289-மௌனம் காத்தல் மனதிற்கு நலம் பொறாமை குறைய வலம். 290-பேச்சில் துணிவு விரையம் மனித செயலின் துணிவு சாதனை. 291-அஸ்திவாரம் போடுவது கட்டட உறுதி திட்டமிடல் வாழ்விற்கு உறுதி .292-ஏழை என்பவன் கோழையாக இல்லாததினால் வெற்றி என்னும் படியில்.293- உன்னை உணர்ந்த ஒவ்வொரு வினாடியும் உயர்வு உன்னை நெருங்கி.294- பழைய தங்கம் புதிய நகை பழமை எண்ணம் புதுமை சிறப்பு.
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
3- கருத்த மேகத்தில் சிவந்து வருவாய்! வெளுத்து மழையாய் வருவாய் !தருமம் செய்யும் இடத்தில் எல்லாம்! தேவதையாய் காக்க வருவாய் !மருத நிலத்து முருகா நீ! மருந்தாய் காக்க வருவாய் !வருந்த அழைத்தால் முருகா நீ ! உடனே ஓடி வருவாய்!
283- பாலை பிரித்தெடுக்கும் கருவி போன்றவர் குற்றம் சொல்லும் மனிதர். 284-எண்ணத்தின் தொடரே கனவு அலைகள் முயற்சியின் தொடரே வெற்றி.285- எடுக்க எடுக்க ஊரும்நீர் கொடுக்க கொடுக்க பெறுகும் பணம்.286- முப்பாலில் முச்சுவையும் கடைந்த அமிர்தமாய் எக்காலும் ஏற்கும் குறள். 287-மனிதரை மனிதராய் மதிக்காத மானிடம் மறைந்தபின் தெய்வவழி பாடு.288- மரம் ஒன்று நட்டு வைத்தேன் கனி உண்டனர் நினைத்து.
1-பல வடிவங்கள் இறைவனுக்கு உண்டு எத்தனை உருவம் எடுத்தாலும் உலம் நிறைந்த வடிவம் நீதானே! அத்தனை உருவிலும் நீதானே!சில என்று கூட என்ன முடிய வில்லை முருகா! குலம் காக்கும் கோமான் நீயே! குலவிளக்கே வருவாய் முருகா!
277-எண்ணம் என்பது எதிர்மறை ஆனால் வெற்றி என்பது தள்ளிப் போகும்.278- எறும்பின் முயற்சி எல்லோருக்கும் தெரியும் எத்தனை பேர் தொடர் முயற்சியில்.279- தொட்டில் செடி மலர்ந்து நின்றது உழைப்பவன் வீட்டு முற்றத்தில்.280- முடியாது என்பவனுக்கு ஒருசொல் போதும் முடியும் என்பவனுக்கு பலசொல், 281-வீரியமிக்க விதைகள் விளைவது போல் வீரமிக்க செயல்கள் செய்வோம்.282- சூழ்நிலை நம்மை சூறையாடப் பார்க்கும் சுதாரித்து எழுவதே திறன்.
271-வீட்டுக்கு ஒளி தருவது விளக்கு அறிவுக்கு ஒளி தருவது நூல். 272-அஞ்சி அஞ்சி வாழ்பவன் நோயாளி அச்சத்தை எதிர்ப்பவன் பலவான்.273- கொட்டும் அருவியின் சலசலப்பான பேச்சு சாக்கடையில் கலந்த நீராகும்.274- வண்ணம் அமைவது இயற்கைக்கு அழகு எண்ணம் மனிதனுக்கு அழகு.275- சிலை வடிக்க நுண்ணறிவு தேவை சிதறாமல் வடிப்பது இலக்கு.276- மெழுகுவர்த்தி தன்னை உருக்கி ஒளி தரும் பிறருக்கு உதவும் மனம்.
265 -பஞ்ச பூதங்கள் உலகிற்கு சொந்தம் புலனடக்கம் மனிதருக்கு சொந்தம்.266- அன்பை நீ பிறருக்குக் கொடு பத்தாய் திரும்பி வரும்.267- கடலின் நீரோட்டம் போன்றது சடங்கு ஆயிரம் அர்த்தங்கள் ஆழத்தில்.268- பணமும் பகட்டும் வெட்கப் படும் பாசம் வெட்கம் அறியா! 269-உபதேசம் செய்ய ஓராயிரம் பேர் உண்மையாய் நடக்க ஒதுங்குவர். 270-படிப்பு என்பது கல்லூரியுடன் முடியாது காலமெல்லாம் தொடர்வதே படிப்பு.
