பெண் மென்மையானவள் மனமும் பூமி போல் உறுதியானது. தாய்போல் சுமந்து பூமி எல்லோரையும் தாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறது. அது போல், பெண்ணும் எத்தனை துன்பங்கள் தனக்கு நேர்ந்தாலும் அமைதியாக தாங்கிக் கொள்வாள். துன்பத்தை தாங்கும் சக்தி இருப்பதால்தான் அவள் தாயானால். தாய் போற்றுதலுக்கு உரியவள் பத்து மாத பந்தத்தில் குழந்தையை சுமையாக கருதாமல் சுகமாக கருதி வழி தாங்கி குழந்தையின் முகம் பார்த்து பூரித்துப் போகும் தாயிற்கு இணை எதுவும் இல்லை. அதனால், தான் தாயை கோயிலாகவும் தந்தையை மந்திரமாகவும் சொல்கிறார்கள் “தாயிற் சிறந்த கோயிலும் இல்லை! தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.” தாயில்லாமல் எந்த உயிரும் பிறப்பதில்லை. எனவே, பெண் குலத்தை மதிக்கும் வகையில் தாய்மையைப் போற்றுகின்றனர். வரிசையாக பெண் குழந்தையைப் மண் பெற்றுக் கொண்டாள் அவளுக்கு மரியாதை வேறு மாதிரி இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பெண் சிசுவதைகள் நடக்கிறது. தாய் மனம் உவந்து செய்வதில்லை…
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
247-தாழ்வுமன அசுரன் அழுத்தும் போது சுற்றம் எல்லாம் பகை.248- பூத்து காய்த்து கனிவது மரவளர்ச்சி உழைப்பில் கனிவது வெற்றி.249- பிஞ்சில் பதியும் ஆழ் எண்ணமே பீச்சிப் பாயும் அடிநீர்.250- கடலலை நுறையைத் தள்ளுவது போல் தீமைகளைத் தள்ளவே வேண்டும்.251- மழை வரும் வானவில் வரும் மனம் வளைய நட்பு பெருகும். 252-அரிச்சந்திரனாக இருக்க போதிக்கும் முன் மெய்யானக இருக்கப் பழகு.
235-நாம் நாமாகவே இருக்கலாம் கடமையை சரியாய் செய்திட உயரலாம். 236-பழிவாங்கும் எண்ண அசுரனை விரட்ட பரிசுத்த மனம் சாந்தியில்.237- வளரும் துளிராய் துளித்திடு நாளைய வளமை மரமாய் வளர்ந்து 238-சாதியையும், சாமியையும் பகடக் காயாய் உருட்டி வாழ்வதே அரசியல்.239- இரும்புக்கும் காந்தத் திற்கும் ஈர்ப்பு உண்டு இயற்கையின் ஈர்ப்பு கவிதை. 240-நீண்ட தூரத்தை ஓடிக் களைப்பதை விட நிதான நடை எளிது.
229-வான வீதிக்கு நட்சத்திர விளக்கு உடலுக்கு கண்ணே விளக்கு.230- எண்ணம் என்பது உள்ளத்தில் ஊற்று பிறநலம் அதில் காப்பு. 231-வெற்றி என்பது எட்டா கனியல்ல உள்ளங்கை நெல்லியாய் உன்னில். 232-பிறப்பு என்பது பூர்வீக சொந்தம் புரிந்து ஏற்றல் இனிது.233- துன்பம் சுமையாய் அழுத்தும் போது பொறுமையாய் ஏற்றல் சுடராம்.234- தவம் செய்ய வருந்த வேண்டாம் அன்பாய் நேசிப்பதே தவம்.
