Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

44-வழி காட்டும் துணை நீயே !       வாழ்வு தருபவன் நீயே!விழி பார்வை துணை நீயே !          விரும்பி காப்பவன் நீயே !பிழி போக்கும் துணை நீயே !       பிரகாச ஒளி நீயே! சுழி அழிக்கும் துணை நீயே!         சுகமான நினைவு நீயே !

Read More

43-நஞ்சு உண்டவன் மகன் நீயே !        நன்மை செய்பவன் நீயே !குஞ்சை பாட வைத்தவன் நீயே !         குளிர்ந்த காற்றும் நீயே !தஞ்சம் அடைந்தால் காப்பவன் நீயே!         தைரியம் ஊட்டுபவன் நீயே !பஞ்சு மனம் படைத்தவன் நீயே !         பக்தரை காப்பவன் நீயே !

Read More

42-வீர வேல் பிடித்தவன் நீயே !      வீரம் கொடுப்பவன் நீயே! தீர செயல் செய்தவன் நீயே !      தீமை விரட்டுபவன் நீயே! சூர வதம் செய்தவன் நீயே !      சூட்சுமம் செய்தவன் நீயே !குர வள்ளி கணவன் நீயே!          குன்றில் அமர்ந்தவன் நீயே!

Read More

41-நெற்றியில் விபூதி அணிந்தவன் நீயே!        முக்கண்ணன் மகனும் நீயே !வெற்றி திலகம் வைத்தவன் நீயே!       வேல் பிடித்தவன் நீயே! சுற்றி உலகத்தை வந்தவன் நீயே!        தனித்து நின்றவன் நீயே!பற்றிய பக்தரை காப்பவன் நீயே !         பார்வதி மகனும் நீயே!

Read More

40-கிண்கிணி ஒலி கேட்பவன் நீயே!           கிண்ணார ஒலியும் நீயே! விண்மணி ஒளிச் சுடரும் நீயே!         விதண்டம் செய்பவன் நீயே !மண்ணை விரட்டும் மந்திரம் நீயே!        மண்ணின் பொறுமை நீயே! குண்டலினி மகா சக்தி நீயே!       குண்டிகை சக்தியும் நீயே!

Read More

புரட்சி கவிஞர் பாரதிக்கு தாசன்           எழுச்சி மிகுந்த இடத்துக்கு சொந்தக்காரர் வரலாறு படைத்த கவிதை மிடுக்கு          துடிப்பாய் இயங்கும் கவிதை ஊற்று உரத்து பேசும் சுதந்திர தாகம்           உறுதி கொண்டு உழைத்த ஞானம் கரம் இருப்பதே கடமை செய்யவென         கல்வி கண்திறந்த நல்ல ஆசிரியர்.புதுச்சேரி மண் கவிவாசம் கமழும்          பாவேந்தர் மனதில் நிழலாய் ஓடும் மது தாக்கம் மனதில் தாக்கியதால்          குடும்ப விளக்கு கோபுரமாய் உயர்ந்ததுபுதுமெட்டுப் போட்டு பாட்டு எழுதி           சங்கு ஒலி எழுந்தது கீதமாய் செதுக்கிய செம்மையான தமிழ் அமுது        அழியா வரம் பெற்றது என்றும். புகழ் என்பது உமக்குச் சொந்தம்       புரட்சி என்பது அதில் அடக்கம் அகல் போல் சுடர் விட்டு           அகம் நிறைந்த பாரதி தாசன் நிகர் இல்லை இந்த மண்ணில்        நிலையான இடம் உமது வாசம் சுகம் தரும் கவிதை வரிகள்       …

Read More

மதுரை வீதியில் மீனாட்சி! மங்களமாய் அவள் வந்திடுவாள் !தோளில் கிளியுடன் மீனாட்சி !தேரோடும் வீதியில் வந்திடுவாள் !    (மதுரை) கருணை மழையே மீனாட்சி! காண்போர்க்கு காட்சி தந்திடுவாள்! சொக்கன் மனைவிமீனாட்சி! சொர்க்க மார்க்கம் காட்டிடுவாள்?      ( மதுரை)சங்கத் தமிழே மீனாட்சி! சங்கரனுடன் காட்சி தந்திடுவாள்!பிறவி மருந்தே மீனாட்சி! பிறவாமை வரம் தந்திடுவாள்!     (மதுரை) பாண்டியன் மகளே மீனாட்சி !பார் புகழச் செய்திடுவாள்! புது நீரில் ஆடும் மீனாட்சி! புதுமைகள் செய்ய புறப்படுவாள் !    (மதுரை) மூங்கில் உருளையில் மீனாட்சி !ஊஞ்சல் ஆடி மகிழ்ந்திடுவாள்! ஆணவம் அழிக்கும் மீனாட்சி !அடியவர் மனதில் தங்கிடுவாள்.     (மதுரை)

Read More

39- போக இன்பம் தருபவன் நீயே!          யோக இன்பம் நீயே! ஆகம விதிப் பலனும் நீயே !     அகந்தை அகற்றுபவன் நீயே! ஏகத்துவம் நிறைந்த தலைவன் நீயே !        ஏழிசை சுரமும் நீயே! ஈகம் போல் மணப்பவன் நீயே!          ஈசன் மகனும் நீயே!

Read More

வெண்சாமரம் வீசும் தென்னங்கீற்றே! உன் மேனியில் ‘வெயில்’ சுட்டாலும் பிறருக்காக நீ ‘காற்று’ வீசுகிறாய்…பூச்சிகள் தீண்டிய ‘தேகப்பற்றில்’ ‘பூ’ வில் அரசனான பூவரசம் பூவே உன் காய்களை அழுத்திப் ‘பூச ‘தொடராது ‘பற்று’ தொலைதூரம் போகும்! பூவின் புன்னகையால் பூரித்து  போனாயே உன் தேகத்தை உறுதியாக்க நீ ‘உடற்பயிற்சி’ என்ன செய்தாய் தேக்கு உன் ‘உறுதி’ அவர்களுக்கும் வரட்டும்! தன்னலமே  சிறிதும் இல்லாமல் உன்னையே தானமாக்கும் வேம்புவே! கருவப்பட்டதுண்டா?இல்லையே! இல்லையே! அதனால் உயர்ந்தவனாக மகுடம் சூட்டி பிறருக்காக வாழ்கிறாய்!குழந்தை அடித்தாலும் பொறுத்துக் கொள்பவள் அம்மா!கல்லெடுத்து அடித்தாலும் பொறுத்’தாயோ?’ ‘மா’ என்பதாளா?‘முத்தம்’ கொடுத்து மகிழ்பவள்  அன்னை ‘கனி’ கொடுத்து மகிழ்ந்தாயே மாமரமே? உன்னை பெண்கள் விரும்புவது சகோதர உணர்வாளே!             

Read More

37-ஒழுக்க நெறி உடையவன் நீயே!          ஒருமைப் பாடும் நீயே! அழுக்கு மனம் அகற்றுபவன் நீயே!       அளக்கும் கருவியும் நீயே !இழுக்கு வராமல் காப்பவன் நீயே!        இன்பம் தருபவன் நீயே!உழுத்துப் போகாத வாழ்வு நீயே!         உள்ளம் நிறைந்தவன் நீயே!

Read More