தீபம் ஏற்றி திருவருள் பெற்றிடுவோம்
தீமை அகற்றி கோபம் அழித்திடுவோம்
பாவம் விலக்கி பயனில் கருத்தாவோம்
பாதம் பணிந்து பண்பை வளர்த்திடுவோம்.
அறிவைப் பெருக்கி அறியாமை போக்கிடுவோம் அறிவியல் சாதனத்தை தேவைக்கு வாங்கிடுவோம் அல்லும் பகலும் உழைத்த உழைப்பிற்கு
அகம் மகிழ பணம் வாங்கிடுவோம்.
ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடும் தீபாவளியை அனைவரும் கொண்டாட ஆண்டவனை வழிபடுவோம் ஆண்டியும் அரசனும் கொண்டாடும் தீபாவளியை ஆகாயம் போல அன்புடன் வரவேற்போம்.
ஆடை நெய்திடும் மக்கள் மகிழ ஆடை வாங்கி வறுமை போக்கிடுவோம்
பிஞ்சு விரல்கள் தொழில் ஒழித்து
பஞ்சு போல மகிழ வைப்போம்.
கோடி கோடியாய் சேர்க்கும் படத்தை
கோடியில் இருப்பவர்க்கு உதவி மகிழ்வோம்
தேடித் தேடி உதவும் சேவை வாடி நிற்கும் வறுமை போக்குமே!