பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன்
பரவசம் அடைந்தேன் முருகா
வேர்த்து வேர்த்து நடந்தேன்
வேண்டும் வரம் அடைந்தேன்
கால நேரம் பார்த்து
வணங்க வில்லை முருகா வேலவனை நினைக்க நேரம்
ஒரு தடையா முருகா!

பக்கத்தில் நீ இருந்தால்
பாசத்துடன் நான் இருப்பேன்
கக்கத்தில் இருக்கும் சேயாய்
மகிழ்ந்து தான் இருப்பேன் சிக்கல் வந்தால் கூட
சிரமம் இல்லை முருகா முக்கனி சாராய் வந்து
தமிழ் சாறு கொடுப்பதனால்!

வெட்டி வேலை இல்லை
வேலவன் நிறைந்து இருக்க
கட்டி காக்கும் வேலை
கந்தன் புகழ் பாடுவதே தட்டிக் கழிக்க மாட்டேன்
தடையைத் தகர்த்து எறிவேன்
சுட்டிப் பெண்ணாய் வந்து
சுனங்காமல் எழுத வந்தேன்.

பச்சை செடி கொடியில்
பசுமை நீ முருகா
நச்சு நாகப் பாம்பின்
ரத்தினம் நீ முருகா பேச்சுத் தமிழ் நடையில்
மூச்சு நீ முருகா
ஆச்சு தரிசனம் அனைத்தும்
ஆள்வது நீ முருகா!

சுவடு தந்த முருகா
சொர்க்கம் அதுதான் முருகன்
தவறு எதுவும் செய்தால்
தடுத்து ஆள முருகன் நவரசம் போல் எழுத
நல்வழி காட்டும் முருகன் பரவசம் அடைந்த என்னை
பக்குவப் படுத்தும் முருகன்!

கண் எதிரில் வந்து
காட்சி தந்த முருகா
மண் மணம் மாறாமல்
மகிமை தந்த முருகா தண் ஒளி தந்து
தரணி காக்கும் முருகா
வண் கை தந்து
வாழ்த்தி அருள் முருகா!

கமலத்தில் பிறந்த ஒளியே
கார்த்திகை பெண்கள் கையில்
வம்சம் தழைக்க வந்த
வண்ண அழகு முருகா
மமதை கொண்ட அசுரனை
மரிக்க வைக்க வந்து
சமரம் செய்து எதிரியை
சரணம் அடைய வைத்த

சரவண பொய்கை முருகா
சக்தி பாலா சண்முகா வரனும் எப்போதும் என்னுடன்
வள்ளன்மை தர வேண்டும் சிரமம் இல்லை முருகா
சிங்கார வேலன் இருக்க சரணம் சொன்னால் போதும்
சடுதியில் வருவாய் முருகா!

குன்றில் இருக்கும் குமரா
குறைகள் போக்கும் தலைவா
மண்டி இட்டு வணங்கி
மலர் பாதம் தொழுவேன் கன்றுபோல் சுற்றிவருவேன்
கதிர் காம முருகனை
சன்மம் வேண்டாம் முருகா
சரணம் அடைந்தேன் முருகா.

Share.

Leave A Reply