32-கொடுக்கும் கொடைக் கரம் நீயே ! கொடி உடையவன் நீயே! எடுத்துக் காட்டாய் இருப்பவன் நீயே ! எழுத்து ஆணியும் நீயே! கடுவழி சென்று வளர்த்தவன் நீயே! கருத்தில் நின்றவன் நீயே !தடுத்து தடை நிறுத்துபவன் நீயே! தயவு காட்டுபவன் நீயே!
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
461-காலமாற்றம் இயற்கையின் இயல்பு உணர்ந்து மாற துன்பம் தூர.462-வண்டி ஓட அச்சாணி அவசியம் வாழ்க்கை ஓட பொறுமை.463- திறமை என்பது எல்லோருக்கும் பொது திறவு கோல் இலக்கு. 464-நாகரீகம் என்பது நடை பிணமாக்கும் நம்பிக்கை அணையா தீபம்.465- புன்னகை பூ முகத்தில் பிறக்க புதுப் பொழிவாய் அன்பு. 466-இல்லாமை கவலை தரும் மனநிறைவு உற்சாக ஊற்றாய் வரும்.
31-கூர் வேல் உடையவன் நீயே! கூடாநட்பு தடுப்பவன் நீயே! சீர் அணி வரியும் நீயே! சீரான வாழ்வும் நீயே! வீர் கொண்டு எழுந்தவன் நீயே ! விண்ணவர் காத்தவன் நீயே !தீர்க்க தரிசனம் தருபவன் நீயே ! தீமை அழிப்பவன் நீயே!
455-மனதை வென்றவன் ஆனந்தமாய் வாழ்வான் அன்பும் அமைதியும் இருப்பதால்.456- உதவிக்கரம் நீண்டது உள்ளம் நிறைந்தது உலகுக்கு கற்றுக் கொடுத்தது சுனாமி. 457-அன்பான பெற்றோர் அடித்தளம் அமைத்தவர் ஆதரவு சொற்கள் நேசம். 458-தடைக்கல் எல்லாம் தடங்கலாய் மாற தாழ்வு மனம் மேடாய். 459-வானில் பறக்கும் பறவை சுதந்திரமாய் சுதந்திர வாழ்க்கைப் பயணம்.460- தகுதி உள்ளவன் தலை நிமிர்வான் பகுத்துப் பார்ப்பது நெறி.
30-பன்னிரு விழி கொண்டவன் நீயே! பாசம் வைத்தவன் நீயே!ஆன்மா அடையும் இடம் நீயே! ஆசை துறந்தவன் நீயே! அன்னம் இடும் கரம் நீயே! ஆக்க சக்தியும் நீயே! இன்னிசை தரும் ஒலி நீயே! இன்ப ராகம் நீயே!
449-நாவடக்கம் மனவடக்கம் மனித வளம் புரிந்தவன் புதையல் பெற்றவன்.450- பணத்தை அறிவிலி கூட சம்பாதிப்பான் பயனாய் செய்பவன் அறிவாளி.451- தைரியம் எப்போதும் முயற்சி வேலையில் ஒவ்வொரு செயலும் வளர்ச்சி.452- பொருளின் மதிப்பு தெரியாமல் இழந்து தெரிந்த போது கனமாய். 453-விளக்கெரிய தூண்டுகோல் வேண்டும் வாழ்க்கை துலங்க வழிகாட்டி வேண்டும். 454-பொறாமைப் பொறி கொழுந்து விட்டு எரியும்போது மன அழுத்தம் தாண்டவம் ஆடும்.
443- கடமையை செய்பவன் கண் அயர்வான். கடமை மறந்தவன் விழித்து. 444-நடை பிணமாய் அலைபவன் நம்பிக்கை அற்றவன் சாதிக்கிறவன் கையை நம்பி.445- பட்டை தீட்டிய வைரமே ஜொலிக்கும் பட்டதுன்பமே ஜெயிக்கும். 446-துரதிஷ்டத்தை துரத்தும் எளிய வழி துன்பத்தை ஏற்று நடப்பது.447- பேச்சு நிற்கும் செயல் நடக்கும் இரண்டும் சேர்ந்தால் உயர்த்தும். 448-இன்ப முயற்சி துன்பத்தின் பக்கம் இலட்சிய முயற்சி இன்பம்.
437-தேடல் என்பது சாலை ஆனால் தெளிவு என்பது தேர்.438-அறிந்து புரிந்து உணர்ந்து செல்ல ஞானம் வந்து உட்புகும்.439-செடிக்கு வேர் முக்கியம் போல் கனவுகள் கடமைக்கு வேர்.440- கடந்த காலம் கனவு காலம் வாழும் காலம் வசந்தம்.441- கற்றுக் கொள்வது பாடம் மட்டுமல்ல மனதிருப்தியே நிலையான கற்றல்.442- வாங்கி வாங்கி சேர்த்தல் மகிழ்ச்சியல்ல கொடைப் பண்பே மகிழ்ச்சி.
27-சிக்கல் தீர்க்கும் வேலன் நீயே ! சிங்கார அழகன் நீயே! நக்கன் நங்கை மகன் நீயே ! நகைப்பு சொல் நீயே! நிக்கும் மலை கனி நீயே! தமிழ் கடவுளும் நீயே! துக்கரம் செய்யும் செயல் நீயே ! துதிக்கும் தெய்வம் நீயே!
2-நீங்கள் கர்ப்பிணியா? எங்கோ பிறந்து! எங்கோ வளர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் “திருமணம்” என்ற பந்தத்தை உருவாக்கி உறவு கொள்ள செய்கிறார்கள். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்த இருவரும் “தாம்பத்தியம்” என்ற உறவால் இணைகிறார்கள். அவர்கள் தாய், தந்தையரை மறந்து. உற்றார் உறவுகளை மறந்து ஏன் உலகத்தையே மறந்து உனக்கு நான் எனக்கு நீ என்ற நிலையில். தங்களையும் மறந்து இன்புற்று இருக்கும் காலகட்டத்தில் ஆணின் விந்துக்கள் பெண்ணின் கருப்பையில் போய் சேர்வதால் ஒரு பெண் கர்ப்பம் அடைகிறாள். சில பெண்களுக்கு தான் கர்ப்பவதியான சில நாட்களிலே தெரிந்துவிடும். மாதவிடாய் ஒழுங்காக ஆகாமல் தள்ளி… தள்ளி ஆகும். சிலரால் உடனே தெரிந்து கொள்ள முடியாது. அவ்வாறு உள்ள பெண்கள் உடனே, டாக்டரிடம் சென்று தான் கர்ப்பம் அடைந்து இருக்கிறோமா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் அசட்டையாக விட்டுவிட்டால் எத்தனை மாதம் என்பதை சொல்வது கஷ்டமாகிவிடும்.…