145- நிதானமாக எரியும் திரி வெகுநேரம் எரியும் செயல் நிதானமாய் வாழும்.

146-ஒதுக்க நினைப்பவர் உயரவழி வகுப்பர் பள்ளமும் பல்லாக்காகும் பொறுமை.

147- வறியவர் எல்லாம் வழியவர் ஆவதால் வாரி வழங்கும் வள்ளல்.

148- பள்ளிப் படிப்பு பட்டம் தரும் அனுபவப் படிப்பு அறிவு.

149- புரிந்து கொள்ளும் திறன் இருப்பின் பாராட்டும் பண்பு நொடியில்.

150- பழமை மதித்தல் போற்றத் தகுந்தது புதுமை ஏற்றல் வளர்ச்சி.

Share.

Leave A Reply