம் பெற்றது இணைந்து துணிந்ததால் மடியும் கொடியபுற்று காச அம்மை பிளாக்குக்கு மருந்து கண்டுபிடித்தது இணைந்து துணிந்ததால் கொடிய சுனாமி மழை வெள்ளத்தில் இணைந்து துணிந்து வெற்றி கொண்டோம் மடிந்த ராணுவ வீரருக்கு அஞ்சலிசெய்து இணைந்து துணிந்து நாட்டை காப்போம்.இடர்கள் எத்தனை வந்த போதும் துணிந்து துயர் துடைத்து வாழ்வோம் தேடல் என்பது எப்போதும் இருந்தால் வாடல் என்பது ஓடி ஒழியும் நாடல் மாற்று வழி ஆனால் கோடி நன்மை தேடி வரும் கூடல் நகரத்து கூத்தாடி இறைவன் இடர்களைத் தவிர்ப்பான் இணைந்து துணிவோம்.
இந்திய எல்லை இறைவனின் எல்லை இறைவனின் பூமியெங்கும் இந்தியர் எல்லை இமயம் குமரிமட்டும் எல்லைக ளில்லைஇந்த இன்பவையம் முழுவதும் எங்களின் எல்லை.சக்தியின் பூமிநிற்கக் கண்டது உலகம் சக்தியைத் தெய்வமென்று கண்டது பாரதம் பக்தியை நோக்கிஇன்று நடந்தது உலகம் பக்தியின் ஆதிஅந்தம் பார்த்தது பாரதம்.சித்திரக் கூடமும் சிற்பகோ புரங்களும் தத்துவத் தெய்வமும் தனிப்பெரும் மதங்களும் பேதமும் சீதமும் வித்தையும் வீரமும் நாகமும் நடனமும் நாட்டிய கலைகளும்.பாரதம் அன்னவள் பண்பினால் வாழியே பாரத மாந்தரின் படைக்கலன் வாழியேவாழிய என்னுமோர் வார்த்தையும் தமிழினில் வலியுறும் அன்னவன் வாழுவாள் வாழியே. போகங்கள் முடியும் தத்துவம் பிறக்கும் தாகங்கள் தீரும் மனதாவல்கள் ஒடுங்கும் சுற்றம் துறத்தால் அதுவே யோகம் கற்றுத் தெளிந்த ஞானமே யோகம்ஐம்புலன்கள் பஞ்ச பாண்டவர் போன்றது ஐம்புலன் அடக்க வாழ்வே ஒழுக்கம் தெய்வம் உண்டென்றிரு சஞ்சீவி மூலிகை தாய் போல் காப்பதே யோகம்.
சிவந்த மண் சிறுகூடல் பட்டியில் பிறந்த இலக்கிய ஞானி கண்ணதாசன் நவரச கவிதை தந்த கவிச்சிற்பி எக்காலத் தவரும் விரும்பும் கவி குவடு மேல் இருக்கும் கண்ணனை உணர்ந்து நாத்திகம் இறந்த மேனியென்று நவநீத கண்ணன் புகழ் பாடி கண்ணனுக்கு தாசனாய் கவிதை தந்தவர்.”எண்ணங்கள் ஆயிரம்” “ஞான மாலிகா” ” எனது சுய சரிதம்” பதிவு மண்ணுள்ள மட்டும் மறக்க முடியாது அர்த்தமுள்ள இந்து மதம் பத்தும் விண்ணளவு பரவி பாராட்டப் பட்டவை சித்தரை படித்தாய் சித்தாந்தம் பேசி கண்ணனை எண்ணியே காலத்தை கடந்தாய் காலம் கடந்தும் எண்ணத்தில் நிற்கின்றாய்.கம்பனை புகழ்ந்தார் பாடல் ஆக்கினார் கம்பன் கழகம் தாரணி புகழ்வதாக நம்பிக்கை கொண்டே இதழ்களில் எழுதினார் நாத்திகம் பேசினார் நர்த்தனம் ஆடினர் விம்மிதம் நடந்தது ஆத்திகம் எழுதியே ஆனந்தம் கொண்டார் கண்ணணுக்கு தாசன் சிம்மாசனம் போட்டு மக்கள் மனதில் இலக்கிய ஞானியின் பாடலும் ஒலிக்கிறது.
