வட்டி கட்ட மாட்டேன் என்று வாள் எடுத்த கட்டபொம்மன் கொடியை கீழேபோட மாட்டேன் என்று
கொடி காத்த திருப்பூர் குமரன்.
வீர சுதந்திரம் வேண்டி நின்றார்
வீர உணர்வுகளைத் தூண்டி விட்டார்
விடுதலை வேள்விக்கு கவிதை தூவி
விடுதலை கிளர்ச்சிக்கு பாசறை அமைத்தார்.
மணியாச்சி கொலை ஆஷ் துரை
மாடசாமி அடைக்கலம் எலிக்குஞ்சு ஆறுமுகம்
காக்கிச் சட்டைக்குள்ளும் கதர் சட்டை
கதிர்வேலு அய்யாமுத்து நடேசன் என…
காந்திய வழியில் கதர் இயக்க செயலாக்கம்
வந்தே மாதரம் பாரததேவி மண்பொம்மை
போராடி சேர்த்தார் உரியவரிடம் பாரதிதாசன் ஊருக்கு நல்லது செய்வோம் பாரதி.
இப்படி சுதந்திர போராட்ட வீரர்கள்
இதயத்தின் எழுச்சி காந்தி ஆறுமுகம்
இந்திய உணர்வும் எழுச்சி விடியலும்
இணைந்ததால் இன்று சுதந்திர இந்தியா.