223-மண்ணை ஆழ உழுவது போல் மனிதனுக்கு மனமே வளம்.224- அதிர்ஷ்டம் வருமென சும்மா இருக்காமல் உழைத்து உயர்வதே அதிர்ஷ்டம்.225- உடல் வளர்ச்சிக்கு உணவு அவசியம் உள்ள வளர்ச்சிக்கு அறிவு. 226-உழைப்பவன் முன் வாய்ப்புகள் நிற்கும் மறுப்பவன் முன் காலியாய்.227- திறமை என்பது உயிர்களுக்குப் பொது தெரிந்ததை செய்தல் உயர்வு.228- மரியாதை என்பது தோற்றத்தில் இல்லை செயலில் விளையும் விளைச்சல்.
217-அன்பு என்ற ஏர் பிடித்து ஆழமாய் உழுதல் பண்பு.218-உழைப்பு என்னும் உறுதி இருப்பின் பாறை கூட நகரும்.219- உடல் கழிவு உரமாகும் நிலத்தடி நீராக கழிவு நீர். 220-உயர்ந்த சிந்தனை, உழைப்பு, முயற்சி சமுதாயத்தை உயர்த்தும் மந்திரம்.221- பொறுமை என்பது கடலினும் பெரியது காத்திருத்தல் வெற்றியின் ரகசியம். 222-வில்லாளியின் பார்வையும் அன்பின் கூர்மையும் இலக்கை நோக்கியே இருக்கும்.
205-நாட்டுக்கு நீ சேர்க்கும் செல்வம் குழந்தைக்கு கொடுக்கும் கல்வி. 206-ஆனந்தம் தேடி அழைய வேண்டாம் அது உன்னிடமே உள்ளது. 207-அன்பு இருந்தால் அமைதி இருக்கும் வெறுப்பால் அழிவு பிறக்கும்.208- துன்பத்தில் பொறுமை வெற்றியில் அமைதி இரண்டும் தவநிலை யாகும். 209-கோபத்தில் நிதானமும் உணர்வில் அடக்கமும் அறிவின் முதிர்வு ஆகும்.210- இன்பம் இல்லாமல் இயங்கும் இதயம் புன்னகை வேசமாய் உதட்டில்.
199- குண்டுமணி பொருள் இருந்தாலும் கொடுத்து உதவும் மனம் பெரிது. 200-உள்ளத்தை ஊனமாக்க பலர் வருவர் உரமாக்கி மேலே துளிர். 201-துணிவு என்பது துன்பம் தரும் ஒருபோதும் தோல்வி தராது. 202-கலங்கரை விளக்குப் போல் என்றும் வழி காட்டியாய் இது.203-சிலந்தியின் முயற்சி போல் என்றும் முயற்சி தொடர்ச்சியாய் செய். 204-கழிவுநீர் சுகாதாரத் கேடு வீண் பேச்சு வளர்ச்சிக்கு கேடு.
193- நாலாயிரம் பேருக்கு நல்லது செய்பவன் வருந்தக்கூடாது நாலு பேர் ஏச்சுக்கு. 194-சிக்கலில் மாட்ட பலர் வருவார் சீறத்தெரிந்தால் தொடுவாய் சிகரம்.195-கவனமாய் செய்ய பாறையும் சிலையாய் கவனச் சிதைவால் பாரமாய்.196- நிழல் தரும் மரம் தனக்காகவல்ல பின் வரும் சந்ததிக்கே. 197-வாழ்க்கை என்பது ஆழ்கடல் அதில் மூழ்கினால் எடுக்கலாம் முத்து.198- ஆழ்கடல் என குட்டையில் மூழ்கினால் பூசிக் கொள்வது சேர்.
187-புரியாமல் செய்து புலம்புவதை தவிர்த்து புரிந்து சிறிதேனும் செய். 188-என்ன அலை கடல் போன்றது கடுகாகும் அடக்கி ஆள்.289- வருமானம் வரும்போது சேமி ஓய்தபோது செலவு செய். 190-வாழ்க்கை என்னும் தேர் நகர அச்சாணியாக இறைவன் அருள். 191-உழைப்பு அறியா இளமை கூட வறுமைக் கோட்டில் முதுமை. 192-வெளிநாட்டு பொருளை எரித்தது அந்தக் காலம் உலகமயமாகி விட்டது இன்று.