19-மெலியவர் முன் உணர்வு மதித்து நடத்தல் வேண்டும்.20- அவர் அவருக்கு கிடைப்பது கிடைத்தே தீரும்.21- உன்னை உணர்.உயர்தல் எளிய வழியாம்.22- குற்றம் உரைக்கின் கூர்ந்து கவனித்து சரி செய் .23-தீயவற்றை விளக்க எதிர்கொள் வலிமையுடன்.24- மனதில் உறுதி உடையவன் உலகையே மாற்றும் வல்லமை பெறுவான்.
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
13-தன் கருத்தை நளினமாக எடுத்துரைக்க வேண்டும். 14-பிறர் கருத்துக்களை நயமாக மறுக்கும் மாண்பு வேண்டும்.15- கடமையைச் செய் காலம் வாழ்த்தும். 16-வலியவர் முன் பயம் வேண்டாம் 17-வலியவர் முன் எதிர்கொண்டு ஏற்க செய்தல் வேண்டும். 18-மெலியவர் முன் ஆவேசம் கொள்ள வேண்டாம்.
7-உன்னால் முடியாததை பலருடன் பகிர்ந்து செய். 8-புகழ்வதன் மூலம் திருத்துவது நலம். 9-பாராட்டுதல், புகழ்தல், ஊக்கப்படுத்துதல், தலைமைக் குணம்.10- குறை கூறின் குன்றச் செய்யும்.11- நிறை பார்ப்பின் நிமிர வைக்கும்.12- வெட்டிப் பேச்சும், வீண் அரட்டையும் தோல்விக்கு வித்தாகும்.
1-நாம் முன்னேற சமுதாயம் முன்னேறும். 2-நல்லுறவு உயர்வுக்கு வழி காட்டும் 3-முரண்பாடு நம்மை முடக்கி விடும் .4-பிறர் மனம் வருந்த பேசாதீர்.5- தீயவை விலக்கி நல்லதை பாராட்டு.6- இருளை அகற்ற விளக்கை ஏற்று.
பத்து விரலின் கூட்டு முயற்சி பளு தூக்கும் முயற்சியில் வெற்றி! ஒருவர் விதைத்த விதை நெல் பலரில் உழைப்பால் அறுவடை நெல்லாய் !ஆசிரியர் ஒருவர் கற்றுத் தருவதால் பலர் வாழ்வில் ஒளிச் சுடர்! கரிக்கும் நீராய் கடல் ஒன்று அடிக்கும் தொடராய் அலைகள் பல !பற்றும் நெருப்பு மிளகு அளவு பரவும் வேகம் புயல் வேகம்! பஞ்சின் நூல் பல வண்ணம் நெய்து உடுத்துவது பலர் தானே !மதங்கள் பல இருந்து வந்தாலும் பிறப்பு என்பது கருவறை தானே !மரங்கள் பல சேர்ந்தால் தானே மழை என்பதை பெற முடியும்! கஷ்டம் என்பதே பல கடந்தால் கடைசியில் வருவது நிறைவு தானே !உழைப்பவன் பலர் சேர்ந்தால் தானே உற்பத்தி திறனை உயர்த்த முடியும் !ஒன்றாய் சேர்ந்த மக்களால் தானே சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் !ஒவ்வொரு வீடும் ஒன்று பட்டால் இந்தியன் வாழ்வில் ஒற்றுமை ஓங்கும் !ஒன்று பட்டு வணங்கு நாம்…
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பார்கள். “கோபுர தரிசனம் பாப விமோசனம் அளிக்கும்” எனவும் கூறுவார்கள். கோபுரத்தின் உச்சி முனையில் புனிதத் தன்மை நிறைந்த கலசம் இருக்கிறது. மேல்நோக்கிப் பார்க்கும் போது அந்த கலசம் மிகத்தெளிவாக தெரியும் எனவே நம் பார்வை உயர்த்தி மேல் நோக்கி செலுத்துமாறு செய்வது கலசமாகும். இதன் மூலம் உயர்ந்த பார்வை ஏற்படுகிறது. அப்பார்வை மிகவும் உன்னதமானதாகும். பார்வை உயர…. உயர எண்ணங்கள் உயர்வடையும். எண்ணங்கள் உயர …உயர மனிதன் புனிதமாகிறான். அதனால், தெய்வீகத் தன்மையை அடைகிறான். என்பது கோபுர தத்துவமாகும். கோயில் கோபுரம் உயர்ந்து நிற்பதால். இறைவன் குடி கொண்டு இருக்கும் இடத்தை பறைசாற்றுவதோடு நம்முடைய வாழ்க்கையில் நாம் கொண்டுள்ள குறிக்கோளையும் உயர்த்துகின்றது. எனவே, கோபுர தரிசனம் கண்டு ஒவ்வொருவரும் வாழ்வில் உயர்வினை பெறுவோம் ஓம் முருகா! சரவணபவ.
