கற்றலில் தேர்ச்சியும் கனிவான நேசமும்
கடமை வேட்கையும் கனியப் பெற்றவர்
கற்பு எளிமை பணிவு சேவையில்
“பிஷனரி ஆஃப் சாரிட்டி” அமைத்தவர்
உற்ற உறவாய் இந்தியாவை நேசித்தார்
அறப்பணி ஆற்ற தன்னையே அர்ப்பணித்தார் குற்றம் பார்க்காமல் கொள்கை கொண்டார்
ஏழை குழந்தைகள் ஏக்கம் போக்கினார்.
தாய்மைக்கே உரிய நேச உணர்வால்
தாயாய் இருந்து கல்வி போதித்தார்
ஓய்வு அறியாமல் பாடு பட்டார்
தொழு நோயாளியை குளிக்க வைத்தார்
வாய் மொழியில் அன்பு கொண்டு
வாடியவர் குறை போக்க முனைந்தார்
காய் மனதையும் கனிய வைத்தார்
பொறுமை காத்த அன்னை தெரசா.