497- பணம் பத்தும் செய்யும் குணம் கோடிக்கு மேல் செய்யும். 498-சம்பவங்கள் அனைத்தும் முன்பே தீர்மானித்தவை புரிந்தால் ஏற்பது எளிது. 499-மாய உலகில் மயக்கங்கள் பல விலகும் மனதைக் கட்ட. 500-பறவைகளின் சங்கீதம் குளிர்ந்த காற்று சூரிய பிம்பம் காலை விடியல்.501- குருவிபாட அணில் காகம் பக்கவாத்தியம் பால்கனி சபாவில் இலையாடும். 502-குற்றம் மறப்போம் மன்னிப்போம் சுயநலம் குறைந்து மகிழ்வோம் உதவி.503- உழைப்பு நேர்மை தாங்கும் இதயம் இவை மூன்றும் உயர்த்தும். 504-வழியில் வரும் களைகளைப் பிடுங்கி வள்ளுவர் வழியில் வாழ்.
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
485-வழுக்குப் பாறையில் வழுக்கி விழுந்தாலும் எழுச்சி கொண்டு எழுந்திரு.486- எண்ணம் நல்லதாக இருந்தால் நாம் எங்கு சென்றாலும் சிறப்பு. 487-அர்த்தம் உள்ள வாழ்க்கை பொதுநலம் அவதியான வாழ்க்கை சுயநலம்.488- வீட்டை தாங்குவது தூண் என்றால் மனிதனை தாங்குவது நட்பு.489- முட்புதரும் நடக்க நடக்க பாதையாகும் முயலும் செயலே வெற்றி. 490-தள்ளிப் போடும் நேரம் சேலை முள்ளில் பட்டுக் கிழிந்ததாகும்.
35-தேன் உண்ணும் முருகன் நீயே ! இனிக்கும் தமிழும் நீயே !வான் புகழும் முருகன் நீயே ! வழிகாட்டும் துணை நீயே !மான் மயில் காடு நீயே! மலர் செடியும் நீயே! நான் மாடக் கூடல் நீயே! நாழி கிணறும் நீயே!
479- செய்யும் தொழில் சுகம் ஆனால் செயல் வெற்றியை நோக்கி. 480-புத்தகம் சுவாசம் ஆனால் சொர்க்கம் பூமியில் வாழும் போதே.481-ஆற்றல் அறிவோம் அயராது உழைப்போம் வெற்றிக் கனியைப் பறிப்போம். 482-தயக்க மில்லா முயற்சி இருந்தால் தரணியில் உன்னை உயர்த்தும்.483- பணம் கொடுத்தால் பகை வரும் பார்த்து நடந்தால் நலம்.484- பேச்சு குறைவாக இருப்பின் செயல் வீச்சு அதிகமாக இருக்கும்.
34-திருநீர் அணிந்து இருப்பவன் நீயே! திரு உள்ளம் நீயே! கருவில் இருந்து காப்பவன் நீயே ! கருத்தில் நிற்பவன் நீயே !உருவில் பாலகனாய் இருப்பவன் நீயே! உதிரத்தில் ஓடுபவன் நீயே !தருவே தரணிபுகழ் முருகன் நீயே ! தடைகள் அகற்றுபவன் நீயே!
3-கர்ப்ப காலத்தில் சில சமாச்சாரங்கள் கர்ப்பமாக இருக்கும் பெண் தன் கணவனுடன் சந்தோஷமாக இருக்கலாமா? கூடாதா? என்று சந்தேகம் இருக்கும். இது குறித்து ஒவ்வொரு பெண்ணும் முழுமையாக தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சில பெண்களுக்கு கணவனை கண்டாலே பிடிக்காமல் போகும். அது மிகச் சிலரே! கர்ப்பம் உற்ற மூன்று, நான்கு மாதங்களுக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற உடல் பிணிகள் இருக்கும். அதனால், பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.மயக்கமாக இருக்கிறது, எழுந்தால் தலை சுற்றுகிறது.என படத்துக் கிடந்தால் சோம்பல் அதிகரிக்கும். எழுந்து நமது வேலைகளை செய்வதே கடினமாகத் தோன்றும். எழுந்து குளித்து விட்டீர்கள் என்றால் சோர்வு போய் சுறுசுறுப்பு உண்டாகும். உங்கள் வேலைகளை வழக்கமாக செய்யலாம். வாந்தி வருகிறது .என்று சாப்பிடாமல் இருந்து விடக்கூடாது. அதனால், உடல் சோர் அதிகரிக்கும். ஆரஞ்சு மிட்டாய், இழந்த மிட்டாய், இவற்றை வாயில் போட்டு சப்பி கொண்டே இருந்தால் வாந்தி வராமல்…
