20-கண்ணொளி பட்டால் போதும் முருகா! காட்சிக்கு நீ வருவாய்! விண்ணொளி பட்டால் போதும் முருகா! வில்லாக ஒளி தருவாய்!மண்ணில் நீ வந்தால் முருகா! மனதில் மாற்றம் தருவாய்! எண்ணத்தில் ஏற்றம் தருவாய் முருகா! எழிலுடன் நீ வருவாய்!
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
385-உழைக்க உழைக்க உயர்வு வரும் பழிக்க பழிக்க தேயும்.386- உள்ளம் விரிய உறவு பெருகும் சருகாய் போனால் பிரியும். 387-எண்ணம் எதிரானால் ஏக்கம் பெருகும் எச்சரிக்கை உணர்வானால் ஏற்றம். 388-மூலதனம் என்பது முழு முயற்சி மூடதனம் என்பது சோம்பல்.389- உள்ளம் என்பது உயர்ந்து தெளிய கள்ளம் காணாமல் போகும். 390-திறமை தள்ளி பணம் பந்தாட நம் நாட்டிற்கு விரையம்.
19-வென்று வந்த இடம் இன்றும் வெற்றி முரசு கொட்டுகிறது! கன்றுதல் கொண்டேன் முருகா உன்னைக் கண்டு ஆனந்தம் கொள்ள !சன்னதி முன் நின்று துதிக்க சரணம் புகுந்தேன் முருகா ! வன்மை தாராய் முருகா உன் புகழ் பாடி வழிபட!
379-அரும்பான ஆற்றல் உழைப்பால் மலரும் அன்பான நேசம் மணமாகும்.380- உலகம் உயர உழைப்பவன் மகான் உறவுக்காக வாழ்பவன் மனிதன்.381- காலம் ஒரு கண்ணாடி போன்றது கடமை அதன் பிம்பம். 382-உடல் அழுக்கு போக்க குளிப்பு உள்ளம் அடங்க தியானம்.383- சுறுசுறுப்பு இருந்தால் சுற்றிலும் சுகமாய் சோம்பல் சோர்வாய் முடக்கும். 384-பிறரிடம் குற்றம் காண்பவன் மனிதன் நிறைவு காண்பவன் இறைவன்.
மேவி உனை வணங்க முருகா ! தாயாய் நீ இருக்க! காவி உடை உடுத்த வேண்டாம் ! காட்சியாய் நீ இருக்க! பாவி என்ற பெயர் வேண்டாம்! பார்வையில் நீ இருக்க! சாவி இல்லாமலே திறந்து விட்டாய்! அருளென்ற கதவை நீ!
367-சளி பிடித்தால் சுவாசம் முட்டும் சளிப்பூட்டும் வாழ்க்கை முடங்கும்.368- எத்தனை முறை விழுந்தோமென வருந்தாமல் எழ முயற்சி செய்.369- முயற்சி என்பதை முடக்கும் போது முழுமை பெறாமல் கருகும்.370- முயற்சி ஆற்றல் தொடர தொடர வலிமை தடைகளைத் தகர்த்தும்.371- குழந்தை ஒன்றை விரும்பும் உறுதியாய் அதை அடைந்தே தீரும்.372- திறமை என்பது திறவுகோல் போன்றது திறந்தால் பொக்கிஷம் கிட்டும்.
16- கனிந்த பார்வை பட்டால் முருகா! பட்ட மரம் துளிரும்! தனித்து செயல் செய்ய வைப்பாய்! தரணிக்கு சேர வைப்பாய் !சீனி போல் இனிக்க வைப்பாய்! சீவன் வாழ வைப்பாய்! தீனி கூட வேண்டாம் முருகா! தீவிரமாய் உன்னைப் பற்ற!
361-தன்னை அறிதல் சூழ்நிலை அறிதல் ஆற்றல் அறிதல் வளம். 362-அணையின் நீர்மட்டம் நிறைந்து வழிவது போல் அறிவின் ஆற்றலும் வெளிப்படும்.363- மரம் வைப்பவன் கனிக்கு காத்திருப்பான் மாற்றமும் காத்திருக்க கனியும்.364-கல்விப் பாடம் கண் போன்றது அனுபவப் பாடம் சுவாசம். 365-விரும்பியது கிடைக்காமல் மூளையில் முடங்காமல் கிடைப்பது ஏற்று சிறப்பீர்.366- பல நட்சத்திரம் இருந்தும் வானிற்கு இருள் ஒரு சூரியன் உலகிற்கு ஒளி.
15-காய் மனம் இருந்தால் கூட கால மாற்றம் செய்வாய்! வாய் மணக்க பாடச் செய்து காதார கேட்டு மகிழ்வாய்! தாய் அருள் பெற்ற முருகா தருவாய் அருளை முருகா !சேய் நின் அருளிருக்க வேறு என்ன வேண்டும் முருகா!
14-ஆற்று நீர் பாய்ந்த இடம் செழித்து வளர்வது போல்! உற்று நீர் உள்ள முருகா! உரையாது உன்னருள் முருகா!தூற்றுதல் வந்தால் கூட தூயவன் அருளால் தூரப் போகும்! நாற்றுப் போல் வளரும் முருகா! நல்லதே வந்து சேரும்.