விவசாய நிலத்தில் பெரிய கிணறு
அதில் குதித்து நீச்சல் அடிப்பர்
அவசியத்திற்கு ஏற்றம் பம்பு அமைத்து
நீர்ப்பாய்ச்சி பயிர் செழிக்க வளர்ப்பர்
கவசமாக இரும்பு மூடி போட்டு
தரை மட்ட கிணறுகளும் உண்டு
அவதூறு சொற்களுக்குப் பயந்து கவனமுடன்
கடமை செய்த காலம் நற்காலம்.
ஆழ்துளாய் கிணறு போட்டு நீரெடுக்க
வீடு விவசாயம் நிலம் எல்லாம்
ஆழ்துளைக் கிணறு பயன் பாட்டில்
நீர் வராத நிலத்தில் வட்டமான புதைகுழி
ஆழ்தல் சிறுவர் என்றால் வருத்தமே!
மூடாமல் விடும் சிறு தவறால்
மூழ்குதல் கவலையில் குடும்பமும் நாடும்
வீட்டுத் தவறு நாட்டுத் தவறாகிறது.
தம்கடமை தவறு வராமல் செய்தால்
வீடும் நாடும்மகிழ வழி வகுக்கும்
நம்தவறு சிறிது என்றாலும் வராது
கவனம் சிதறாமல் செய்தல் வேண்டும்
தம்தவரை தானே ஏற்றுக் கொண்டு
தானும் வருந்தாது
தன்பிறவி உணர்ந்து வம்பேதும் வருமுன் மூடி காத்து
மழைநீர் சேமிப்பாய் மாற்றி அமைப்போம்.
This is test
Photo by Pixabay on Pexels.com