எக்காரணம் கொண்டும் உன்னை மறவாத நிலைவர வேண்டாம் அக்கணமே மாயை விலகி தன்னிலை உணரும் நிலை வேண்டும் திக்கெட்டும் தெரியும் உன் புகழ் திகட்டாமல் இருக்க வேண்டும் உக்கரமாக நீ ஒருபோதும் இருந்ததில்லை சாந்த முகமே சண்முகா!வேதம் கற்க வில்லை என்றாலும் வேண்டும் வரம் தருபவன் சேதம் இல்லாமல் போர் செய்யும் வீரன் தீரன் கந்தன் பேதம் இல்லாமல் அருள் செய்யும் கொடை வள்ளல் முருகன் நாதம் இசைக்கையில் நல்ல தமிழ் கேட்டு மகிழும் பிரியன் !திரியும் தயிரில் உள்ளது பலபொருள் உன்னுல் உலகமே இயக்கமாய் விரிந்து பரந்து உலகின் உயிர்கள் பிறப்பும் இறப்பும் ரகசியமாய் தெரிந்து கொள்ள முடியாத சக்தி பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி பிரிந்து போகும் உயிர் கூட ஆத்ம தரிசனமாய் காலடி யில்.
தை முதல் நாள். பிரம்மாபோர் செய்யும் கருவியில் இருப்பாய் போற்றும் நாவில் துணைவி இருப்பாள் சோர்வு இல்லா உழைப்பு தந்து தொழில் நுட்ப கலையில் இருப்பாய் பார்க்கும் இடத்தில் எல்லாம் இருப்பாய் பாராட்டும் நெஞ்சில் நிறைந்து இருப்பாய் சார்பு தரும் பிரம்ம தேவா சரணம் அடைந்தோம் காப்பாய் பிரம்மா விஷ்ணு குளிர் காற்று குளிர்ச்சி தர குளிர்ந்த தண்ணீர் வெது வெதுக்க தளிர் போல் தழைக்கும் பக்தி தருகாய் வளர மார்கழி பூஜைசெய்தோம்நளிர் நளின நளினி தலைவா நல்லவை செய்யென நாடி வருகிறோம் களிப்பு கொண்டு வாழ்த்த வருவாய் மாதவா மனம் மகிழ்வோம் அருளால் சிவன் களிகூத்து ஆடும் சிதம்பரம் நடராசா மாற்றி ஆடிய மதுரை நடராசாதெளிதல் தரும் நெல்லை நடராசா குளிர்தல் தரும் குற்றால நாதா வெளித்து காலைத்தூக்கி ஆடிய திருவாலங்காட்டில் ஐம்பெரும் சபை கண்டோம் சிவக்கூத்தா குளிர வைத்த முழுமதி மனமே கொடுத்தாய் சிவனே தில்லை நடராசா.
மார்கழி மாதம் 29 ஆம் நாள் பிரம்மா மார்கழி மாதம் மனதிற்கு மகிழ்ச்சி மாதவம் செய்தோம் பிரம்மனைப் பாட கார்குழலி வீணை இசையைக் கேட்டு இன்பம் கொண்டு நெகிழும் பிரம்மா பார்புகழும் கோயில் சிற்பத்தில் இருப்பாய் பார்க்கும் பொருளில் இருப்பாய் தேர் சார்பு படைப்பில் இருப்பாய் எங்கும் நிறைந்து இருப்பவனே காத்து அருள்வாய் விஷ்ணு மலர் மலர வண்டு பாட மனம் நெகிழ கண்டு காண அலர் தொடுத்து மாலை சூட அபயம் தரும் கண்ணா வாராய் குலம் தழைக்க குடி வாழ குடக்கூத்து ஆடும் கண்ணா வாராய் வலம் வருவோம் வரம் பெறுவோம் வண்ணமயில் இறகுடன் வாராய் கண்ணா சிவன் முடி தரித்து ஆபரணங்கள் அணிந்து முகம் மலர வந்த ஈசா தடி பிடித்த தண்டபாணி அன்னை கரம் பிடிக்க வந்த ஈசா குடி வாழ அசுரனை அழிக்க வழி வகுத்து தந்த ஈசாஇடி போல மோதி எழுந்த சக்தி…
மாதம் 28ஆம் நாள் பிரம்மா பிரம்ம முகூர்த்தத்தில் கற்பது எளிது காலை காற்று உடலுக்கு நல்லது சிரமம் பாராது எழுந்து கற்றால் சிகரம் தொடை பயிற்சி ஆகும் கரம் கூப்பி மனதில் தியானித்து பிரம்மனை தினம் காலையில் வணங்க கரம் கூப்பி மனதில் தியானிக்க கருணை செய்வாய் ஒருநிலைப் படுத்த விஷ்ணு உரிப்பானை உடைத்து வெண்ணை உண்டாய் உளம் மகிழ்ந்து ஓடி மறைந்தாய் கரிசனம் கொண்ட அம்மா முன்பு கண்கட்டி வித்தை செய்த கண்ணா தரிசனம் தருவாய் ஒரு முறை தவப் பயனாய் கண்குளிர காண பரிபாவம் போக்கும் கண்ணா உன் பரிவால் வாழ வரம் தருவாய் சிவன் திரிசூலம் உன் கரம் வாசம் திரிசடை உன் தலை கவசம் நரி பரி ஆக்கிய சிவனே நாடு நலம்பெற வரம் தருவாய் சரி பாதி உடல் தந்து சிவசக்தி ஆன சிவனே சர்வேசா திரி சொர்க்கம் ஆன சிவனே திருவடி வணங்குகிறோம்…