Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

109-குறிக்கோள் இல்லாத வாழ்க்கைப் பயணம் வழியில்லா பயணம் ஆகும்.110- வாழைமரம் வழுக்கும் குலை இனிக்கும் செயல்சறுக்கும் முடிவு இனிக்கும்.111- உள்ளத்தில் சக்தி ஆற்றல் மிக்கது உணர்ந்தால் சுடராய் மிளிரும்.112- நல்ல செயலை செம்மையாய் முடித்து செருக்கு இன்றி செல். 113-பிறர் செயல்கள் செய்ய கட்டளையிடாதே பணிவுடன் நடந்து காண்பி.114- சரித்திரம் படைக்க சவாலை சந்தி சாதனை புரிய வழி.

Read More

103-சுயநலமாய் சிந்திப்பவன் சுருங்கிப் போவான் பொதுநலவாதி செத்தும் வாழ்வான். 104-அகங்காரம் எங்கு தலை தூக்குகிறதோ அழிவும் பிறந்து விடும். 105-தெளிந்த நீர் முகம் காட்டும் செயல் மனம் காட்டும்.106- துன்பம் வாயிலை தட்டும் போது இன்பம் நிழலாய் பின்னால்.107- முழு மனதுடன் எதையும் செய்தால் முழு வெற்றி நிச்சயம்.108- வளவள பேச்சு வறட்சி தரும் குறைந்த பேச்சு குளிர்ச்சி.

Read More

97-திருப்தி என்பது மனதின் நிறைவு மன உளைச்சல் அதிருப்தி. 98-சிந்திப்பது சிறப்பாக இருந்தால் போதும் சிகரம் கூட உன்னருகில்.99- அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு இறைவன் வாசம் செய்கிறான்.100- உன்பார்வை ஏழையின் பால் இருந்தால் இறைவன் பார்வை உன்மேல். 101-வீரம் என்பது பேச்சில் அல்ல விவேகமான நல்ல செயலில்.102-உழைப்பு என்னும் துடுப்பு இருந்தால் வேலையெனும் படகு கிடைக்கும்.

Read More

79-வரவை அதிகப்படுத்த உழைப்பவன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான் செலவை. 80-உழைப்பின் அருமை புரிந்தவன் உயர்வான் சோம்பல் வெம்பும் சுகம். 81-முகத்தில் நாக்கு பொய் பேசும் கண் உண்மை பேசும். 82-அன்புடையோர் கண்டு எமனும் அஞ்சுவான் மரணம் தள்ளிப் போகும். 83-ஆடை இல்லாதவன் அரை மனிதன் பணம் இல்லாதவனும் அப்படியே! 84-பாலைவனப் பயணத்திற்கு நீர் சேமிக்கும் ஒட்டகம் வாழ்க்கைப் பயணத்தில் அனுபவம்.

Read More

61-மானிட உடல் நிரந்தரமற்றது நல்வழிப் படுத்துவது நம் கையில். 62-கருமி பணம் நிறைந்து இருந்தும் மனம் விழித்து இருக்கும்.63- வேலையை அன்றே செய்பவன் அறிவாளி தள்ளிப் போடுபவன் சோம்பேறி. 64-பச்சைக் காயை உண் உனக்குள் வாழும் நோயைக் கொல்.65- உடல் நலத்திற்கு கீரை மன நலத்திற்கு பக்தி தேவை.66- மனித இதயங்கள் ஒன்று பட்டால் மனித நேயம் உயரும்.

Read More

55-நல்ல கல்வி வளம் சேர்க்கும் சொத்து. 56-சாந்தம் உள்ளவரிடம் சகலமும் வந்து சேரும். 57-தகுதி குறிக்கோள் நோக்கி.58- எரிந்து விழுபவன் ஏளனத்திற்கு உள்ளாவார் அன்பு விரும்பப் படும். 59-அவமானத்தை அப்புறப் படுத்தினால் காயங்களுக்கு மருந்திடத் தேவை இல்லை. 60-பிறருக்காக வாழும் ஒவ்வொரு நிமிடமும் புனிதப் படுத்துகிறாய் வாழ்வை.

Read More

49-உடலைப் பேணுவதைப் போல உள்ளத்தை பேண வேண்டும்.50- எதிர்பார்ப்பு இருக்கும் வரை ஏமாற்றம் இருக்கும். 51-குறிக்கோள் இல்லா மனிதன் குறை மனிதன். 52-உழைப்பவனுக்கு கவலைப்பட நேரம் இருக்காது. 53-கவலைப் படுபவனுக்கு உழைக்க நேரம் இருக்காது. 54-இயற்கை அழகை இயன்ற போது ரசி.

Read More

43-நம்பிக்கையை உணர்ந்தால் நாளும் உயர்வு உன்னுடன். 44-உயர்ந்த கல்வி சிறந்த மூலதனம்.45- அறிவார்ந்த அணுகுமுறை அனுபவ ஊற்று.46- ஊர்வழா உதவுபவன் உன்மை நண்பன். 47-நாட்டுப் பணியே நல்லதோர் இன்பம். 48-தன்னலத்தை பொசுக்கி தரணியை உறவு கொள்.

Read More

37-சாந்தம் உள்ள இடத்தில் சண்டைகள் ஓடிவிடும்.38- உழைப்பு உள்ள இடத்தில் வறுமை ஓடிவிடும்.39- நிறைவு உள்ள இடத்தில் பொறாமை போய்விடும். 40-விழித்திருந்து சமுதாயம் வளர்த்திடுவோம்.41- விடா முயற்சி கெடா வாழ்வு.42- கொடுப்பது மழை குளிருவது மண்

Read More

25-எடுத்த செயலை விடாது செய்க.26- தடைகள் வரின் தகர்த்து எறிக. 27-சளிப்பின்றிச்செய்பவன் சாதனை புரிவான்.28- துணிவுடன் செய்பவன் தோல்வி அறியான்.29- தோல்வியே வெற்றியின் படிக் கட்டுகள்.

Read More