இறந்தவர் கண்கள் எரிக்கப்பட்டது ஒருகாலம் இரண்டு விழிகள் இருவருக்கு பொருத்தி இருவர் வெளியுலகை கண்டு மகிழ்வது இன்றைய பொது நலத் தொண்டு.இரத்தம் இல்லாமல் இறந்தவர் ஒருகாலம் இருப்பவர் கொடுத்த சேமிப்பு வங்கி உடனே ஓடிவந்து உதவ வரும் இளைஞர் உறவினர் விழிப்புணர்வு வெளிப்பாடு. கிட்னி முதல் இதயம் வரை மாற்று உறுப்புகள் மாற்றும் மருத்துவம் மூளைச் சாவு அடைந்த விபத்தினரை தானம் செய்ய முன்வரும் பெற்றோர். முதியோர் இல்லம் வருத்தம் தந்தாலும் பேணிக் காப்பது பொது நலம் பிறந்த குழந்தையை தூக்கி எறிந்தாலும் எடுத்து வளர்ப்பது பொது நலம்.தொழு நோயாளிக்கு மருத்துவம் செய்த அன்னை தெரேசா அன்பின் வடிவம் ஆதரவு கரம் கருணை இல்லம் வாடிய பயிரை கண்டுவாடிய வள்ளலார் நாட்டைக் காக்க பனிமலையில் காவல்புரியும் ராணுவ வீரர்கள் அவர்கள் குடும்பத்தினர் பொதுநலத் தொண்டின் தியாகிகள் ஒவ்வொரு சுதந்திரப் போராட்டத்தின் பின்பும்… இந்திய ரத்தமும் சதையும் சாட்சியாய் சிதறிய மக்கள் பல்வேறு…
தாய் தமிழே உன்னை நேசித்தேன் தரணியில் உன் புகழ் பரப்ப சேய் மனத்தால் நினைத்து புகழ்ந்தேன் சென்ற இடமெல்லாம் மூச்சாய் சுவாசித்தேன்வாய் உன்னைப் பாடிப் பேச வளர்வது தமிழும் நாமும் தான் நோய் கூட தூரப் போகும் தமிழ் மருத்துவ உணவு உண்டால். பார் புகழும் திருக்குறள் திருவருள் உலகம் வியக்கும் தமிழ் மொழி பேர் சொல்ல தமிழ் படிப்போம் இருக்கும் வரை மூச்சாய் சுவாசிப்போம் நேர்பட வாழ வழி காட்டும் நிம்மதி கிடைக்கும் இயங்க வைக்கும் தேர் போல இழுத்துச் செல்வோம் ஒன்று பட்டு உறுதி கொள்வோம். தமிழ்த்தாய் அணிகலன் தமிழன் பொக்கிசம் தரணி புகழ்ந்து பாடும் பெட்டகம் உமிழ் நீரும் இனிக்கும் இதயம் இயங்க சக்தியாய் மாறும் தமிழ் சிமிழ்பு நம்மை சீரமைக்கும் நெறிப்படுத்தும் சிரஞ்சீவி ஆக்கம் சிந்தனை பெருக்கும் திமிர்தல் தமிழ் மொழி ஆனால் தரணியில் உயர்வது நாமும் தான்.
முப்பாட்டனுக்கு பாட்டன் திருவள்ளுவர் திருக்குறள் வாழ்வியல் நெறிப்படி வாழ்தல் இனிது முப்பாட்டி ஔவையார் வகுத்து தந்த அமுத மொழிப்படி வாழ்தல் இனிது எப்போதும் என்னாலும் வாழ்வின் அர்த்தம் ஆய்ந்து வாழ்ந்த மூதாதை அனுபவம் எப்போதும் என்னாலும் ஏற்று நடந்தால் வாழ்வும் நாடும் வளமே காணும்.தாத்தா பாட்டி அனுப்பவப் பாடம். கேட்டு வளர்வது செவிவழி பாடம் சத்தைப் போட்டு வளரும் மரம் நற்கனி கொடுப்பது போல் நல்…. முத்தாய் விளையும் மழைத் துளி பயன் தருவது போல் நம் மூத்தோர் சொல் ஊட்டச் சத்தாய் உரமாய் இருந்து நற்பலன் தரும். கருவில் சுமந்து அன்பில் அரவணைத்து தாய் மொழி கற்பிக்கும் அன்னை இருவினைப் பயனும் எடுத்துச் சொல்லும் அன்னை தந்தை வழிநடத்தல் இனிது குருவாக கற்பிக்கும் ஆசிரியர் சொல் உருவ சாத்திரம் கற்கும் சொல் திருவுளம் கொண்டு ஏற்று நடந்தால் வீடும் நாடும் போற்ற வாழலாம்.
அகரத்தில் எழுந்த அன்னைத் தமிழ் ஆய்வு செய்யும் என்ன அலையில் சிகரத்தில் உயர்த்தி உயர்வு கொள்ள சித்தம் திண்ணமாய் செயல் பட மகராலயம் ஓயாத உழைப்பது போல் மார்க்க நெறியில் நிமிர்ந்து நின்று உகரத்தில் எழுந்த உயிர் மூச்சாய் மொழிக்கு உரக்க குரல் கொடு. வள்ளுவன் தந்த திருக்குறள் உலகம் முழுமைக்கும் பரவ வழி வகுத்து பிள்ளைத் தமிழ் எழுச்சி கண்டு விரும்பும் மொழியாய் பாடத்தில் வைத்து கொள்ளை இன்பம் தரும் ஈரடி இனிமை பொங்கும் மன நிறைவில் வெள்ளை உடையணிந்த பாரத அன்னைக்கு தேசிய நூலக்க குரல் கொடு. உண்மைக்கு என்றும் குரல் கொடு உரிமைக்கு என்றும் குரல் கொடு திண்ணம் கொண்டு குரல் கொடு திண்மை கொண்டு குரல் கொடு பண்புக்கு என்றும் குரல் கொடு பகுத் தறிவுக்கு குரல் கொடு மண்ணுக்கு என்றும் குரல் கொடு நீதிக்கு உரக்க குரல் கொடு.