(பதினோராம் திங்களில் நிகழ்வது குழந்தையை முத்தம் தரும்படி தாய் தந்தை அழைப்பது)
1-முதற்கால பூஜையில் பிரம்மா பூஜிக்க
இரண்டாம் கால பூஜையில் விஷ்ணு பூஜிக்க
இதம் தரும் இனிய மந்திரம் ஓதி
மூன்றாம் கால பூஜை செய்த பார்வதி
நாதன் திருவடி வணங்கிய தேவ ரிஷிகள்
மனித உயிர்கள் நான்காம் பூஜை செய்து
பாத விந்தனை பணிந்து வணங்கிய
தந்தைக்கு முத்தம்தர வா வா மணிகண்டா!
2-அடிமுடி இல்லாத சோதி லிங்கன்
அடியவரை காத்து அருளும் லிங்கன்
தடியடி பட்டு மண் சுமந்து
தமிழைக் காத்த சொக்க நாதன்
குடிகையில் குடிகொண்ட கூத்தன் நடராஜன்
நாட்டியம் வளர்த்த தில்லை அம்பலத்தான்
குடிகொண்ட கொண்டையில் கங்கையும் சந்திரனும்
சூட்டியவனுக்கு முத்தம் தர வா வா மணிகண்டா
3-பக்தி செலுத்தும் உயிர்க்கு எல்லாம்
சக்தி கொடுப்பவள் தாய் என்றால்
முக்தி கொடுக்கும் மார்க்கம் காட்டும்
சிவ ராத்திரி வழி பாடு பக்குவம் இல்லா மனிதரைக் கூட
நெறிப் படுத்தும் சிவ பக்தி நெக்குதல் கொண்டு நிம்மதி தரும்
சிவனுக்கு முத்தம்தர வா வா மணிகண்டா
4-பால் தயிர் நெய் கோமியம்
கோசலம் அபிசேகம் செய்து சிவனுக்கு வில்வமாலை சாத்தி தாமரைப் பூக்களால்
அர்ச்சனை செய்து பொங்கல் படைத்து
ஆல் தாங்கும் ஈசனுக்கு பஞ்சாமிர்தம்
பாயாசம் நெய்வேத்தியம் செய்து வணங்கி
இல்லக் கிழத்திக்கு இடப்பாகம் கொடுத்த
ஈசனுக்கு முத்தம்தர வா வா மணிகண்டா
5-தில்லையில் நடராஜப் பெருமானை வணங்கி
கோவிந்த ராஜப் பெருமானையும் வணங்குவது போல் ஒரு சேர வணங்கம் பேறுபெற்றோம்
பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் தில்லைமேனி பொலிந் திலங்கும் மின்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக் குன்றம் என்று
ஆல்தாங்கும் ஈசனுக்கு அப்பர் பாடும்
அப்பனுக்கு முத்தம்தர வா வா மணிகண்டா
6-கர்ம கர்த்தாவே பரமாத்மா அர்ப்பணமே
காரிய கார் மேக வண்ணா சர்வம் சலம் சலவன் சலசரமே
சங்கு சக்கரன் அருள் கரமே சீர்மிகு தாயாய் அருளிய பெருமானே
சீலம் சீவராசி மேன்மை பெற
சீதரன் மோகினி அவதார வண்ணன்
அன்னைக்கு முத்தம்தர வா வா மணிகண்டா
7-நல்ல குணமும் நல்ல நடத்தையும்
தர்மாத்மா என புகழுக்கு காரணம்
வல்லி வழகு வளம் சேர்க்க
பூமிக்கு வந்த வரமே மணிகண்டா
முல்லைத் தோட்டத்தில் விளையாடும் கன்றுபோல் துடிப்பாய் இருக்கும் அன்புக் குழந்தாய்
அல்லல் தீர்க்க வந்த மகனே
அன்னைக்கு முத்தம்தர வா வா மணிகண்டா
8-மக்கள் மண்ணில் நலம் பெறவும்
தரிசனம் செய்யவும் தொட்டுப் பார்க்கவும்
அக்கறை கொண்டு பிறந்த மணிகண்டா
திருப்பெயரும் திவ்ய லீலைகளும் கேட்டும் சம்சாரக் கடலைக் கடந்து கரையேற
பாடி மகிழவும் காணவும் அவதாரம்
இம்பர் உய்க்கப் பிறந்த மகனே
அன்னைக்கு முத்தம்தர வா வா மணிகண்டா
9-உண்ணும் உணவு இலை தண்ணீர்
பூ பழம் என முடிந்ததை படைத்து
மண்ணும் மக்களும் வாழ வேண்டும் என
எண்ணுபவனுக்கு இவ்வுலகில் இல்லாதது இல்லை
திண்ணமாகச் சொல்லி தெளிவு படுத்த
பெண்கலப்பு இல்லாமல் பிறந்த மணிகண்டா
மண்ணவர் மகிழப் பிறந்த மகனே
அன்னைக்கு முத்தம்தர வா வா மணிகண்டா
10-பிறப்பு இறப்பு சம்சார பந்தம்
துன்பம் நிறைந்தது என உணர்ந்து
துறந்த வைராக்கியம் விண்ணவர் பந்தம்
பிறவா வரம் பெறும் நாட்டம்
அறம் செய்து வாழவழி காட்ட புவியியல் பிறந்த புண்ணியனே மணிகண்டா நிறம் பலபேற்று ஒளிச்சுடரே மகனே
அன்னைக்கு முத்தம்தர வா வா மணிகண்டா.