( மூன்றாம் மாதத்தில் பிள்ளையை காக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டுதல்)
விநாயகர்

பூலோக மக்களின் முதல் கடவுளே
புவி வாழ வாழ்த்தும் விநாயகா
மேலோக மக்களும் உன்னையே வணங்குவர்
விண்ணவர் போற்றும் விநாயகா
கீலோக கடல்வாழ் காக்கும் கடவுளும்
தாய் தந்தை சுற்றி வந்த மூலோக விநாயகா தம்பி ஐயப்பனை
புவியோர் மகிழக் காத்திடுவாய்.


முருகன்

தேவர்களைக் காக்கப் பிறந்த முருகா
எளியோரைக் காக்கும் கருணைக் கடலே
தேவர்கள் அமுது உண்ட போதும்
அசுரர்கள் துயரம் தொடர்ந்தது
காவல் தெய்வமாய் காக்க வந்தாய்
குன்றில் நின்று மக்களைக் காப்பவனே
சேவல் கொடியோனே தம்பி ஐயப்பனை
கருணை கொண்டு காத்திடுவாய்.


பிரம்மா

நான்முகனே வேதப் பொருளே பிரம்மா
வேண்டும் வரம் தருபவனே நான்கு திசையில் தொழில் செய்பவனே
நல்லவே நடக்க அருள்பவனே ஒன்றுதல் செய்தாய் சிவன் திருமலை
மோகினி உருவில் ஒன்று சேர்த்தாய்
நன்றாய் படைத்தாய் குழந்தை ஐயப்பனை
என்றும் அன்புடன் காத்திடுவாய்.


சிவன்
நஞ்சுண்ட சிவனே நீலவண்ணக் கண்ணா
அமுதம் எடுத்து வந்த குமரி கொஞ்சம் குமரி மோகினியைக் கண்டு
மோகம் கொண்டதன் விளைவு ஐயனே
பஞ்சும் நெருப்பும் சேர்ந்த தீயில்
சோதியாய் சுடராய் தோன்றினான் குழந்தை மிஞ்சும் ஆற்றல் கொண்டவன் ஐயப்பன்
குழந்தையை என்றும் காத்திடுவாய்.


திருமால்

பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமானே
பக்தரை காக்க எழுந்த பெருமானே
பாற்பட்டார் என காக்க மோகினி
உருவில் வந்து தீர்வு தந்தாய்
மேற்கதி தந்த உன்னைக் கண்ட
சிவன் மோகம் கொண்டதன் விளைவு
போற்றும் புகழுடைய மைந்தனை தந்தாய்
ஐயப்பனை நாளும் காத்தருள்வாய்


கலைமகள்

அறிவுக் கண்ணின் ஊற்றாய் இருப்பாய்
அகிலம் போற்றும் தாயே சரஸ்வதி
நெறியுடன் வாழ கல்வி தருவாய்
நிறைந்த கலைகள் பல தருவாய்
குறிஞ்சி மலர்கள் அழகு செய்ய
மாணிக்க கட்டிலில் துயில் கொள்ளும்
பறிஉடல் பளபளப்பு கண்கூசும்
ஐயப்பனை என்றும் காத்தருள்வாய்.


லட்சுமி

எட்டு லட்சுமி தேவி அம்மா
எண்ணம் கைகூட செல்வம் தருவாய்
மொட்டு மலரில் பூமாலைத் தொடுத்து
சங்கு கழுத்தில் அணிந்து வணங்கி
நட்டார் கண்டு திஷ்டி படும்
குழந்தை ஐயப்பனுக்கு சுற்றி போட
நிட்டையில் இருக்கும் ஞானக் குழந்தை
ஆரோக்கியம் காத்து என்றும் காத்தருள்வாய்.


பார்வதி

பாரில் உள்ளோர் சக்தி வேண்டி
பார்வதி உன்னை வேண்டி நிற்பார்
மாரி பொழிந்து நாடு செழிக்க
சக்தி தரும் அன்னை பார்வதி வாரி அனைத்து கொஞ்சி மகிழும்
ஐயப்பன் கைஆட்டி காலாடி பூரிப்புடன் வளரும் குழந்தை ஐயப்பனுக்கு
சக்தி கொடுத்து நாளும் காத்தருள்வாய்.


சங்கிலி கருப்பன்

ஊர் காக்கும் சங்கிலி கருப்பா
கருப்பு வராமல் காவல் செய்பவனே
பேர் சொல்லும் பிள்ளை ஐயப்பன்
பூமியில் குழந்தையாய் பிறந்து இருக்கான்
சீர் செய்வர் சிறப்பு செய்வர்
பெயர் வைத்து தொட்டிலில் ஆட்டுவர்
வேர் பிடிப்பாய் வளர்வது போல
சங்கிலி கருப்பா நிழலாய் காத்தருள்வாய்.


பகவதி அம்மை

முப்பெரும் சக்தியைக் கொண்ட அம்மே
சோட்டானிக் கரையிலே அமர்ந்த அம்மே
கும்பியில் குங்கும பிரசாதம் நோய்
பேய் போகும் பகவதி அம்மே சுப்பிரம் சுடர்ஒளியில் இருள் போகும்
இன்மை மறுமை துயர் நீங்கும் சப்பிர மஞ்சத்தில் தூங்கும் குழந்தை
ஐயப்பனை காக்கும் அம்மே காத்தருள்வாய்.

Share.

Leave A Reply