253-நதி ஓட்டம் நெல் வளரும் வாழ்க்கை ஓட்டம் வளர்ச்சி.254- இயற்கை உரம் மண்ணுக்கு வளம் இயக்கம் வளர்ச்சிக்கு உரம்.255- மலர் மலர்ந்து மணம் பரவும் மனவிரிவு சமுதாய நோக்கு. 256-நண்டுகள் போல் சிலர் இருப்பர் நழுவி வாழ்வதே சிறப்பு.257- விதை எப்படியோ செடியும் அதுவாக செயல் திறனே விதி.258- துணிவும், பணிவும் இரட்டைக் குழந்தை பேணி வளர்த்தல் நலம்.
1-ஓம் நமச்சிவாயா போற்றி 2-ஓம் அண்ணா மலையானே போற்றி 3-ஓம் சிதம்பர நாதா போற்றி 4-ஓம் பிரகதீஸ்வரா போற்றி 5-ஓம் பாடலீஸ்வரா போற்றி 6-ஓம் கபாலீஸ்வரா போற்றி 7-ஓம் பட்டீஸ்வரா போற்றி 8-ஓம் பரமசிவனே போற்றி 9-ஓம் ராமநாதனே போற்றி 10-ஓம் சொக்கநாதனே போற்றி 11-ஓம் சுந்தரேசனே போற்றி 12-ஓம் நஞ்சுண்டவனே போற்றி 13-ஓம் முக்கண்ணா போற்றி 14-ஓம் சாடைமுடி தரித்தோனே போற்றி 15-ஓம் மண்டை ஓடு அணிந்தவா போற்றி 16-ஓம் மணிமுடி தரித்தவா போற்றி 17-ஓம் சாம்பல் தரித்தவா போற்றி 18-ஓம் ருத்ராட்ச பிரியானே போற்றி 19-ஓம் சுடுகாட்டுப் பிரியனே போற்றி 20-ஆறுமுகன் தந்தையே போற்றி 21-ஓம் ஆனைமுகன் அப்பனே போற்றி 22-ஓம் பார்வதி மணாளா போற்றி 23-ஓம் நடனப் பிரியனே போற்றி 24-ஓம் நடராஜனே போற்றி 25-ஓம் நலம் தருபவனே போற்றி 26-ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி 27-ஓம் சடாச்சரா போற்றி28-ஓம் சங்கரா போற்றி 29-ஓம் சதாசிவா போற்றி 30–ஓம்…
நள்ளிரவைத் தாண்டி வெகுநேரம் ஆகி இருக்கும்…. ஊரே அமைதியாக இருந்தது மரங்கள் அசையும் சத்தங்களும், அவ்வப்போது சாலைகளில் செல்லும் வாகன ஒலிகள் மட்டுமே ஓசை எழுப்பிக் கொண்டு இருந்தன. பறவைகள் அசையக் கூட மறந்து நல்ல உறக்கத்தில் இருந்தன. அப்போது ஒரு குடிசையில் மட்டும் மெதுவாக ஒரு முணங்கள் சத்தம் கேட்டது. அக்கா… அக்கா… கால் வலிக்கிறது அக்கா… ஐயோ! அக்கா! என படுக்கையில் இருந்து எழுந்து காலைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டான் அசோகன். ஏண்டா சனியனே! பார்த்து வரக்கூடாது. காலில் ஆணியைக் குத்திக் கொண்டு வந்து மனுசனை தூங்க விடமாட்டேன் என்கிறாய். என தூக்கம் கலைந்து கோபத்தில் தீட்டினார் மாமா ராமு .அழுகாதடா …தம்பி! காலையில் மருத்துவமனைக்கு போகலாம் எல்லாம் சரியாகிவிடும். மாமா வேற திட்டுகிறார் பேசாமல் பொறுத்துக்கடா என அவன் காலை தூக்கி மடியில் வைத்துக் கொண்ட மீனா கைகளால் வருடிக் கொடுத்தாள். அக்கா… ரொம்ப…