181-தனக்காக என்றால் தயக்கம் காட்டு நாட்டுக்காக என்றால் செய்.182- குழம்பிய மனம் கலங்கிய குட்டை தெளியும் போது செய். 183தகுதி இல்லாதவனிடம் உதவிக்குப் போகாதே பொறுத்திரு போன பின். 184-சிக்கல் வந்தால் சிதைந்து போகாதே சினம் நீக்கிச் செய். 185-வண்ணம் போல் மனித குணம் கட்டுப்படுத்தாதது அறியாமை குணம். 186-மாற்றம் என்பது காலத்தின் கட்டளை வளைந்து ஏற்றால் உயர்வு.
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
175-சொன்னதை சொல்லும் கிளியாய் இராமல் சிந்தையில் புதிதாய் அறிவோம். 176-பழமையும் புதுமையும் கலப்பு மணமாய் புதிய கோணத்தில் பிள்ளை. 177-இல்லாத நோய்க்கு மருந்து உண்பவன் இருக்கும் வாழ்வை தொலைத்தவன்.178- செயல் என்பது சிந்தனையில் தொடக்கம் செழிப்பு என்பது முடிவு. 179-உள்ளம் உற்சாக ஊற்றாய் இருந்தால் உழைப்பு விளையாட்டுக் கருவி .180-மணி பார்த்து செய்பவன் மனிதன் பார்க்காமல் செய்பவன் மேதை
சிந்திக்க சில நூறு 169-உறுதி என்னும் ஊன்றுகோல் பற்றி உயரத்தை எளிதாக கடந்திடு.170- அன்பான அணுகுமுறை அனைவரையும் இழுக்கும் ஆகாயப்பூ போல இருந்தால். 171-பயணம் என்பது நெடுந்தூரம் பார்த்து நடப்பது நம தாகும். 172-குழந்தையுடன் குழந்தையாய் மாறும் போது மலர்ந்த மலராய் மனம்.173- உழைப்பவர் கண்டு ஏளனம் செய்யும் ஒதுக்கி இலக்கை நோக்கு.174- கடனே என்று செய்யும் செயல் கருகும் சருகாய் மாறும்.
157-பண்பட்ட மனிதன் பிறரை என்றும் புண்படும் வார்த்தை பேசான்.158- குறையில்லா மனிதன் தேடுவது வீண் நிறைவாய் பார்ப்பது மேல்.159- விவாதம் என்பது அறிவுக்கு வேண்டும் விரையம் செய்து வீணடிக்க வல்ல. 160-நல்லவற்றை கேட்க காதுகளை கொடுப்போம் நலனை நாடி மௌனம் காப்போம்.161- எமன் கூட நம் சொல் கேட்பான் சாவித்திரி போல் துணிவால்.162- சபதம் என்பது உயர்வின் அச்சாணி சாதனை என்பது அதன் வழி பிறக்கும்.
151-உடல் நலம் காத்தல் அவசியம் உழைக்க உதவும் ஊடகம்.152- தெளிவு இல்லா மனதில் என்றும் தேய்பிறை தான் வரும். 153-முயற்சி செய்ய வயது முக்கியமில்லை மனம் தான் முக்கியம்.154- பறவை குஞ்சுக்கு பறப்பது இலக்கு பகுத்துணர்ந்த மனிதனுக்கு நற்செயல். 155-பிறருக்கு கொடுத்து வாழ்வது மகிழ்ச்சி பறித்து வாழ்வது இகழ்ச்சி.156- விதைத்த அன்றே அறுவடைக்குப் போக முடியாது உழைக்க வேண்டும் விளைய.
145- நிதானமாக எரியும் திரி வெகுநேரம் எரியும் செயல் நிதானமாய் வாழும். 146-ஒதுக்க நினைப்பவர் உயரவழி வகுப்பர் பள்ளமும் பல்லாக்காகும் பொறுமை.147- வறியவர் எல்லாம் வழியவர் ஆவதால் வாரி வழங்கும் வள்ளல்.148- பள்ளிப் படிப்பு பட்டம் தரும் அனுபவப் படிப்பு அறிவு.149- புரிந்து கொள்ளும் திறன் இருப்பின் பாராட்டும் பண்பு நொடியில்.150- பழமை மதித்தல் போற்றத் தகுந்தது புதுமை ஏற்றல் வளர்ச்சி.
139-தீபம் ஏற்ற விளக்கு வேண்டும் சாதனை புரிய இலக்கு.140- தன்னை அறிந்த மனிதன் தான் தரணியில் உயர்வு கொள்வான். 141-திட்டம் என்னும் திறவுகோல் கொண்டு திடமான வாழ்வை திற.142- நெருப்பு பிளம்பை தொட நினைக்காதே தீயசெயல் நினைக்காதே தொடர.143- சபதங்கள் செய்வதில் சாவித்திரியாய் இரு சரணடையும் வெற்றிக் கனி.144- புயல் வருவது இயற்கையின் சீற்றம் இயலாமையின் சீற்றம் மனிதன்.
133-நிற்கும் மரம் நகரும் ரயில் பயணத்தில் மரமானால் நகர்ந்துவிடும் காலம். 134-புள்ளி வைத்தபின் மறந்த கோலத்தை சரிப்படுத்தும் திறமையே ஆற்றல்.135- நேரம் போகவில்லை என புலம்புபவன் நேரத்தின் பயனை அறியான்.136- உடல் உழைப்பு வருத்தம் தான் உயர்வு தர இனிக்கும்.137- உணர்வே ஒருவரை உயர்த்தி விடும் எண்ணமே எளிதாய் செயல்.138- விழிப்பு என்னும் வேர் ஊன்றி விடியல் மரம் வளர்ப்பு.
127-முதலாளி ஆக கடனை வாங்கினால் முதலை போல் விழுங்கும்.128- மலர் மலரும் மணக்கும் வாழ்த்தும் உழைப்போம் உயர்வோம் வாழ்வோம்.129- நல்ல வார்த்தைகள் நட்பை வளர்க்கும் நாடா உறவு தேயும்.130- பிறர் செய்யும் குற்றம் மறந்து நன்மை நினைத்து மகிழ்வோம். 131-சோம்பலும் புலம்பலும் வீழ்வின் அறிகுறி சோதனையிலும் சாதனை வெற்றி. 132-பாராட்டு என்பது உதட்டில் வருவதல்ல உள்ளத்தில் வருவதே உயர்ந்தது.
115-வாழ்ந்து மடிவது ஒரு முறை வாழ வைப்பது பலராக.116- உடைந்த குடத்தில் நீர் நிற்காது மாற்றான் திறமை உதவாது.117- நமது செயல் பிறருக்காக இருப்பின் பாராட்டை விரும்பாது மனம்.118- கடமையை செம்மையாய் செய்யும் போது கடவுளே செய்ய வருவார்.119- காலத்தில் செய்வது வெற்றியின் வாயில் கடந்து செய்வது தோல்வி.120- மனம் குழந்தையானால் உடல் இளமையாகும் மனம் குழப்பமானால் முதுமை.