வள்ளுவர் தந்த திருக்குறள் வாழ்க!
வான் புகழ் கொண்டு வளர்க. வள்ளுவர் நெறி ஏற்று வாழ்க!
பொது மறை நூலாக வளர்க. வள்ளுவர் குறள் அடி வாழ்க!
குறுகிய சொல் அடி வளர்க. வள்ளுவர் மூன்று பால் வாழ்க!
அறம் பொருள் இன்பம் வளர்க.
கடுகு அணுவைத் துளைத்து வாழ்க!
கடமை செய்தே வாழ்வில் வளர்க.
குடும்பம் தழைக்க படித்து வாழ்க!
கும்பிடும் பொது நூலாய் வளர்க.
சேடு உடன் இளமையாய் வாழ்க!
செதுக்கிய சிற்பமாய் என்றும் வளர்க.
நெடு நீர் போல் வாழ்க!
நெம்பு கோல் போல் வளர்க.
உலகப் பொது மறையாய் வாழ்க!
உலகக் கருத்தை கொண்டே வளர்க.
கலச குடமாய் நிறைந்து வாழ்க!
கலகம் செய்பவர் திருந்த வளர்க.
நிலம் தாண்டி சிறக்க வாழ்க!
என் நிலையிலும் சமரசமாய் வளர்க.
பலப் படுத்தும் திருக்குறள் வாழ்க!
பயம் இன்றி உயர வளர்க.
பக்குவப் படுத்தும் திருக்குறள் வாழ்க!
பண் படுத்தும் நெறியாய் வளர்க.
உக்கிரம் போக்கும் மருந்தே வாழ்க!
உண்மை உணர்த்தும் உணர்வே வளர்க.
சக்கரமாய் சுழன்று சக்கரவர்த்தி வாழ்க!
மதுரை சங்கத் தமிழாய் வளர்க.
சூக்க கருத்து கருவூலம் வாழ்க!
சுகவழி சுகுணம் நாளும் வளர்க.
தேசம் காக்கும் திருக்குறள் வாழ்க!
தேசிய நூலாய் என்றும் வளர்க.
நேசம் கொள்ளத் திருக்குறள் வாழ்க!
நெடிது நீண்ட புகழுடன் வளர்க.
பாசம் கொண்ட பண்பு வாழ்க!
பாரதம் தாண்டி திருக்குறள் வளர்க.
நேசம் காட்டும் மதுரை வாழ்க!
தாமரை மலரில் எழுந்தாய் வளர்க.
தேசிய நூலாய் திருக்குறள் வாழ்க !
தேச ஒற்றுமை காத்து வளர்க.
நேசிக்கும் நூலாய் திருக்குறள் வாழ்க!
நேசம் கொள்ள வைத்து வளர்க.
பசி போக்கும் மருந்து வாழ்க!
பார் புகழ் எழுச்சி வளர்க. ஊசி முனை எழுத்தே வாழ்க!
திருக்குறள் தேசிய நூலாய் வளர்க.
வாழவும் வளர்க்கவும் உள்ள நூல்
விசுவாசம் வித்தகம் நிறைந்த நூல்
ஊழல் அகற்றும் உன்னத நூல்
உலகம் ஏற்ற திருக்குறள் நூல்
ஏழை இல்லாத தேசமாக்கும் நூல்
எண்ணம் திண்ண மாக்கும் நூல்
துழாவும் தூய தொன்மை நூல்
தேசிய நூலாய் ஆக்குவதே சிறப்பு.