ஒன்பதாம் எண் ஆன்மீகத்தில் மிகச் சிறப்புடைய எண்ணாக பார்க்கப்படுகிறது. ஆன்மீகத்தைப் பொறுத்தவரை பல விஷயங்கள் ஒன்பது என்ற வகையில் அமைந்திருப்பதைப் பார்ப்போம். நவ பிரம்மாக்கள் 1-குமார பிரம்மன்2- அர்க்க பிரம்மன் 3-வீர பிரம்மன் 4-பால பிரம்மன் 5-சொர்க்கபிரம்மன்6- கருட பிரம்மன் 7-விஸ்வ பிரம்மன்8-பத்ம பிரம்மன்9- தராக பிரம்மன் முருகன் நவ வீரர்கள் 1-வீரபாகுதேவர் 2-வீரகேசரி 3-வீரமகேந்திரன் 4-வீரமகேசன் 5-வீரபுரந்திரன் 6-வீரராட்சசன் 7-வீரமார்த்தாண்டன்8-வீரராந்தகன்9-வீரதீரன் நவ தீர்த்தங்கள் 1-கங்கை 2-யமுனை3- சரஸ்வதி 4-கோதாவரி 5-சரயு 6-நர்மதை 7-காவிரி 8-பாலாறு 9-குமரி நவ பாஷாணம் 1வீரம் 2-பூரம் 3-ரசம் 4ஜாதிலிங்கம் 5-கண்டகம் 6-கவுரி பாஷாணம் 7-வெள்ளை பாஷாணம் 8-ம்ருதர்சிங் 9-சிலாசத் நவ பக்தி 1-சிரவணம் 2-கீர்த்தனம் 3-மரணம் 4-பாத சேவனம்5-அர்ச்சனம் 6-வந்தனம் 7-தாஸ்யம் 8-சக்கியம் 9-ஆத்ம நிவேதனம் நவ சிவ விரதங்கள் 1-சோமவாரம் 2-திருவாதிரை விரதம் 3-உமாமகேஸ்வர விரதம் 4-சிவராத்திரி விரதம் 5-பிரதோஷ விரதம் 6-கோதார விரதம் 7-ரிஷப விரதம் 8-கல்யாணசுந்தர விரதம் 9-சூல விரதம்…
இரட்டைகள் ஒன்பது 1-வணங்கத்தக்கவர்கள் தாயும், தந்தையும் 2-கடைந்தேர வழி பக்தியும், தியானமும் 3-வருவதும் போவதும் துன்பமும், இன்பமும் 4-அழிவைத் தருவது பொறாமையும், கோபமும் 5-போனால் வராதவை மானமும், உயிரும் 6-ஒருவன் கெடுவது செய்நன்றி, மறப்பது 7-வந்தால் போகாதது புகழும், பழியும் 8-அடக்க முடியாதவை ஆசையும், துக்கமும் 9-நம்முடன் வருபவை பாவமும், புண்ணியமும்
ஒன்பதாம் ஆண்டில் ஸ்ரீ ஐசுவர்யம்வணக்கம் நவ கோள்கள் ஒன்பது நவரத்தினம் ஒன்பது நவராத்திரி ஒன்பது நவக்கிரகம் ஒன்பது நவதானியம் ஒன்பது இப்படி சிறப்புமிக்க ஒன்ப தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் …. ஸ்ரீ ஐசுவர்யம் மாத இதழ் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆன்றோர், சான்றோர், கவிஞர், எழுத்தாளர், படிக்கும் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மன்றங்கள் வளர்ச்சியிலும் ,எழுத்தாளர் நூல்கள் விமர்சனம் தமிழ் பணியாற்றும் சான்றோர் அறிமுகம் ,ஆன்மீகம், கதைகள், கவிதைகள், விமர்சனக் கடிதங்கள், தன்னம்பிக்கை கட்டுரை, என பண்முக இதழாக தமிழ் பணியாற்றி வந்த… ஸ்ரீ ஐசுவரியம் சிறுவர் படம் அட்டை தாங்கி நான்கு ஆண்டுகள் புத்தகமாகவும், பின் இணையதளத்திலும் தனது இதழ் பணியை செய்து விருதுகளும், பாராட்டையும் பெற்ற ஸ்ரீ ஐசுவர்யம் பல சோதனைகளை கடந்த பின்பு ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.ஸ்ரீ ஐசுவர்யம் தொடர்ந்து தமது தமிழ் பணி…
467-உழைப்பு முயற்சியை முன்னே வை உயர்வு வந்து படியாகும்.468-இலட்சியப் பயணத்தில் சிறகுகள் விரியும் இலக்கியமாக சிந்தனையை மாற்று. 469-பிறர் வாழ வழிகாட்டும் போது தான் வாழ தடம்.470- உழைப்பு விதையை உரமிட்டு வளர்க்க கனியாய் வரும் வெற்றி. 471-திறந்த வானமாய் மனம் இருந்தால் திறக்கும் கருவூலம் மனம்.472- படிப்பின் பயன் அறிவு வளரும் பணம் கவலை தரும்.