ஐம்புலன் அடக்கம் வேண்டும் என்று
ஐந்து குறுவிடம் கற்ற மேதை ஓம் நமோ நாராயணா என்னும்
எட்டெழுத்து மந்திரத்தை உலகுக்குச் சொல்ல
காம்பு பூவை தாங்கி நிற்பது
போல் மக்களைத் தாங்க வந்தவர்
ஆம்பல் ஊதும் கிருஷ்ண பக்தி
ஆயிரம் ஆண்டு ஜெயந்தி விழா.


பல்லாண்டு பல்லாண்டு வாழப் பாடும்
நாராயண நாம பக்தி நெறி நல்லோர் உறவு நாளும் வளர
தன்னடக்கம் கொண்டு வாழ்ந்த மகான்
கல்யாணம் செய்தும் துறவு ஏற்ற
தூய மனம் கொண்ட மகான்
நல்குதல் விரும்பி நன்மைகள் செய்து
நானிலம் வணங்கும் மகானே ராமானுஜர்.

Share.

Leave A Reply