பாஞ்சாலங் குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனை! பாஞ்சாலங் குறிச்சி பீரங்கிமேட்டு தூக்குகயிற்றை
வீரவரலாறு ஆக்கிய அஞ்சா நெஞ்சனே!
உன்பெயர் சொன்னால் சிறுவருக்கும் வீரம்வரும்.
சுதந்திர காற்றையே சுவாசித்து மாண்டதால்தான் அடிமைக் காற்று உன்மேல் படவேஇல்லை
அடிமை சங்கிலி கட்டிய போது சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டி…
வெள்ளையன் வெளியேறப் போராட்டம் வெடித்தது செக்கிழுத்து சிறைப்பட்டு சிவந்தகாய புண்ணேற்று மண்டியிட மறுத்ததால் மாண்டவர் எத்தனை?
மங்கா புகழ்பெற்றனர் சுதந்திர நாளில்.
நாட்டுப் பற்று ஏற்றோர் எல்லாம்
நானிலம் போற்றும் தியாகிகள் அன்றோ!
வீர பாண்டிய கட்ட பொம்மனே! வீரத்திற்கு தலை வணங்கிப் பணிக்கிறோம்.