வீரம் விளைந்த சிவகங்கை சீமையின்
வரலாற்றுப் புறநானூற்று காட்சி ஒன்றுண்டு
முதல்நாள் மறுநாள் நடந்த போரில்
கணவனையும் தந்தையும் இழந்த பெண்.
போர்பறை கேட்ட வீரக்குடி மகள்
விளையாடிக் கொண்டிருந்த மகனை அழைத்து வெள்ளையாடை உடுத்தி
வேலொன்றை கையில் கொடுத்து
போர்க்களம் நோக்கி போய்வா மகனே என்றனுப்பினாள்.
தமிழ் இலக்கியத்தின் ஒப்பற்ற பாடல்
பாடலை எழுதியவர் பெண் பாற்புலவர்
ஒக்கூரில் பிறந்த மாசாத்தியார் என்று
அழைக்கப் பட்ட இலக்கியப் பெண்.
வீரமங்கை வேலு நாச்சியார் மருதுபாண்டியர்
பிறந்த பூமி சிவகங்கை
சீமை
யாதும் ஊரே யாவரும் கேளிர் உலகளாவிய சிந்தையே உதித்த இடம்.
தமிழ்க் கவிஞர் கனியன் பூங்குன்றன்
தமிழரிடம் நிலைத்த இடம் சிவகங்கை
மாசாத்தனார் கபிலர் வாழ்ந்த ஊர்
மங்கா புகழ் சேர்த்த சிவகங்கை.
கவியரசு கண்ணதாசன் பண்டிதமணி கதிரேசன் சுத்தானந்த பாரதியார் பிறந்த மாவட்டம்
சிவகங்கை கீழடி அகழாய்வில் கீழேதோண்ட
2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழனின்…
தமிழி எழுத்துக்கள் தமிழ் பிராமியில்
குவிரன் ஆத(ன்) முழுமை பெறாத
உடைந்த பானையில் எழுதிய எழுத்துக்கள்
உலர்ந்த பின்பு பொறிக்கப்பட்ட எழுத்துக்கள்.
கி.முஆறாம் நூற்றாண்டின் தமிழ் மக்கள்
எழுத்தறிவு பெற்றவர்கள் என்ற விபரம்
குறியீடுகளுக்கு அடுத்ததாக தமிழ் பிராமி
எழுத்துக்கள் 56பானை ஓடுகள் சேகரித்துள்ளனர்.
கீழடியில் பானை ஓடுகள் குவியல்
குவியலாக கிடைப்பதால் பானை வனையும்
தொழில் கூடம் இருந்ததை அறியமுடிகிறது.
ரோமன்நாட்டு வணிகர்கள் வந்ததை குறிக்கிறது
70எலும்பு துண்டுகளின் கிடைத்த நிலையில் வேளாண்மைக்கு காளை எருமை வெள்ளாடு உறுதுணையாக இருந்தது அறிய முடிகிறது
வெட்டுண்ட மான் வெள்ளாடு காட்டுப்பன்றி
உணவுக்காக பயன்படுத்தியது அறிய முடிகிறது
சங்ககாலம் முதல் வேளாண்மை தொழிலும் கால்நடை வளர்ப்பும் பின்னிப் பிணைந்து
தொடர்ந்து வருவது ஆய்வில் தெரிகிறது.
சிலிக்காவும் பிணைப்பும் காரணியாக சுண்ணாம்பும் கலந்து கட்டப்பட்ட சாந்து செங்கற்கள்
கூரை ஓடுகள் சுடுமண்
உறைகிணறு
இவற்றால் தரமான கட்டுமான பொருளறியப்படுகிறது.
தக்களி துணிகளில் வரைய பயன்படும்
எலும்பிலான கூறிய முனையுடைய வரைகோல் தறியில் தொங்கும் கருங்கல் குண்டு
செம்புஊசி சுடுமண் பாத்திரம் சாயத்தொழிலும்.
நெசவுத் தொழிலுக்கும் சான்றாய் கிடைத்துள்ளன தங்கத்தில் ஏழு ஆபரண துண்டுகள்
செம்பு அணிகலன்கள் கல்மணிகள் கண்ணாடி மணிகள்
நேர்த்தியாக செய்யப்பட்ட வீட்டுஉபகரணப் பொருட்கள்.
சங்க கால வளமையும் பண்ட பாத்திர நகைய தொழிலை அறியமுடிகிறது
வட்டச் சில்லுகள் பாண்டி நொண்டி
விளையாட்டையும் தாயம் விளையாட பகடைக்காய்..
இப்படி இன்றைய கீழடி காட்டும் அன்றைய தமிழகம் வளமும் செழுமையும்
தமிழ் புலமையும் அந்நிய நாட்டுத்
தொடர்பும் அறியவைக்கும் கீழ்அடி ஆய்வாகும்.